நிம்மதி கிடைக்குமா?

image:VictorStock

அமெரிக்காவின் இன்னொரு தவறான கணிப்பு ஈரான் மீதான போரை முன்னெடுத்திருப்பது ஆகும். ஏற்கனவே ஜேர்மன் எல்லையிலிருந்து ஒரு அங்குலம்கூட நேட்டோ நகராது என 1990 இல் கோர்பச்சேவுக்கு உறுதியளித்துவிட்டு, ரசிய எல்லைவரை நேட்டோவை நகர்த்தினார்கள். பிறகு ரசியாவால் ஐரோப்பாவுக்கு “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என கதையாடலை உருவாக்கினார்கள். ஆனால் அதன் உள்நோக்கம் ரசியாவை பலவீனப்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரல் ஆகும். இதை பின்னாளில் வெளிப்படையாகவே பொதுவெளியில் ஐரோப்பிய தலைவர்கள் பேசும் நிலைக்கு வந்தார்கள். இந்த நோக்கத்தை ஏதோ மாதக் கணக்கினுள் செய்து முடித்துவிடலாம் என நேட்டோ உக்ரைனை வைத்து திரைமறைவில் களமடியது. ஆனால் ரசியா நீண்டகாலப் போருக்கு தயார் பண்ணிவிட்டே இறங்கியது. அதன் விளைவாக உக்ரைன்-ரசியா போர் தொடர்கிறது.

Continue reading “நிம்மதி கிடைக்குமா?”

வெட்ட வெட்ட தழைத்தல் !

அமெரிக்காவும் இஸ்ரேலும் கனவு கண்டதைப்போல ஈரான் அரசாங்கத்தை விரைவாக கவிழ்த்து தமக்கு சார்பான அடிவருடி -ஷா இன் புத்திரனான- றேசா பாலவியை ஆட்சிக்குக் கொண்டுவர முடியவில்லை. தலைவர்களைக் கொல்வதன் மூலம் அல்லது உள்நாட்டு மக்களின் அரசுக்கு எதிரான நியாயமான போராட்டங்களினுள் புகுந்து மடைமாற்றி அல்லது அதை செயற்கையாக உருவாக்கி ஆட்சியைக் கவிழ்த்த அமெரிக்க நரித்தன வரலாறு ஈரானிடம் வந்து முட்டி மோதி நிற்கிறது. அதற்கான காரணங்களில் மிக முக்கியமானது, ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புத்தான். உச்சத் தலைவரை மட்டுமல்ல இராணுவத் தளபதிகள் ஆலோசகர்கள் என சுமார் 50 பேருக்கு மேல் இதுவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் கொலைசெய்தபோதும் ஈரான் அரசை சரிக்க முடியவில்லை.

Continue reading “வெட்ட வெட்ட தழைத்தல் !”

அந்தோனி -திரைப்படம்

ஓர் இரசனைக் குறிப்பு

வழமையான தமிழ்த் திரைப்படங்கள் போல வெட்டுக் குத்தாக இருக்குமோ என்ற எண்ணம் “அந்தோனி” திரைப் படத்தைப் பார்க்கப் போகும்போது மனதில் எழாமலில்லை. அந்த எண்ணத்தை அந்தோனி தரைமட்டமாக்கியது. அசையா நிலையிலான தரைகளிலேயே வாழும் எம் போன்ற மனிதர்க்கு அசையும் நிலையிலான கடல் வாழ்வு அனுபவம் நாளாந்த வாழ்வாகக் கிடைப்பதில்லை. ஒரு சிறிய தீவான இலங்கையின் நான்கு கரையும் இருக்கும் கடல்வாழ்வைக் கொண்ட மனிதர்கள் பலர் இருப்பார்கள். அவர்களது அனுபவமும் கடல் போன்றதே. கடல் இயற்கையை அவர்கள் நேசிக்கிற விதம் அவர்களது வாழ்வாதாரத்தோடும் வாழ்வோடும் உணர்வுகளோடும் இழையாகப் பின்னிக் கிடக்கிறது என்பதை அதுசார்ந்த திரைப்படங்களைப் பார்க்கிறபோது உணர வைக்கும்.

Continue reading “அந்தோனி -திரைப்படம்”

வெட்கம்!

16 வயதான அல்லைப்பிட்டி சிறுவன் சென்ற மாதம் பொலிசாரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டான். அந்தச் சிறுவன் ஊடகங்களாலும் தனிமனிதர்களாலும் கள்ளன், ஒழுக்கமற்றவன், படிக்காதவன்… அது இது என செய்யப்படும் அவதூறுகள் ஒரு மனித உயிரியின் உயிரைப் பறிக்க நியாயம் வழங்குவதானது ஒரு சிந்தனைக் கொடுமை. அவன் அப்படி இருந்தானா இல்லையா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. அது கதையாடலாகக்கூட இருக்கலாம். சட்டத்தை மீறினானா என்பதை தீர்மானிக்க நீதிமன்றம் என்ற அமைப்புமுறை இருக்கிறது. சரியாகவோ பிழையாகவோ அமையும் தீர்ப்புகளை அது கொண்டிருக்கலாம் என்றபோதும், இந்த அமைப்புமுறையை நிராகரிக்க முடியாது. ஆனால் தீர்ப்புச் சொல்ல அல்லது தண்டனை வழங்க எந்த மக்களுக்கும் உரிமை கிடையாது.

Continue reading “வெட்கம்!”

ஆமென்!

மத்திய கிழக்கு போர்க் குறிப்பு

கேள்வி கேட்கப்பட முடியாதவர்களை யாராவது துணிந்து கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பெறுமதி உண்டு. அது ஏற்படுத்துகிற மகிழ்ச்சி என்ற ஒன்று உண்டு. இவை அடிமையாக வாழ மறுக்கிற, அடங்க மறுக்கிற மனித உணர்வுகளிலிருந்து எழுபவை. ஈரான் தன் மீதான பாதிப்பையும் பொருட்படுத்தாமல் இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் பதிலடி என்பது இவற்றின் குறியீடுகளாக இருக்கின்றன. மேற்குலகு உருவாக்கி கட்டமைத்திருக்கிற இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையிலும், ஜனநாயகத்தை பண்பாக வலியுறுத்துவதற்கும் மேலால் அதை வெறும் கட்டமைப்பாக மட்டும் வைத்து புரிந்துகொள்கிற மனநிலையிலும் நின்று இப்போரை அல்லது முரண்களின் மோதலை புரிந்துகொள்ள முடியாது. கொலோகாஸ் யூதப் படுகொலையிலிருந்து எப்ஸ்ரைன் வக்கிரமாளிகைக்குள் நடத்தப்பட்டது வரையான கொடூரமான செயல்களெல்லாம் மேற்குலக ஜனநாயகத்தின் பண்பை தோலுரித்துக் காட்டுபவை.

Continue reading “ஆமென்!”