சூரிச் கலைக்கூடத்தில் (Zurich Kunsthaus)இன்னொரு கலைக்காட்சி இது!
வால்ரர் டி மரியா (Walter De Maria) என்ற அமெரிக்க சிற்பக் கலைஞரின் நிலச் சிற்பம் (Land Sculpture) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2000 எண்ணிக்கைகள் கொண்ட (5, 7 அல்லது 9 பக்க) பன்முக Gips உருளைகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உருளையும் 50 செ.மீ நீளம், 11.8 இலிருந்து 12 செ.மீ உயரம்.
மிகத் துல்லியமான அளவு முறைகளில் அவை 500 சதுர மீற்றர் நிலப்பரப்பில் அடுக்கப்பட்டிருக்கின்றன. அவை ஒரு கணிதவியல் ஒழுங்கில் அடுக்கப்பட்டுள்ளன
rhythm : 5-7-9-7-5-5-7-9-7-5.
நீள்வரிசையாக 20 வரிசைகள்.
ஒவ்வொரு வரிசையிலும் 100 உருளைகள்.
கூரைப்பகுதி இயற்கை வெளிச்சத்தை உட்புக விடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. வெயிலின் போது, மந்தாரமாக இருக்கும்போது, பனி கொட்டும்போது அல்லது நிலவொளியின் போது உட்புகுகிற ஒளியின் தன்மைக்கு ஏற்ப இந்த நில சிற்ப கலை வேலைப்பாட்டுக்கு வெவ்வேறு ஒளிப் பரிமாணம் கிடைக்கிறது.
இதை சுற்றி நடந்து வருகிறபோது ஒவ்வொரு கோணங்களிலும் -ஒழுங்குச் சங்கிலி அமைப்பாக- வெவ்வேறு பரிமாணமான உருவமைப்புகள் தோற்றமளிக்கின்றன.
Walter De Maria (1935-2013) was a Minimalist.






- 17012022
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/6982672828470418