Archive for May 2019
அது அழியா!
Posted May 20, 2019
on:- In: நினைவு | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
பத்து வருடங்களுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் ‘உலகம் முடிகிற இடமாக அமைந்து’ காவுகொண்ட உயிர்களை நினைவுகூர்கிறேன். அது ஓர் இனப்படுகொலை என (என்போல்) வரைபுசெய்பவர்களோ, கூட்டுப் படுகொலை என வரைபுசெய்பவர்களோ எவர்களாகிலும் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்வதில் ஒரே புள்ளியில்தான் நிற்க முடியும்.
துயரம்
Posted May 2, 2019
on:இலங்கைப் பேரினவாத அரசு சிறுபான்மை இனங்களை பிரித்து வைத்து ஆடும் சதுரங்கத்தில் இன்று பலரும் அகப்பட்டிருக்கிறோம். போர் சப்பித் துப்பிய முன்னாள் போராளிகளை அழைத்து இராணுவம் சந்திப்புகளை நடத்துகிறது. இணைந்து வேலைசெய்ய அழைப்பு விடுத்ததாக செய்தி வருகிறது. இவளவு பெருந்தொகையான இராணுவத்தை வைத்துக்கொண்டு, 30 வருட போரை சந்தித்ததின் மூலம் மரபுப்படையணியாக இருந்த இராணுவம் கெரில்லாமுறை உத்திகளோடு அதை களத்திலேயே புலிகளோடு களமாடி கற்றுக்கொண்டது. இவ்வாறான திறமை வாய்ந்தததாக இருந்துகொண்டு ஏன் முன்னாள் போராளிகளை அழைக்கிறார்கள்.