Archive for July 2018
சோஃபியின் உலகம்
Posted July 29, 2018
on:- In: அறிமுகம் | இதழியல் | உரை | பதிவு | விமர்சனம் | Uncategorized
- Leave a Comment
- நூல் மீதான வாசிப்பு
01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.
சோபியின் உலகம்.
நோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்கிறது.
வாசிப்பும் உரையாடலும் -17
Posted July 14, 2018
on:- In: அறிமுகம் | இதழியல் | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
01.07.2018 (சுவிஸ்)
// பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.//