யொஹானியின் பாடல்

யொஹானி!. இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் பாடகி. அண்மையில் பாடிய “மெனிக்கே மகே கித்தே” என்ற காதல் பாடல் அவருக்கே ஆச்சரியமூட்டக்கூடிய விதத்தில் இன்று 150 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை (views) தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இசைத்துறையில் அவரது இயல்பான ஈடுபாடும் முயற்சியும் ஒருபுறம் இருக்க, இன்றைய சமூகவலைத்தளங்களின் வீச்சு அவருக்கு சாதகமாக அமைந்த சந்தர்ப்பமும் சேர்ந்து அவரை திடீரெனத் தோன்றிய நட்சத்திரமாக ஒளிவீச விட்டுள்ளது. அதற்கு அவர் தகுதியானவர்தான் என்ற மதிப்பீட்டை -அவரது எல்லா பாடல்களையும் பார்க்கிறபோது- வந்தடைய முடிகிறது.

Continue reading “யொஹானியின் பாடல்”

வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !

Thanks for vdo : Accounting Miracle Tamil

ஈழத்தில் சாதிய மனநிலை மீண்டும் வன்முறையை முன்னுக்குத் தள்ளி வீரியமடைவதை வட்டுக்கோட்டையில் 19.09.2021 நடந்த சாதிய ரீதியிலான தாக்குதல் நிரூபித்துள்ளது. வெறும் கையுடன் தமது அன்றாட வாழ்வை கூலித்தொழில் மூலம் ஓட்டிக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, வேலைவெட்டியின்றி வெளிநாட்டுப் பணத்தில் சீவியம் நடத்தும் ஆதிக்கசாதி இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வாள்சுழற்றியிருக்கிறார்கள். அரை மணித்தியாலம் அந்தத் தெருவையே கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள்.

Continue reading “வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !”

சிற்பி

  • குறும்படம்

(முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு வாசியுங்கள்)

நோர்வே தமிழ் பிக்கர்ஸ் (N.T Picture) உருவாக்கியிருக்கும் 11 நிமிட குறும்படம் சிற்பி. இது ஒரு abstract வகைமைக்குள் வருகிறதாலும், அநாவசிமற்றவைகள் காட்சிகளுக்குள் அலையாமல் செறிவாக செதுக்கப்பட்டிருப்பதாலும் இதை ஒரு “திரை ஓவியம்” என சொல்லுதல் பொருத்தமாகும்.

Continue reading “சிற்பி”

9/11 உம் ஆப்கானிஸ்தான் போரும் !

  • டானியல் கன்ஸர்

பிம்பப்படுத்தப்பட்ட நியூயோர்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்து 20 வருடங்களாகிறது. இதையொட்டி 9/11 உம் ஆப்கானிஸ்தான் போரும் என்ற தலைப்பில் அறியப்பட்ட சுவிஸ் வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் Basel நகரில் (11.9.21) உரையாற்றியுள்ளார். அவ் உரையின் முக்கியமான பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது.

Continue reading “9/11 உம் ஆப்கானிஸ்தான் போரும் !”