Archive for September 2019
ஒரு கலைஞனும் நாங்களும்
Posted September 29, 2019
on:- In: உரை | டயரி | பதிவு
- Leave a Comment
பண்பாட்டுச் சுவைப்பதக் கூறுகளின் பகிர்வு
தமிழ் திரைப்பட நடிகர், நாடக இயக்குனர் மற்றும் மதுரை நிகழ் நாடக மைய இயக்குனர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சண்முகராஜா அவர்களின் சுவிஸ் வருகையின் ஒரு அங்கமாக Kulturzentrum, Thalwil அமைப்பும் சுவிஸ்- இந்திய கலாச்சாரத் திட்டம் (SICP)அமைப்பும் ஒரு கலாச்சாரச் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தது.
இனி.. ?
Posted September 14, 2019
on:VDO
https://www.srf.ch/play/tv/popupvideoplayer?id=e3911c84-38a2-42e7-b456-d9c31f4de65d
இந்த கடவுளின் தூதனுக்கு (Pastor) வயது 62. தமிழன். பெயர் வில்லியம்ஸ். தமிழுலகை உய்விக்க அவன் GGMCI என்ற Tamil Evangelical Church இனை Bern (swiss) இல் ஆரம்பித்து தனது சேவையைத் தொடங்குகிறான். அடங்காத சேவை மனசு அவனுக்கு. தனது கிளைகளை யேர்மனி, பிரான்ஸ், கொலன்ட், நோர்வே போன்ற நாடுகளிலும் படரவிட்டு அருளொளிச் சோதியை பாவப்பட்ட அகதித் தமிழருக்காக பரவவிடுகிறான். இந்த ஐந்து நாடுகளிலும் 25 தேவாலயங்களை ஆண்டவன் அவனிடம் ஒப்படைக்கிறான். இளம் பெண்கள் உட்பட பல தமிழ் மாந்தர்கள் தேவதூதனிடம் தம்மை ஒப்புக் கொடுக்க திரள்கின்றனர்.
என்ன செய்வது !
Posted September 12, 2019
on:அண்மையில் எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை சட்டென அடையாளம் கண்டுவிட்டார், நம்மட தலையில் மயிர் போனபின்னும்!. எனக்கு அவரை தெரியவில்லை. “உங்களை நான் 28 வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். என்னைத் தெரியுதா” என கேட்டார். “தெரியவில்லை” என்றேன். “ஞாபகமிருக்கா, உங்கள் நண்பர் எக்ஸ் (புனைபெயர்) இன் கல்யாணவீட்டில் பிரச்சினை எழும்பினது. தாலி கட்டாமல், ஐயர் இல்லாமல் செய்த கல்யாணம். பரிசுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று அறிவித்து நடந்த கல்யாணம். பிரச்சினைப்பட்டது நாங்கதான். உங்கட நண்பர் என்ரை உறவினர்” என்றார்.
இப்ப தெரியுது என்றேன். தமிழ்க் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவருக்கு அந்த சம்பவம் நேற்றுப்போல இருந்திருக்கலாம். நமக்கெல்லாம் கடந்து சென்றுவிட்ட சம்பவங்கள் அவை. “நான் செய்தது சரியானது” என்று வேறு இப்பவும் அவர் ஒப்ப, நான் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தேன்.
வெண்ணிறக் கோட்டை
Posted September 8, 2019
on:- In: அறிமுகம் | இதழியல்
- Leave a Comment
– ஓர் அலைக்கழிப்பு
(ஓரான் பாமுக்கின் “வெண்ணிறக் கோட்டை” என்ற நாவல் வாசிப்பும் உரையாடலும்-23 இல் 01.09.19 அன்று உரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நாவல் குறித்து பல்வேறு பரிமாணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் நான் முன்வைத்த கருத்துகளின் விரிவு இப் பதிவு)
ஓரான் பாமுக் இன் ஆரம்பகால நாவல்களில் ஒன்று வெண்ணிறக் கோட்டை. ஓட்டோநாம் துருக்கிய சாம்ராஜ்யம் 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவிய பெரும் சாம்ராஜ்யம் 15ம் நூற்றாண்டிலும் பின்னர் 16ம் நூற்றாண்டிலும் அது வெனீஸ் மீது போர் புரிந்தது. இந்த இரண்டாவது காலகட்டத்தில் தொடங்கி, போலந்தின் வெண்ணிறக் கோட்டையை கைப்பற்ற நடந்த போர்வரையான காலப் பகுதியுள் வைத்து புனையப்பட்ட நாவல் இது.