சுவிஸ் கலைஞை Pipilotti Rist அவர்கள் (1962) பிரபல சூரிச் நகர கலைக்கூடத்தில் ( Zurich Kunsthaus) தனது கலை வேலைப்பாடொன்றை காட்சிப்படுத்தியுள்ளார். நவீன தொழில்நுட்பங்களையும் (கணனி, LED விளக்குகள்), கணக்கிடல்களையும் பாவித்து மண்டபம் ஒன்றை வேறு உலகமாக சிருஸ்டித்துள்ளார். 3000 லெட் விளக்குகள் ‘பளிங்குச் சிற்பி’க்குள் ஒளிர தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
அவை வெளியேற்றிக்கொண்டிருக்கும் வர்ணங்களும், ஒளிச் சேர்க்கைகளும், அவற்றின் தேய்தலும் வளர்ச்சியும், கலவைகளும், தெறிப்புகளும், அலைகளுமென அந்த மண்டபம் எல்லைகளை உடைத்துக்கொண்டுவிடுகிறது. தரையின் பளபளப்பும் ஒளித் தெறிப்புகளும் சிதறல்களும் என எல்லாமும் சேர்ந்து ஒரு பிரபஞ்சம் போலவும் அதில் உலா வருவதுபோலவும் பார்வையாளரை தூக்கிச் சென்றுவிடுகிறது. காற்றின் துணிக்கைகளை வருடும் மெல்லிசையும் நிற மாயங்களும் இதயத்துக்கு சிறகுகள் முளைக்கச் செய்துவிடுகின்றன. தரையில் குந்தியிருந்தபோதும், சுற்றி நடந்தபோதும், ஊடறுத்து நடந்தபோதும் ஒரு பிரபஞ்ச உலாவலுக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். மண்டபத்திலிருந்து வெளியேறியபோது தொப்பென தரையில் வீழ்ந்தேன்.
பிள்ளைகளின் அழைப்பிலும் வழிநடத்தலிலும் இன்று கிடைத்த சந்தர்ப்பம் இது!. Kunsthaus இன் முழு ஓவியங்களையும் கலைவேலைப்பாடுகளையும் பார்த்து முடிக்க நேரம் இடம்தரவில்லை. மீண்டும் போகவேண்டும் என்ற ஆர்வத்துடன் திரும்பினோம்.









- 16012022
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/6975297225874645