Archive for January 2018
அஞ்சலி !
Posted January 22, 2018
on:- In: நினைவு | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment

தமிழ் சிங்கள மொழிகளிலான ஈழத்து பொப் இசையின் எழுச்சி இளைஞர்களின் உளவியல் தளத்தினை மேடையாக்கியதில் வெற்றிகண்டது. எமது சமூகத்தின் -குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின்- கட்டுப்பெட்டித்தனமான வாழ்க்கை முறைகளால் துள்ளலான மனவியல்புகள் அடக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக இளமையின் துடிதுடிப்புக்கும் வெளிப்படுத்தலுக்கும் எதிராக அது இருந்தது / இருக்கிறது. இந்த அமுக்கப்பட்ட துடிப்பான மனவியல்பை ஊடுருவி வெளிக்கொணர்ந்ததில் ஈழத்து பொப் இசைக்கு மறுக்கமுடியாத வரலாற்றுப் பாத்திரம் உண்டு.
மாற்றுத்திறனாளிகள்
Posted January 21, 2018
on:சொற்கள் நேரடி அர்த்தத்தை மட்டும் தருபனவல்ல. அது (வேண்டுமென்றே) சொல்லப்படாத அல்லது தவிர்த்துவிடுகிற அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். சிலவேளைகளில் இந்த அர்த்தம் நேரடி அர்த்தத்தைக்கூட மறுதலிப்பதாக இருக்கவும் செய்யும்.
மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லாடல் எதிர்மறையில் “அவர்கள் உடல் அல்லது உள ரீதியில் இயலாமையுடைவர்கள். அவர்களிடம் மிகுதியான மனித இயல்புகள் திறமைகள் கனவுகள் இருக்கின்றன என்ற பொருளைக்கூடச் சுட்டவில்லை.
குயிலின் கானத்தை கேட்க முடியாது !
Posted January 2, 2018
on:தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், புதியபாதை ஆசிரியருமான தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) புலிகளின் தலைவர் பிரபாகரனால் கொலைசெய்யப்பட்ட தினம் இன்று. தனது 36 வது வயதில், அவன் சித்ரா பதிப்பகத்தின் வாசலில் வைத்து மௌனமாக்கப்பட்டான். புதியபாதை பத்திரிகை அலுவலாக அச்சகத்தின் முன்புறம் அமர்ந்திருந்து வேலைசெய்துகொண்டிருந்த சுந்தரத்தை புலிகள் மறைந்திருந்து சுட்டுக் கொன்றனர்.