மந்திகை என்றால் பலருக்கும் “விசர் ஆஸ்பத்திரி” என்றவாறுதான் முதலில் கிளிக் பண்ணும். நமட்டாய் சிரிப்பும் வரும். அப்போதெல்லாம் நான் ஒரு பதில் வைத்திருந்தேன். கார் உள்ள இடத்தில்தான் கராஜ் இருக்கும்.. மூளை உள்ள இடத்தில்தான் அதுக்கான ஆஸ்பத்திரி இருக்கும் என.
உண்மையில் அது “விசர் ஆஸ்பத்திரி“ அல்ல. பொது மருத்துவமனை. பைத்தியத்தை குணமாக்கும் முயற்சியில் தனது அறிவெல்லைக்குள் செயற்பட்ட பகுதியையும் உள்ளடக்கிய மருத்துவமனை. குழந்தைப் பேறு மருத்துவமனையும்கூட. அதன் சேவை குறைபாடுகளையும் கடந்து எப்போதுமே உயர்ந்துதான் நிற்கும். அதிலும் மனநோய்க்கான வைத்தியர்களின் சேவை எப்போதும் அர்ப்பணிப்பு நிறைந்ததாகவே எனது காலத்தில் நினைவுகூர்கிறேன்.