Archive for April 2019
அறம்
Posted April 26, 2019
on:இலங்கையின் கடந்தவார (21.04.2019) தொடர் குண்டுவெடிப்புகளின் அகோரமும் அழுகைகளும் ஒருபுறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க கொஞ்சப் பேர் விடுதலைப் புலிகளின் ‘அறம்’ குறித்து சந்தர்ப்பம் பார்த்து பேசத் தொடங்கினர். இந்த 21 ஏப்ரல் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் கேள்விக்கிடமற்ற பயங்கரவாதிகள். அப்படியொரு கூட்டத்தோடு தாம் புனிதமாக கொண்டாடுகிற விடுதலைப் புலிகளை அற ஒப்பீடு செய்தார்கள். அதாவது ஒரு பயங்கரவாதத்தையும் ஒரு விடுதலைப் போராட்டத்தையும் ஒரே களத்தில் நிறுத்தி ஒப்பீடு செய்தார்கள். இங்கு இரண்டும் ஒப்பிடப்பட வேண்டிய எந்தத் தர்க்கத்தை இவர்கள் கண்டுபிடித்தார்களோ தெரியாது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் பயங்கரவாதம் ஒரு கூறாக இருந்தது என்ற உண்மை -அவர்களை அறியாமலே- இந்த ஒப்பீடுட்டுக்கான தளத்தை உருவாக்கிக் கொடுத்தது என்பதை அவர்கள் உணரத் தவறியதுதான் அவலம்.
நிகழ்வுகளின் கொடுநிழல்
Posted April 22, 2019
on:- In: கட்டுரை | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
நேற்றைய தினம் (21.04.2019) இலங்கை வரலாற்றில் பயங்கரவாதம் இன்னொரு பரிமாணத்தை நிறுவியிருக்கிற அச்சம்தரும் நாளாகியது. பெரும்பாலும் உதிரிப் பயங்கரவாத தாக்குதல்கள் அல்ல இவை என்பதை தாக்குதலின் எண்ணிக்கைகளும் அதன் தன்மைகளும் நேரத் திட்டமிடல்களும் நாட்தேர்வும் குண்டுகளின் வலுவான சேதம் தருகிற தன்மைகளும் தற்கொலைத் தாக்குதலும் உணர்த்துகின்றன. எனவே இது இலங்கைக்குள்ளால் திடீரென கிளம்பிய பூதமல்ல. இதற்கு ஒரு அந்நியப் பின்னணி இருக்க சாத்தியம் இருக்கிறது.
தீ
Posted April 18, 2019
on:15.4.19 அன்று பாரிஸ் Notre Dame பற்றியெரிந்து சுற்றாடலை புகைமூட்டங்களாலும் சாம்பல் புழுதிகளாலும் மூடிய அதிர்ச்சியும் துயரமும் பலர் மனங்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருந்தது. ஐரோப்பிய வரலாற்றின் ஒரு குறியீடு தீயில் எரிந்து நாசமாகிக்கொண்டிருந்த துயரம் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, நாம் எப்படியான உலகத்தில் வாழ்கிறோம் என்பதை இரு பெரும் பணக்காரர்கள் நிறுத்திவைத்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் Arnault and Pinault.
வருந்துதல்
Posted April 16, 2019
on:பாரிசில் தொன்மைவாய்ந்த அடையாளச்சின்னமான Notre-Dame மாதா கோவில் கட்டடம் எரிந்தது வருத்தத்துக்குரியது. இதே வருந்துதல் பிரெஞ்சு படைகள் உள்ளிட்ட நேற்றோ படைகளும் அமெரிக்காவும் மற்றைய நாடுகளில் செய்த யுத்தத்தில் அழிந்த பள்ளிவாசல்கள் மீதும் ஓதோடொக்ஸ் தேவாலயங்கள் மீதும் வரலாற்றை அகழ்வாய்ந்த பொருட்களினூடாக பதிந்துவைத்திருந்த (ஈராக் உட்பட்ட) மியூசியங்கள் மீதும் எனக்கு இருக்கிறது.