இரத்தசாட்சி

சகோதரியே
நீ
வெடிகுண்டை உன் உடலின்
பாகமாக்கிய கணத்திலேயே
இந்த மண்ணிலிருந்து உனது வேர்கள்
அறுக்கப்பட்டுக் கொண்டிருந்ததை
உணர்ந்திருப்பாய்.
மனித அறிதலுக்கு உட்படாத உன்
உணர்வுகளை நீ
யுகங்களை விழுங்கி அவஸ்தைப்பட்டதை
புயலின் முன்னரான மேகக்கூட்டங்கள்
பேயோட்டமாய் காவிச்சென்றதடி.

Continue reading “இரத்தசாட்சி”