சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும்,
அதற்கு வெளியிலும்…
18.5.2008 அன்று இந்தக் கலந்துரையாடல் நடந்தது. சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். வடக்குக் கிழக்கு பிரிப்புப் பற்றியதும் கிழக்கின் நிலை பற்றியதுமான கருத்தரங்காக இது விரிந்திருந்தது. வடக்குக் கிழக்குப் பிரிப்பைப் பற்றிய விவாதம் அவசியமற்று இருந்தது. அதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கின் நிலை பற்றிய விவாதங்கள் நடந்தன. எதிர்விவாதங்களின் வலு குன்றி இருந்தாகவே எனது கணிப்பு. கலந்துரையாடல் நெடுகிலும் புலியெதிர்ப்பு மனஉளவு நிலையிலிருந்து வெளிவர முடியாது கருத்துக்கள் கணிசமானளவு இருந்ததாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் ஏதோ புதிய விடயமுமல்ல. இன்று ஐரோப்பிய சந்திப்புகள் எல்லாமே அல்லது கருத்தாடல்கள் எல்லாமே இதற்குள் புதையுண்டதாக சொல்லப்படுவது கவனத்திற்குரியதுதான்.