துணிச்சல்காரி

Malalai Joya

thanks for image : ctv news

மேற்குலகின் தயாரிப்பாகி நோபல் பரிசுவரை சென்றிருக்கும் மலாலாய் அல்ல இந்த மலாலை. இவர் மேற்குலகையும் விமர்சிக்கும் மலாலாய் யோயா

இந்ததத் துணிச்சலான ஆப்கான் பெண்ணை தெரிந்துவைத்திருங்கள். இவை பழைய காணொளிகளும் பதிவுகளும். அறிமுகத்திற்காக இங்கு பதிகிறேன். தற்போதைய ஆப்கான் நிலைமையில் இந்த துணிச்சல்காரியின் பாதுகாப்பு முக்கியம். அவளது குரல் வெளிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

// ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் போர்க்குற்றவாளிகளும்தான் இந்த குழுவில் இருக்கப்போகிறவர்கள். அரசியலைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவில் யார்யாரெல்லாம் இருக்கவேண்டும் என ஏற்கனவே தீர்மானித்த முடிவுகளோடுதான் நீங்கள் இங்கு வந்து குந்தியிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருமே கிரிமினல் குற்றவாளிகள். இவர்கள்தான் நமது நாட்டின்மீது நடாத்தப்படுகிற போர்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் காரணமானவர்கள். பெண்களுக்கு எதிரான மோசமான ஒடுக்குமுறைகளை செய்பவர்களும் இவர்களே. இவ்வாறான மோசமான கிரிமினல்களிடம்தான் நாட்டின் தலைவிதியை ஒப்படைக்கிறோம். இவர்கள் பதவிகளுக்கு உரியவர்களல்ல. அவர்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளிகள். வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.//

  • இரு பழைய கட்டுரைகள் இவை
  1. https://sudumanal.com/2016/07/16/the-bravest-woman-malalai-joya/
  2. https://sudumanal.com/2015/06/28/dust-in-the-eyes-of-the-world/
  • காணொளி
Continue reading “துணிச்சல்காரி”

நிக்கொலா ரெஸ்லா

இருபதாம் நூற்றாண்டை கண்டுபிடித்தவன் !

Nikola Tesla (1856-1943)

Tesla எனப் பெரிடப்பட்ட மின்சாரக் கார் வீதிகளில் திரிய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட Tesla Motors நிறுவனம் 2008 இல் தனது முதல் -தனி மின்சாரத்தில் இயங்கும்- காரை பாவனைக்கு கொணர்ந்தது. “ரெஸ்லாவின் தூரநோக்கும் புத்திக்கூர்மையும் இன்றி இன்றைய எமது மின்சாரக் கார் சாத்தியமில்லை” என அந்த நிறுவனம் தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

யார் இந்த ரெஸ்லா ?

மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார், வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் என்றெல்லாம் பாடசாலையில் மனனமாக தீத்தப்பட்ட அறிதலோடு ஒரு பொதுமனிதஜீவியாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 19ம் நூற்றாண்டில் தொடங்கி 20 ம் நூற்றாண்டுக்குள் தொடர்ந்த இந்த கண்டுபிடிப்புகளும் விஞ்ஞான சர்ச்சைகளும் எமது பாடசாலை ஆசான்களை வந்தடையவில்லையா என்ற கேள்வி எழுகிறது. பரீட்சைக்கு வெளியில் ஒரு சிறிய அறிவுத் தூண்டலையாவது செய்ய அவர்களால் முடியவில்லையா என்ற வருத்தம் எழுகிறது.

Continue reading “நிக்கொலா ரெஸ்லா”