உயர்தர வகுப்பில் கணித ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த போது நமது கடைசி வாங்கிலில் அசுமாத்தம் கேட்டு வந்தார். வாங்கிலுக்குக் கீழால் பரிமாறிய எமது புத்தகத்தை அவர் கண்டுவிட்டார். “வயதுவந்தவர்களுக்குத்தானோ அல்லது நாங்களும் வாசிக்கலாமோ !! ” என அந்த (கடுப்பேயில்லாத அமைதியான) ஆசிரியர் கேட்கவும், அவரது கைக்கு புத்தகமும் போய்ச் சேர்ந்தது. மொத்தமான புத்தகம். அவர் அதை பறிமுதல் செய்வது போன்று எடுத்துச் சென்றார். பிறகென்ன. ஒருமாத காலமாக “சேர் அந்த புத்தகம்ம்ம்..” என்று நாங்கள் இழுக்க, அவரோ “இன்னமும் வாசிச்சு முடியயில்லை, தாறன்” என்றபடி போய்க்கொண்டிருந்தார்.