அந்தரம்

நாவல் அறிமுகம்

இந் நூலின் ஆசிரியர் தொ.பத்திநாதன் 1990 இல் போர்க் கெடுபிடி காரணமாக தனது பதினாறு வயதில் படிப்பையும் விட்டு தமிழகத்துக்கு அகதியாக போய்ச் சேர்ந்தார். மண்டபம் அகதி முகாமில் தொடங்கி பின் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி முகாமில் அகதி வாழ்க்கையை தொடர்ந்தார். 29 ஆண்டுகளின் பின் இலங்கையில் தனது பிறந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். அந்த கதைசொல்லலோடு தொடங்கிய அந்தரம் பின் அகதிகள் முகாமினுள் புகுந்துகொள்கிறது. அந்தரம் நாவல் அவரது நான்காவது நூல்.

Continue reading “அந்தரம்”

எங்கே போய் முடியப்போகிறது

ஜோன் மெயர்ஷைமர் அமெரிக்காவின் ஒரு அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும் சர்வதேச உறவுகளுக்கான நிபுணரும், சிக்காக்கோ பல்கலைக் கழக பேராசிரியரும் ஆவர். அரசியல் சிந்தனையில் தாக்கம் செலுத்துகிற சிந்தனையாளர்களில் இவர் முக்கியமானவர். உக்ரைன் ரசிய பிரச்சினை குறித்து அவர் 2008 இலிருந்தே பேசிவருகிறார். அவர் உட்பட சுவிஸ் வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் போன்ற சிந்தனையாளர்கள் பலரும் உக்ரைன்-ரசிய யுத்தம் ஓராண்டு என்பதை மறுக்கிறார்கள். 2014 இலிருந்து அது தொடங்கிவிட்டதாகவும் அது ஒன்பதாவது ஆண்டில் காலடி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்

Continue reading “எங்கே போய் முடியப்போகிறது”

தெரியாமல் போய்ச்சு!

நெடுமாறனின் பிரபாகரன் கதை

  1. இப்போ 2023. இடையில் 14 ஆண்டுகள். தலைவருக்கு இப்போ நரைவிழுந்திருக்கிறது. தாடி வளர்ந்திருக்கிறது. விடுதலைத் தீயை அவர் ஏந்தியிருக்கிறார். வெளியுலகிலிருந்து துண்டித்த கூட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வருகிறார். சரியான தருணம். அதென்ன சரியான தருணம் என நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். தலைவர் வருவார். திட்டத்தை அறிவிப்பார். தமிழீழம் கிடைக்கும். தமிழீழப் படம். இயக்குநர் யார் என்பதும் நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். ஊடகங்களெல்லாம் அரைச்சு அரைச்சு தீவனமாக எமக்கு வழங்குகிறது. நாம் எவளவு பெரிய முட்டாள்கள் என நெடுமாறன், காசி கோஸ்டியும் ஊடகங்களும் நினைத்திருக்கலாம். இருக்கட்டும்.
Continue reading “தெரியாமல் போய்ச்சு!”

புதியதோர் உலகம்

– உள்ளும் புறமும்

புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 இல் தீப்பொறி குழுவினரால் வெளியிடப்பட்டது. பின்னர் இந் நூலை பிரதிகள் செய்து, தானே அதை நூலாகக் கட்டி தோழர் சபாலிங்கம் பாரிஸ் இல் விநியோகித்தார். இதன் இரண்டாவது பதிப்பு 1997 இல் வெளிவந்தது. இதை தீப்பொறிக் குழுத் தோழர்கள் விடியல் பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருந்தார்கள். (புத்தக வடிவமைப்பை நான் செய்திருந்தேன்). இப்போ மூன்றாவது பதிப்பாக தமிழகத்தின் சிந்தன் புக்ஸ் 2023 இல் வெளியிடுகிறது. 37 வருட காலத்தின் பின்னும் இந்த நூல் மறுபதிப்பாக வருவது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இலக்கியத் தளம் என்பதைவிட அரசியல் தளத்தில் அதன் பேசு பொருள் இப்போதும் பொருந்துவனவாக இருப்பதே அதற்குக் காரணம்.

Continue reading “புதியதோர் உலகம்”

Vertical Forest

கட்டடக்கலை ஒரு அற்புதமான கலை. பின்நவீனத்துவம் தோன்றிய களமும் அதுதான். இப்போ கட்டடக் கலையில் புதிய சகாப்தமொன்றை Vertical Forest (செங்குத்துக் காடு) நிறுவியிருக்கிறது. செங்குத்து காடு என்றால் என்ன. அதன் கருத்தாக்கம் (concept) என்ன.

Continue reading “Vertical Forest”

பிசாசு

மேற்குலக “புலம்பெயர் தமிழர்கள் வசதியான வாழ்வை வாழ்ந்து கொண்டு…” என ஒரு ஆயுதத்தை புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு அல்லது நெருக்குதலுக்கு சாமான்ய மனிதஜீவியிலிருந்து, (ஒரு பகுதி) புத்திஜீவிகள் வரை தமக்குள் கைமாற்றிக் கொள்கிறார்கள். இதுபற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. இது உண்மையா மாயையா, இதன் அடிப்படை காரணம் என்ன என்பதே அந்த யோசனை.

Continue reading “பிசாசு”

அஞ்சலி !

“o jogo bonito” -PELE

20ம் நூற்றாண்டின் ஒரு மாபெரும் கால்பந்து வீரன் பெலே தனது 82 வயதில் 29.12.2022 காலமாகியிருக்கிறார்.

தனது 21 வருட கால்பந்து வாழ்வில் 1367 உத்தியோகபூர்வ போட்டிகளில் மொத்தம் 1283 தடவை இலக்குகளை (goals) வென்றவன் அவன். இதில் பிரேசில் தேசிய அணிக்கு அவன் பெற்றுக் கொடுத்த 77 இலக்குகள் அடக்கம்.

Continue reading “அஞ்சலி !”

பார்ஹா (Farha)

ஜோர்தான் திரைப்படம்

இஸ்ரேல் நாடு (1947-1949) உருவாக்கத்தின்போது, 1948 இல் இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனம் மீது நிகழ்த்திய பெரும் இனச்சுத்திகரிப்பும் படுகொலைகளுமான சம்பவம் நக்பா (nakba) என -அரேபிய மொழியில்- அழைக்கப்படும். பல கிராமங்களையும் நகரங்களையும் இனச்சுத்திகரிப்புச் செய்து இஸ்ரேல் அப் பிரதேசங்களை தன்வசமாக்கியது. இவ் வரலாற்றுக் கொடுமையின்போது ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட பலஸ்தீன மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்தவர்கள் குழந்தைகளிலிருந்து முதியவர் வரை படுகொலை செய்யப்பட்டனர். இக் காலகட்டத்தின் ஓர் இரத்தத் துளியாக “பார்ஹா” திரைப்படம் திரையில் வருகிறது.

Continue reading “பார்ஹா (Farha)”

Through The Fire Zones

காலத்தைக் கைப்பற்றிய நூல் !


வன்னிப் போர்க்களத்தை குறுக்கறுத்து அதன் அவலத்தை முன்வைக்கிற நூல் இது. புகைப்பட ஊடகவியலாளர் அமரதாஸ் இன் 400 பக்கங்களைக் கொண்ட இந் நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிற இந் நிழற்படங்கள் கறுப்பு வெள்ளை என சொல்லப்படுகிற சாம்பல்நிற (grey) வடிவில் உள்ளன. A4 தாள் அளவீட்டில் வந்திருக்கிறது. இது ஒரு வரலாற்று ஆவணமாக பார்க்கப்படக் கூடியது. புலிகளின் நிழல் அரசு கட்டியமைக்கப்பட்டிருந்த வன்னி பிரதேசத்துள் ஒரு சுயாதீன புகைப்பட ஊடகவியலாளராக அமரதாஸ் இருக்க முடிந்தது ஒரு அதிர்ஷ்டம்தான்.

Continue reading “Through The Fire Zones”

தோட்டமும் காடும்

” ஐரோப்பா ஒரு தோட்டம். மற்றவையெல்லாம் காடுகள்”

ஐரோப்பிய ஆணையத்தின் உபதலைவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கான கொள்கை வகுப்பாளர்களின் உயர் அதிகாரியுமான யோசப் போர்ரல் அவர்கள் இவ்வாறு செப்பியிருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்.

“ஐரோப்பா என்ற தோட்டத்தை நாம் நிர்மாணித்திருக்கிறோம். எல்லாமே சரியாக தொழிற்பாட்டில் உள்ளது. அரசியல் சுதந்திரம், பொருளாதாரச் செழிப்பு, சமூக ஒருமைப்பாடு என்ற மூன்றும் இணைந்ததாக அது செயற்படுகிறது. இவ்வாறான அற்புதமான செழிப்பான சுதந்திரமான ஐரோப்பா இந்த உலகில் விதிவிலக்கானது.

Continue reading “தோட்டமும் காடும்”