உயர்தர வகுப்பில் கணித ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த போது நமது கடைசி வாங்கிலில் அசுமாத்தம் கேட்டு வந்தார். வாங்கிலுக்குக் கீழால் பரிமாறிய எமது புத்தகத்தை அவர் கண்டுவிட்டார். “வயதுவந்தவர்களுக்குத்தானோ அல்லது நாங்களும் வாசிக்கலாமோ !! ” என அந்த (கடுப்பேயில்லாத அமைதியான) ஆசிரியர் கேட்கவும், அவரது கைக்கு புத்தகமும் போய்ச் சேர்ந்தது. மொத்தமான புத்தகம். அவர் அதை பறிமுதல் செய்வது போன்று எடுத்துச் சென்றார். பிறகென்ன. ஒருமாத காலமாக “சேர் அந்த புத்தகம்ம்ம்..” என்று நாங்கள் இழுக்க, அவரோ “இன்னமும் வாசிச்சு முடியயில்லை, தாறன்” என்றபடி போய்க்கொண்டிருந்தார்.
நான் 10ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது அந்தக் கல்லூரியில் உயிரியல் ஆசிரியராக இருந்தவர் அன்றைய வகுப்பை இப்படித் தொடங்கினார். “இன்று இனப்பெருக்கம் பற்றிய வகுப்பை எடுக்க இருக்கிறன். யாராவது சிரிச்சால் உடனே வெளியில் போகவேண்டி இருக்கும்” என்று அறிவித்தார். அவரின் கட்டளை ஒருவித கிளுகிளுப்பை தோற்றுவித்தது. பின் ஏமாற வைத்தது. யோனி, ஆண்குறி, விந்து, கருமுட்டை… என்ற சொற்களை தாண்டி எதுவுமில்லை. அதுக்கே இந்த ‘பில்ட் அப்’ செய்யவேண்டியிருக்கிறது.
*
மாணவர் மாணவிகள் மட்டுமல்ல எத்தனை ஆசிரியர் ஆசிரியைகள் புத்தகம் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பள்ளிக்கூட புத்தகத்துக்குவெளியே மேய்ந்து திரிபவர்கள் எத்தனை பேர்? பாடங்களை ஒப்புவிக்கிற அல்லது மண்டைக்குள் ஏற்றுகிற உத்திகளால் அறிவு அளவிடப்பட முடியாதது.
கல்வி என்பதையும் அறிவு என்பதையும் ஒன்றாக பலர் குழப்பிக்கொள்கின்றனர். கல்விக்கூடங்கள் நிர்வாகப் புத்திஜீவிகளை உருவாக்குவதற்கான கருவியாகவே கல்வியை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அதை ஆதாரப்படுத்தும் இணைப்புகளாக கல்லூரிகள் கட்டுப்பாடு (டிசிபிளின்), ஒழுக்கம், சீரியஸ்தன்மை என்பவற்றை இணைத்துக்கொள்கின்றன.
பிரபல கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்களின், இருப்பவர்களின் முகத்தில் எப்போதுமே கடுப்புத் தெரியுமேயொழிய அரவணைப்பான உடல்மொழி தெரிவதில்லை. மாணவர் மீதான ஆசிரியரின் உறவு என்பது அதிகாரத்துவம் வாய்ந்த உறவு. அது தண்டனை வழங்குகிற உறவு. பரஸ்பர உரையாடலை மறுக்கிற உறவு. அதிகார வழிப்பட்ட கண்காணிப்புத்தன்மை கொண்ட உறவு. இந்த உறவுமுறை ஜனநாயத்தன்மையை இளவயதில் சுகித்து வளர தடையாக இருக்கிறது.
சமூகப் புத்திஜீவிகளை உருவாக்குகிற எந்த முனைப்பும் இந்த கல்விமுறைமையில் கிடையாது. ஆக சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனத்தை செதுக்கி வடிவமைக்கும் கல்விமுறைமையை கல்லூரிகள் செய்வதன் மூலமும், புள்ளியுற்பத்தியை பெருக்குவதன் மூலமும் புகழ்பெற்ற கல்லூரிகளாக பெயர் எடுக்கின்ற அவலம்தான் உள்ளது.
எமது உடல் அங்கத்தை அதனதன் பெயர் சொல்லி இயல்பாய் கதைக்க முடியாத அல்லது தயங்கும் ‘நாகரிக’ நிலையில் பாலியல் கல்வி பற்றி சொல்லவேண்டியதில்லை. மூடுண்ட இந்த பாலியல் அறிதலின்மீதான இரகசிய வெளிகளில் இது விகாரமாக வெளிப்படுகிறது. பாலியல் சார்ந்த உடல் உறுப்புகளை கேலிசெய்கிறவிதமாக பொறிபறக்கிற தூசணமாகவும் -அவை கள்ளுக்குடித்தோ குடியாமலோ- வெளித்தள்ளப்படு வதிலிருந்து, பாலியல் வல்லுறவு, கூட்டுப் பலாத்கார பாலியல் வல்லுறவு என்றிருந்து, சிறுமிகள் பெண் குழந்தைகளை வல்லுறவு செய்வதுவரையான அதிவக்கிர நிலை தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படுகிறது. (உண்மையில் மாணவர் சமூகம் இதற்கெதிராக நிற்க வேண்டும்.தமக்குள்ளும் றாக்கிங் செய்பவர்களின் மீது சக மாணவர்களின் கேள்வியும் எதிர்ப்பும் வெளிப்பட வேண்டும்.)
இப்படியாய் மூடுண்ட பாலியல் வெளியைக் கொண்ட ஒரு சமூகத்துள் திடீரென புகுந்திருக்கிற வெள்ளமாய் இணையம் வந்துசேர்ந்ததானது ஒரு பாலியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது விகாரமாக வெளிப்படுவதற்கான சாத்தியங்களை இல்லாமல் ஒழிக்க ஆசிரியர் மாணவர் இடையிலும் குடும்பத்துள்ளும் பாலியல் குறித்த அறிவும் உரையாடலும் படிப்படியாக உருவாகிற கல்விமுறைமை வேண்டும். கட்டுப்பாடுகள் மட்டும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க போதுமானதல்ல.
நிர்வாகப் புத்திஜீவிகளை உருவாக்குகிற இந்த கல்வி முறைமைக்குள்ளிருந்து பாடப்புத்தகங்களை படிச்சுக் கிழிச்சுக்கொண்டு பல்கலைக் கழகம் செல்பவர்களிடம் வித்தியாசமாக எதை நாம் எதிர்பார்க்க முடியும்.
றாக்கிங் இந்த பாலியல் வக்கிரங்களை இந்தவிதமான சேட்டைகள் மூலம் வெளிப்படுத்தக்கூடிய ஆபத்தற்ற களமாக அவர்களுக்கு ஆகிவிடுகிறது.. முன்னரெல்லாம் நிர்வாணமாக்குதல், தூசணவார்த்தைகள் சொல்லுவித்தல், பாலியல் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய கேள்விகள் கேலிகள், இரட்டை அர்த்தம் பொதிந்த கேலிப் பேச்சுகள், பெண்களின் பிரா அளவை கேட்டு நாணமுற வைத்தல் அல்லது தாம் காமமுறுதல் என்றெல்லாம் ஆணுடலுள் நகர்ந்த பாலியல் கள்ளன் இப்போ வந்தடைந்திருக்கிற இடத்தை இந்த புகைப்படத்தில் பார்க்கிறோம். (இந்த புகைப்படத்தை குறித்த ஆங்கில செய்தித்தாள் தனது பதிவிலிருந்து நீக்கி விட்டது). வாழைப்பழத்தை தமது இடுப்பில் கட்டிவைத்து பெண்பிள்ளைகளை அதை கடித்துத்தின்ன வைக்கிற இடத்துக்கு (பகிடிவதை) அந்த பாலியல் கள்ளன் றாக்கிங் வழியெடுத்து வந்துசேர்ந்திருக்கிறான்.
நமது கல்விமுறைமையும் சமூகமும் பண்பாடும் பாலியலை பேசாப் பொருளாக எவ்வளவு காலத்துக்கு மூடி வைத்திருக்கிறதோ அந்தளவுக்கு பாலியல் சார்ந்த குற்றங்களும் மனஅழுத்தங்களும் வக்கிரங்களும் பெருக வாய்ப்பிருக்கிறது. கரைபுரண்டோடும் இணைய உலகிலிருந்தும் அதன்வழியான தொடர்பு சாதனங்களிலிருந்தும் எமது பாலியல் கள்ளன் போதையேறியபடி இருப்பான். அவனை வெல்ல அறிவுதான் ஆயுதம். பாலியல் சார்ந்த அறிவும் சமூகம் சார்ந்த அறிவும் தான் பாலியல் பற்றிய பொய்மைகளையும் வக்கிரமூட்டல்களையும் கடந்து, அதை இயல்புத்தன்மையுடன் வெளிப்படுத்த வழிகாட்டும். பாடப் புத்தகங்களை உழுது விதைக்கிற பட்டப்படிப்புகள் அதை செய்யா.
அந்த இந்த வேறுபாடுகளை இல்லாமலாக்கி பல்கலைக் கழக மாணவ சமூகத்தை ஒரு சமத்துவ சமூகமாக பண்படுத்துகிறதான (புலுடா) ‘றாக்கிங் சோசலிசத்தின்’ இலட்சணத்தை இந்தப் படம் தோலுரிக்கிறது.
—————————–
உயர்தர வகுப்பில் கணித ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தபோது நமது கடைசி வாங்கிலில் அசுமாத்தம் கேட்டு வந்தார். வாங்கிலுக்குக் கீழால் பரிமாறிய எமது புத்தகத்தை அவர் கண்டுவிட்டார். “வயதுவந்தவர்களுக்குத்தானோ அல்லது நாங்களும் வாசிக்கலாமோ !! ” என அந்த (கடுப்பேயில்லாத அமைதியான) ஆசிரியர் கேட்கவும், அவரது கைக்கு புத்தகமும் போய்ச் சேர்ந்தது. மொத்தமான புத்தகம். அவர் அதை பறிமுதல் செய்வது போன்று எடுத்துச் சென்றார். பிறகென்ன. ஒருமாத காலமாக “சேர் அந்த புத்தகம்ம்ம்..” என்று நாங்கள் இழுக்க, அவரோ “இன்னமும் வாசிச்சு முடியயில்லை, தாறன்” என்றபடி போய்க்கொண்டிருந்தார்.
நான் 10ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது அந்தக் கல்லூரியில் உயிரியல் ஆசிரியராக இருந்தவர் அன்றைய வகுப்பை இப்படித் தொடங்கினார். “இன்று இனப்பெருக்கம் பற்றிய வகுப்பை எடுக்க இருக்கிறன். யாராவது சிரிச்சால் உடனே வெளியில் போகவேண்டி இருக்கும்” என்று அறிவித்தார். அவரின் கட்டளை ஒருவித கிளுகிளுப்பை தோற்றுவித்தது. பின் ஏமாற வைத்தது. யோனி, ஆண்குறி, விந்து, கருமுட்டை… என்ற சொற்களை தாண்டி எதுவுமில்லை. அதுக்கே இந்த ‘பில்ட் அப்’ செய்யவேண்டியிருக்கிறது.
*
மாணவர் மாணவிகள் மட்டுமல்ல எத்தனை ஆசிரியர் ஆசிரியைகள் புத்தகம் வாசிப்பதை பழக்கமாகக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பள்ளிக்கூட புத்தகத்துக்குவெளியே மேய்ந்து திரிபவர்கள் எத்தனை பேர்? பாடங்களை ஒப்புவிக்கிற அல்லது மண்டைக்குள் ஏற்றுகிற உத்திகளால் அறிவு அளவிடப்பட முடியாதது.
கல்வி என்பதையும் அறிவு என்பதையும் ஒன்றாக பலர் குழப்பிக்கொள்கின்றனர். கல்விக்கூடங்கள் நிர்வாகப் புத்திஜீவிகளை உருவாக்குவதற்கான கருவியாகவே கல்வியை மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அதை ஆதாரப்படுத்தும் இணைப்புகளாக கல்லூரிகள் கட்டுப்பாடு (டிசிபிளின்), ஒழுக்கம், சீரியஸ்தன்மை என்பவற்றை இணைத்துக்கொள்கின்றன.
பிரபல கல்லூரிகளின் தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்களின், இருப்பவர்களின் முகத்தில் எப்போதுமே கடுப்புத் தெரியுமேயொழிய அரவணைப்பான உடல்மொழி தெரிவதில்லை. மாணவர் மீதான ஆசிரியரின் உறவு என்பது அதிகாரத்துவம் வாய்ந்த உறவு. அது தண்டனை வழங்குகிற உறவு. பரஸ்பர உரையாடலை மறுக்கிற உறவு. அதிகார வழிப்பட்ட கண்காணிப்புத்தன்மை கொண்ட உறவு. இந்த உறவுமுறை ஜனநாயத்தன்மையை இளவயதில் சுகித்து வளர தடையாக இருக்கிறது.
சமூகப் புத்திஜீவிகளை உருவாக்குகிற எந்த முனைப்பும் இந்த கல்விமுறைமையில் கிடையாது. ஆக சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனத்தை செதுக்கி வடிவமைக்கும் கல்விமுறைமையை கல்லூரிகள் செய்வதன் மூலமும், புள்ளியுற்பத்தியை பெருக்குவதன் மூலமும் புகழ்பெற்ற கல்லூரிகளாக பெயர் எடுக்கின்ற அவலம்தான் உள்ளது.
எமது உடல் அங்கத்தை அதனதன் பெயர் சொல்லி இயல்பாய் கதைக்க முடியாத அல்லது தயங்கும் ‘நாகரிக’ நிலையில் பாலியல் கல்வி பற்றி சொல்லவேண்டியதில்லை. மூடுண்ட இந்த பாலியல் அறிதலின்மீதான இரகசிய வெளிகளில் இது விகாரமாக வெளிப்படுகிறது. பாலியல் சார்ந்த உடல் உறுப்புகளை கேலிசெய்கிறவிதமாக பொறிபறக்கிற தூசணமாகவும் -அவை கள்ளுக்குடித்தோ குடியாமலோ- வெளித்தள்ளப்படு வதிலிருந்து, பாலியல் வல்லுறவு, கூட்டுப் பலாத்கார பாலியல் வல்லுறவு என்றிருந்து, சிறுமிகள் பெண் குழந்தைகளை வல்லுறவு செய்வதுவரையான அதிவக்கிர நிலை தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படுகிறது. (உண்மையில் மாணவர் சமூகம் இதற்கெதிராக நிற்க வேண்டும்.தமக்குள்ளும் றாக்கிங் செய்பவர்களின் மீது சக மாணவர்களின் கேள்வியும் எதிர்ப்பும் வெளிப்பட வேண்டும்.)
இப்படியாய் மூடுண்ட பாலியல் வெளியைக் கொண்ட ஒரு சமூகத்துள் திடீரென புகுந்திருக்கிற வெள்ளமாய் இணையம் வந்துசேர்ந்ததானது ஒரு பாலியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அது விகாரமாக வெளிப்படுவதற்கான சாத்தியங்களை இல்லாமல் ஒழிக்க ஆசிரியர் மாணவர் இடையிலும் குடும்பத்துள்ளும் பாலியல் குறித்த அறிவும் உரையாடலும் படிப்படியாக உருவாகிற கல்விமுறைமை வேண்டும். கட்டுப்பாடுகள் மட்டும் பாலியல் அத்துமீறல்களை தடுக்க போதுமானதல்ல.
நிர்வாகப் புத்திஜீவிகளை உருவாக்குகிற இந்த கல்வி முறைமைக்குள்ளிருந்து பாடப்புத்தகங்களை படிச்சுக் கிழிச்சுக்கொண்டு பல்கலைக் கழகம் செல்பவர்களிடம் வித்தியாசமாக எதை நாம் எதிர்பார்க்க முடியும்.
றாக்கிங் இந்த பாலியல் வக்கிரங்களை இந்தவிதமான சேட்டைகள் மூலம் வெளிப்படுத்தக்கூடிய ஆபத்தற்ற களமாக அவர்களுக்கு ஆகிவிடுகிறது.. முன்னரெல்லாம் நிர்வாணமாக்குதல், தூசணவார்த்தைகள் சொல்லுவித்தல், பாலியல் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய கேள்விகள் கேலிகள், இரட்டை அர்த்தம் பொதிந்த கேலிப் பேச்சுகள், பெண்களின் பிரா அளவை கேட்டு நாணமுற வைத்தல் அல்லது தாம் காமமுறுதல் என்றெல்லாம் ஆணுடலுள் நகர்ந்த பாலியல் கள்ளன் இப்போ வந்தடைந்திருக்கிற இடத்தை இந்த புகைப்படத்தில் பார்க்கிறோம். (இந்த புகைப்படத்தை குறித்த ஆங்கில செய்தித்தாள் தனது பதிவிலிருந்து நீக்கி விட்டது. நானும் இப்போ நீக்கியிருக்கிறேன்). வாழைப்பழத்தை தமது இடுப்பில் கட்டிவைத்து பெண்பிள்ளைகளை அதை கடித்துத்தின்ன வைக்கிற இடத்துக்கு (பகிடிவதை) அந்த பாலியல் கள்ளன் றாக்கிங் வழியெடுத்து வந்துசேர்ந்திருக்கிறான்.
நமது கல்விமுறைமையும் சமூகமும் பண்பாடும் பாலியலை பேசாப் பொருளாக எவ்வளவு காலத்துக்கு மூடி வைத்திருக்கிறதோ அந்தளவுக்கு பாலியல் சார்ந்த குற்றங்களும் மனஅழுத்தங்களும் வக்கிரங்களும் பெருக வாய்ப்பிருக்கிறது. கரைபுரண்டோடும் இணைய உலகிலிருந்தும் அதன்வழியான தொடர்பு சாதனங்களிலிருந்தும் எமது பாலியல் கள்ளன் போதையேறியபடி இருப்பான். அவனை வெல்ல அறிவுதான் ஆயுதம். பாலியல் சார்ந்த அறிவும் சமூகம் சார்ந்த அறிவும் தான் பாலியல் பற்றிய பொய்மைகளையும் வக்கிரமூட்டல்களையும் கடந்து, அதை இயல்புத்தன்மையுடன் வெளிப்படுத்த வழிகாட்டும். பாடப் புத்தகங்களை உழுது விதைக்கிற பட்டப்படிப்புகள் அதை செய்யா.
அந்த இந்த வேறுபாடுகளை இல்லாமலாக்கி பல்கலைக் கழக மாணவ சமூகத்தை ஒரு சமத்துவ சமூகமாக பண்படுத்துகிறதான (புலுடா) ‘றாக்கிங் சோசலிசத்தின்’ இலட்சணத்தை இந்தப் படம் தோலுரிக்கிறது.
FB Link : https://www.facebook.com/ravindran.pa/posts/2627505993987145