The 2000 Sculpture

சூரிச் கலைக்கூடத்தில் (Zurich Kunsthaus)இன்னொரு கலைக்காட்சி இது!

வால்ரர் டி மரியா (Walter De Maria) என்ற அமெரிக்க சிற்பக் கலைஞரின் நிலச் சிற்பம் (Land Sculpture) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2000 எண்ணிக்கைகள் கொண்ட (5, 7 அல்லது 9 பக்க) பன்முக Gips உருளைகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உருளையும் 50 செ.மீ நீளம், 11.8 இலிருந்து 12 செ.மீ உயரம்.

Continue reading “The 2000 Sculpture”

சோஃபியின் உலகம்

  • நூல் மீதான வாசிப்பு

01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.

sophies world

சோபியின் உலகம்.

நோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்கிறது.

Continue reading “சோஃபியின் உலகம்”

சும்மா காலமும் பட்டையடியும்

obama daughter-shasha

ஓபாமாவின் மகள் Sasha (16) படிப்பில் ஈடுபடும் அதேநேரத்தில் கடலுணவு விடுதியொன்றில் பகுதிநேர வேலைசெய்வதை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் (இலங்கையர், இந்தியர்) பகிர்ந்துள்ளனர். நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த விடயத்தை இது நினைவுபடுத்தியுள்ளது.

Continue reading “சும்மா காலமும் பட்டையடியும்”

a Gun and a Ring

தவறவிடக்கூடாத படம்

gunring-2

a Gun and a Ring படத்தை முதன்முறையாக நேற்று ஐபிசி தொலைக்காட்சியில் இப்போதான் பார்த்தேன். கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரான லெனின் எம் சிவம் அவர்களால் எடுக்கப்பட்டிருக்கிற படம். புகலிட சினிமாக்களையும் பிடித்து ஆட்டும் இந்தியச் சினிமா பாணியை உதறித்தள்ளிவிட்டு தனித்துவமாக வெளிப்பட்டிருக்கிற படம். புகலிட சினிமாவின் எதிர்காலம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிற படம்.

கதாநாயக விம்பங்களின்றி மனிதர்களை அவரவர் நிலையில் வைத்து கதைகொள்கிறது படம். வன்முறையின் உளவியல், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அதைப் பிரயோகித்தவர்கள் ஆகியோரின் மனநிலை, அது கிளறப்படுதல், அது தன்னை உக்கிரமாகவோ மென்மையாகவோ வெளிப்படுத்தல் என படம் நகர்கிறது.

Continue reading “a Gun and a Ring”

ஓநாய் குலச்சின்னம்

– வாசனைக் குறிப்பு

wolf-book-pic           wolf_book-writer  Jiang Rong

 

சீன எழுத்தாளரான ஜியாங் ரோங் 2004 இல் வெளியிட்ட நாவலை தமிழில் சி.மோகன் அவர்கள் 2012 இல் «ஓநாய் குலச்சின்னம்» என மொழிபெயர்த்திருக்கிறார். நண்பர் சுரேசின் மூலமாக இந் நாவலை வாசிக்கிற ஆர்வம் மேலிட்டது. எமது அடுத்த «வாசிப்பும் உரையாடலும்» நிகழ்ச்சியில் (13.10.2016) இந் நாவல் குறித்தான உரையாடலை மேற்கொள்ள இருக்கிறோம்.

ஓநாய்கள் பற்றி நமக்கு தரப்பட்டுள்ள அறிவு தவறானது என்பதை இந் நாவலை படிக்கிறபோது உணர்ந்தேன். அதன் உண்மைத்தன்மையைத் தேடியபோது ஓநாய்களுடன் ஏழு வருடங்கள் காட்டில் வாழ்ந்து கழித்த அமெரிக்கத் தம்பதிகளின் (Jim and Jamie Dutcher) ஆவணப்படத்தை காண நேர்ந்தது.https://www.youtube.com/watch?v=d36MK94POaI.  (The hidden life of Wolves என்ற தலைப்பில் அவர்கள் நூலொன்றை எழுதியுள்ளனர்)

Continue reading “ஓநாய் குலச்சின்னம்”

The bravest Woman Malalai Joya

ஒரு நேர்காணல்.

இவ் வருடம் மார்ச் மாதம் டென்மார்க் நாட்டுக்கு மலாலாய் ஜோயா வந்திருந்தார். 28 ஆடி 2016 இல் டெனிஸ் சஞ்சிகையான Gaia and Opinionen இற்காக டென்மார்க்கில் கல்விகற்கும் பல்கலைக்கழக மாணவனான Masih Sadat என்பவரால் எடுக்கப்பட்ட பேட்டியின் தமிழாக்கம் இது.
தமிழில் : ரவி

malalai joya

ஆப்கானின் “துணிகரமான பெண்மணி” என வர்ணிக்கப்படுபவர் மலாலாய் ஜோயா. 2005 இல் ஆப்கானின் -மேற்குலக செற்றப்புடன் அமைக்கப்பட்ட- பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மக்களால் பாராளுமன்ற உறுப்பினராக இளம்வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு துணிகரமான செயற்பாட்டாளர். அவர் அமெரிக்கா உட்பட மேற்குலகின் மீது கறாரான விமர்சனங்களை பொதுவெளியில் வைப்பவராக தொடர்ந்து இயங்குகிறார். அதனால் அவர் நோபல் பரிசுக்கு ‘உரியவரல்ல’. மேற்குலகால் விளம்பரப்படுத்தப்பட்ட Malala Yousafzai  அவர்களைத் தேடி வந்ததுது போல மலாலாய் ஜோயாவை நோபல் பரிசு (இப்போதைக்கு) தேடி வராது. சமூக அரசியல் தளத்தில் செயற்படும் மலாலாய் ஜோயா Raising my voice என்ற நூலையும் எழுதியிருக்கிறார். 2010 இல் ரைம் சஞ்சிகை வெளியிட்ட உலகில் தாக்கத்தைச் செலுத்திய நூறு பேரின் வரிசையில் மலாலாய் ஜோய் உம் இடம்பெற்றுள்ளார்.

Continue reading “The bravest Woman Malalai Joya”