நிகழ்காலத் துயரம்
Posted April 17, 2020
on:பகிர்ந்து வாழ்வோம்
Posted April 8, 2020
on:- In: பதிவு
- Leave a Comment
இலங்கையின் இயற்கை அழகின் திரட்சி மலையகம். அதை இப்படியான செழிப்பு பூமியாய் மாற்றி இலங்கையின் அந்நியச் செலாவணியின் முக்கால் பங்கிற்கு மேலான வருமானத்தை ஈட்டித்தருகிற அந்தப் பூமியின் மக்கள் காலாகாலமாகவே திட்டமிடப்பட்ட விதத்தில் ஏழையாக, விளம்புநிலை மக்களாக வைக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.
உதவ முன்வருவோம் !
Posted April 5, 2020
on:அழிந்து போகுமா?
Posted February 10, 2020
on:பகடிவதையின் வேர்கள் குடும்பம், பாடசாலை போன்ற சமூகநிறுவனங்களில் பரந்து விரிந்திருக்கிறது. குடும்பத்துக்குள்ளோ பாடசாலையிலோ உறவு முறை அதிகாரம் சார்ந்தே செயற்படுகிறது. பெற்றோருடன் ஒரு பிள்ளை சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. பாடசாலையில் ஆசிரியருடன் சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. தமது கருத்துகளை அச்சமின்றி முன்வைக்க முடிவதில்லை. அவர்களது ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்படுவதுமில்லை. இந்த நிறுவனங்களுள் கல்வி சார்ந்த அடக்குமுறையும் அழுத்தமும் (பாடசாலையாலும் குடும்பத்தாலும்) இணைந்தே செயற்படுத்தப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரன்கூட “போய்ப் படியடா” என்று பிடரியில் தட்டுகிற உரிமையைக் கொண்டுள்ளான் என்பது எவளவு துயரமானது.
இச்சா
Posted December 1, 2019
on:- In: அறிமுகம் | இதழியல் | விமர்சனம்
- Leave a Comment
நாவலின் முடிவும் தொடக்கமும் ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு ஆலாவின் வாழ்வை வட்டமாக, நாவலின் வடிவமாக வரைகிறது. இந்த வட்டத்துள் ஆலாவின் வாழ்வு சிக்கிச் சுழல்கிறது. நூலாசிரியரின் மொழியாளுமையும் படிமங்களும் வாசகரை இந்த வட்டச் சுழியுள் உள்ளிழுத்துவிடுகிறது. இந்தப் போரானது எப்படி ஒரு விளம்புநிலை மனிதரை வந்தடைகிறது என்பதையும், அது அந்த மனிதர் சார்ந்து மற்றவர்களையும் உள்ளிழுத்து துன்பப்படுத்துகிறது என்பதையும் நாவல் பேசுகிறது.
நினைவழியா வடுக்கள்
Posted October 20, 2019
on:சிவா சின்னப்பொடி அவர்களின் நூல்
சமூக ஒடுக்குமுறைகளான சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை, நிறவெறி என்பன குறித்தான குரல்களுக்கு ஓய்வு இல்லாமலிருப்பதானது அவற்றின் ஒடுக்குமுறையை பிரதிபலித்துக் காட்டுவதான ஒன்று. எனவே இவைகளைப் பற்றி பேசுவதை எதிர்ப்பது அல்லது இதை பேசுவதால்தான் அவை வாழ்கிறது என வைக்கப்படுகிற பொதுப்புத்தி கதையாடல்கள் அர்த்தமற்றது. அனுபவத்தை தமிழில் பட்டறிவு என்ற சொல்லால் சுட்டுவர். எமது அறிவுத்தளம் விரிவடைய வேண்டுமானால் அனுபவங்களை கேட்பதும் கிரகிப்பதும், அதை தர்க்க விஞ்ஞானத்துக்கும் கோட்பாட்டு ஆய்வுக்கும் உட்படுத்தி புரிந்துகொள்வதும் பயனுடையது.
இனி கடுப்பேத்த முடியாது!
Posted October 10, 2019
on:- In: டயரி | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
கலைஞன் சண்முகராஜாவுடனான சந்திப்பு – சுவிஸ்
பாடசாலை மாணவனாக இருக்கும்போது இரவில் ரியூசன் முடிந்து சைக்கிளில் டபிள் வருகிறோம், நானும் நண்பனும்! பொலிஸ் மறிக்கிறது. கன்னத்தில் பலமாக அறைந்தான் ஒரு பொலிஸ். எனது தலைக்குள் வெள்ளிகள் தோன்றி மறைந்தன. நான் மண்ணுக்கு திரும்பி வந்தபோது நண்பனை சைக்கிள் ரியுப் இனுள்ளிருந்து காற்றை திறந்துவிட பணித்திருந்தான் மற்ற பொலிஸ்.
அன்று தொடங்கிய பொலிஸ் மீதான வெறுப்பானது இயக்க போராளிகளை தேடுதல் வேட்டை, கைது சித்திரவதை, விசாரணை, உளவுபார்த்தல் என பொலிஸ் களமிறங்கியபோது பன்மடங்கு கடுப்பாக்கிவிட்டிருந்தது. தவறுசெய்யாமலே பயப்பட வேண்டி வைத்த காக்கிச் சட்டை அரச வன்முறை இயந்திரத்தின் குறியீடாய், தகர்த்தெறியப்பட வேண்டிய ஒன்றாய், வெறுப்புக்குரிய ஒன்றாய் மாறிவிட்டிருந்தது. இப்போதும் சினிமாவில் காக்கிச் சட்டையைக் கண்டால் எனக்குள்ளிருந்து ‘ஒருவன்’ சிலிர்த்தெழுந்துவிடுவான்.
காந்தி
Posted October 2, 2019
on:பெரியார் போலவே காந்தியும் மேலோட்டமாகவே எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அம்பேத்கார், பெரியார் போலவே காந்தியும் எனக்குப் பிடித்த தலைவர்களில் ஒருவர். வாழ்வு என்பது செயல்களால் மட்டுமல்ல செயல் மறுப்புகளாலும் அமைவது என நிகழ்த்திக் காட்டியவர் காந்தி என்பதால் போராட்டக் குணம்கொண்டவர்கள் காந்தியை வெற்றுச்சொற்களால் கடந்து செல்ல முடியாது. வலிமையான மைய அரசைவிட தன்னிறைவான கிராமங்களை உருவாக்குவது பற்றி பேசிய காந்தி எனக்கு முக்கியமானவர்.திணிக்கப்பட்ட ஒழுங்குகள் அச்சம் உள்ளவரைதான் நிலைக்கும் என்ற காந்தி முக்கியமானவர். நாம் கீழானவர்களாக உணராதபோது ஆள்பவர்கள் நமக்கு மேலானவர்களாக தம்மை உணர முடியாது என்ற நுண்ணரசியலை வெளிப்படுத்திய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். தமக்குள் விடுதலை அறத்தை கொண்டிராத தனிமனிதர்களும் சமூகமும் அரசியல் விடுதலையின் வழியாக எதனையும் பெற்றுவிட முடியாது என்பதை வௌ;வேறு வடிவங்களில் விளக்கிக் காட்டிய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். காந்தியத்தை கோட்பாட்டுப் புரிதலுக்கு உட்படுத்தி அதை ஏற்கவும், எதிர்க்கவும், கட்டவிழ்க்கவும் முடியாத அறிவுச் சோம்பேறித்தனத்திற்கு ஒப்பீட்டுப் பதிவுகள் ஒரு கேடு. பிரேமின் “காந்தியைக் கடந்த காந்தியம்” நூலை இவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
வெறுமை
Posted October 2, 2019
on:- In: கவிதை
- Leave a Comment
நிலாவொளியை இரகசியமாய் முத்தமிட்டு கிறங்கிப் போய்விடுகின்ற கடல் அலைகளின் கள்ள அசைவுபோல் அவளின் தோல் சுருக்கங்களுக்கு இடையே வாழ்ந்துபட்ட அனுபவம் துலங்கிக்கொண்டிருந்தது.தன்னைத் தாங்குவதில் மூன்றாவது காலாய்ஒரு கைத்தடியைத் தன்னும் அவள் மறுத்திருந்தாள். அனுபவத்தின் பாரம் அவளை மெல்ல நடந்துகொள்ள அனுமதித்தது.காணும்போதெல்லாம் ஒரு புன்னகையை அவள் சிந்தியபடிஎனை எதிர்கொள்வாள். எனது கைமணிக்கட்டை பிடித்து பேச தொடங்குவாள்.எனது அவசரம் மணிக்கட்டின் பிடியை கடிந்துகொள்வதால்செல்லுபடியாகிற ஒரு காரணத்தோடு ஒவ்வொரு முறையும் அவளை கடந்து செல்வேன்.என்றாவது ஒருநாள் அவளுடன் ஆறஅமர இருந்து பேச வேண்டும்.அவள் காட்டுகிற இன்னொரு உலகத்தை தரிசித்துவிட வேண்டும் என்ற கனவு எனது அறிவின்மையால் கலைந்து போனது.அவள் தனியாக வாழ்ந்து கழித்த அறைவெறுமையாய்க் கிடந்தது.
ஒரு கலைஞனும் நாங்களும்
Posted September 29, 2019
on:- In: உரை | டயரி | பதிவு
- Leave a Comment
பண்பாட்டுச் சுவைப்பதக் கூறுகளின் பகிர்வு
தமிழ் திரைப்பட நடிகர், நாடக இயக்குனர் மற்றும் மதுரை நிகழ் நாடக மைய இயக்குனர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சண்முகராஜா அவர்களின் சுவிஸ் வருகையின் ஒரு அங்கமாக Kulturzentrum, Thalwil அமைப்பும் சுவிஸ்- இந்திய கலாச்சாரத் திட்டம் (SICP)அமைப்பும் ஒரு கலாச்சாரச் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தது.