– இலக்கியமும் அரசியலும்
“தலைவர் மாவோ பேசத் தொடங்கினார். தலைவர் மாவோ பெரும்பாலும் எல்லா நாட்களும் பேசினார். நாம் ஆயுதம் கொண்டல்ல, வார்த்தைகள் கொண்டுதான் போராட வேண்டும் என்று சொன்னபோது எல்லோரும் கத்தியையும் கம்பையும் கீழே வைத்தார்கள். நாம் புரட்சியை வகுப்பறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னபோது யீலியும் ஏளும் ஸான்லியும் புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றார்கள். புரட்சி உற்பத்திக்கு உதவ வேண்டும் என்று தலைவர் மாவோ சொன்னபோது ஸன்க்வான் பட்டுத் தொழிற்சாலைக்குச் சென்றான். யுலான் பலகாரம் செய்வதற்காக தினமும் காலையில் வேளைக்கே எழுந்துசென்றாள். யுலானின் முடி மீண்டும் நீண்டு வளர்ந்து காதுகளை மூடுமளவுக்கு வந்தது.” ( பக்.216)
அன்றைய சீன அரசியல் சூழலில் கதைமாந்தர்களான ஒரு குடும்பத்தின் அசைவியக்கம் இது. இந்த நாவல் ஓர் அரசியல் நாவல் என்ற வகைமைக்குள் தன்னை பொருத்திக்கொள்கிறது.