Archive for April 2013
புகலிட அரசியலின் முளைப்பு
Posted April 7, 2013
on:இலண்டனில் நடந்துகொண்டிருக்கும் 40வது இலக்கியச் சந்திப்பில் சாத்திரி அவர்கள் புகலிட அரசியல் போக்கு என்பது பற்றி பேசினார். ஆரம்பத்தில் ஒரு கட்டத்தில் அரசியலற்ற சமூகமாக இது இருந்தது எனவும் 90 களின் ஆரம்பத்தில்தான் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்ததாகவும். அது சுயநலத்தின் அடிப்படையில், தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் இருந்திருக்கலாம் என்ற கருத்துப்பட கூறியிருந்தார். புலிகள் இயக்கம்தான் -சரியோ தவறோ- புலம்பெயர் தமிழ் மக்கள் அரசியல்மயப்பட காரணமாக இருந்து, அது தமிழர் என்ற அடையாளம் தேடும் அரசியல் என்பதாகவும் குறிப்பிட்டதாக (காணொளி மூலம்) நான் விளங்கிக் கொண்டேன்.
இலக்கியச் சந்திப்பு பற்றிய வியாக்கியானங்கள் அவரவர் மொழியில் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் பொசிற்றிவ் அம்சங்களை மறுதலிக்க முடியாதது ஒருபுறம் இருக்க, அதன் வேலைமுறைகள் பற்றி கேள்விகள் இருக்கின்றன. உரையாடல் என்று வருகிறபோதுகூட இந்த 24 வருட காலப் பகுதியில் நாம் எவ்வாறான சனநாயகப்பட்ட முறையில், தொனியில், உடல்மொழியில் விவாதிக்கப் பழகியிருக்கிறோம். முரண்பாடுகளை கையாளப் பழகியிருக்கிறோம்.
சூரிச் இல் செங்கடல் ஓசை
Posted April 1, 2013
on:- In: சினிமா | பதிவு | விமர்சனம்
- Leave a Comment
ஈழத் தமிழ் மக்களின் போராட்டங்கள் நந்திக் கடலில் கரைக்கப்பட்டது. அலைகள் தம் கதைகளை தமிழகத்துக்கு மூச்சிரைத்தபடி எடுத்துவருகிறதோ என்னவோ, தமிழர் என்ற அடையாளத்தின்மீது மோதியழிகிறது. தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் அலைமோதுகிற நாட்கள் இவை. வாழ்வுக்கான போராட்டம் என்பதற்கு இறப்பு இருக்காது, அது வௌ;வேறு வழியில் தொடர் வடிவங்களை எடுக்கும் என்பதன் சான்றாக இந்தப் போhராட்டங்கள் – அதன் சரிகள் தவறுகளுக்கு அப்பால்- சாட்சியாக இருக்கிறது. இன்னொரு கோடியில் „செங்கடல்“ திரைப்படம் தனுஷ்கோடியில் நின்று கடல் அலைகளுடன் பேசுகிறது.