இலங்கையின் கடந்தவார (21.04.2019) தொடர் குண்டுவெடிப்புகளின் அகோரமும் அழுகைகளும் ஒருபுறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க கொஞ்சப் பேர் விடுதலைப் புலிகளின் ‘அறம்’ குறித்து சந்தர்ப்பம் பார்த்து பேசத் தொடங்கினர். இந்த 21 ஏப்ரல் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் கேள்விக்கிடமற்ற பயங்கரவாதிகள். அப்படியொரு கூட்டத்தோடு தாம் புனிதமாக கொண்டாடுகிற விடுதலைப் புலிகளை அற ஒப்பீடு செய்தார்கள். அதாவது ஒரு பயங்கரவாதத்தையும் ஒரு விடுதலைப் போராட்டத்தையும் ஒரே களத்தில் நிறுத்தி ஒப்பீடு செய்தார்கள். இங்கு இரண்டும் ஒப்பிடப்பட வேண்டிய எந்தத் தர்க்கத்தை இவர்கள் கண்டுபிடித்தார்களோ தெரியாது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் பயங்கரவாதம் ஒரு கூறாக இருந்தது என்ற உண்மை -அவர்களை அறியாமலே- இந்த ஒப்பீடுட்டுக்கான தளத்தை உருவாக்கிக் கொடுத்தது என்பதை அவர்கள் உணரத் தவறியதுதான் அவலம்.
நிகழ்வுகளின் கொடுநிழல்

நேற்றைய தினம் (21.04.2019) இலங்கை வரலாற்றில் பயங்கரவாதம் இன்னொரு பரிமாணத்தை நிறுவியிருக்கிற அச்சம்தரும் நாளாகியது. பெரும்பாலும் உதிரிப் பயங்கரவாத தாக்குதல்கள் அல்ல இவை என்பதை தாக்குதலின் எண்ணிக்கைகளும் அதன் தன்மைகளும் நேரத் திட்டமிடல்களும் நாட்தேர்வும் குண்டுகளின் வலுவான சேதம் தருகிற தன்மைகளும் தற்கொலைத் தாக்குதலும் உணர்த்துகின்றன. எனவே இது இலங்கைக்குள்ளால் திடீரென கிளம்பிய பூதமல்ல. இதற்கு ஒரு அந்நியப் பின்னணி இருக்க சாத்தியம் இருக்கிறது.
தீ

15.4.19 அன்று பாரிஸ் Notre Dame பற்றியெரிந்து சுற்றாடலை புகைமூட்டங்களாலும் சாம்பல் புழுதிகளாலும் மூடிய அதிர்ச்சியும் துயரமும் பலர் மனங்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருந்தது. ஐரோப்பிய வரலாற்றின் ஒரு குறியீடு தீயில் எரிந்து நாசமாகிக்கொண்டிருந்த துயரம் நிகழ்ந்துகொண்டிருந்தபோது, நாம் எப்படியான உலகத்தில் வாழ்கிறோம் என்பதை இரு பெரும் பணக்காரர்கள் நிறுத்திவைத்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் Arnault and Pinault.
வருந்துதல்

பாரிசில் தொன்மைவாய்ந்த அடையாளச்சின்னமான Notre-Dame மாதா கோவில் கட்டடம் எரிந்தது வருத்தத்துக்குரியது. இதே வருந்துதல் பிரெஞ்சு படைகள் உள்ளிட்ட நேற்றோ படைகளும் அமெரிக்காவும் மற்றைய நாடுகளில் செய்த யுத்தத்தில் அழிந்த பள்ளிவாசல்கள் மீதும் ஓதோடொக்ஸ் தேவாலயங்கள் மீதும் வரலாற்றை அகழ்வாய்ந்த பொருட்களினூடாக பதிந்துவைத்திருந்த (ஈராக் உட்பட்ட) மியூசியங்கள் மீதும் எனக்கு இருக்கிறது.
சொன்னேனில்லை
அனுபவக் குறிப்பு

2019.
எனது முதல் பயணம் அந்த ஊருக்கு. மாசி மாத வெயில் கையில் ஒரு தண்ணீர்ப் போத்தலுடன் ஆட்டோவில் எனை ஏற்றி அனுப்பிவைத்திருந்தது. மலைகளற்ற பூமி இன்னொருவகை அழகை உடுத்தியிருந்தது. சுவிசிலிருந்து புறப்பட்டபோது வீதியோர பனித்திரள்களின் குளிரசைப்புக்கு எதிர்நிலையாக, நான் புழுதி அளைந்து திரிந்த மண் சூட்டை கொளுத்திப் போட்டிருந்தது. வியர்வையற்ற நாட்களின் உலகிலிருந்து -உள்ளங்கால் தொடங்கி உச்சந் தலைவரை- வியர்வைத் துளிகளை பெய்துகொண்டிருந்த நாட்களின் உலகிற்குப் பெயர்க்கப்பட்ட எனது உடல் ஏதோவொன்றை சுகித்துக் கொண்டிருந்தது.
Ragging ‘Socialism’
உயர்தர வகுப்பில் கணித ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருந்த போது நமது கடைசி வாங்கிலில் அசுமாத்தம் கேட்டு வந்தார். வாங்கிலுக்குக் கீழால் பரிமாறிய எமது புத்தகத்தை அவர் கண்டுவிட்டார். “வயதுவந்தவர்களுக்குத்தானோ அல்லது நாங்களும் வாசிக்கலாமோ !! ” என அந்த (கடுப்பேயில்லாத அமைதியான) ஆசிரியர் கேட்கவும், அவரது கைக்கு புத்தகமும் போய்ச் சேர்ந்தது. மொத்தமான புத்தகம். அவர் அதை பறிமுதல் செய்வது போன்று எடுத்துச் சென்றார். பிறகென்ன. ஒருமாத காலமாக “சேர் அந்த புத்தகம்ம்ம்..” என்று நாங்கள் இழுக்க, அவரோ “இன்னமும் வாசிச்சு முடியயில்லை, தாறன்” என்றபடி போய்க்கொண்டிருந்தார்.
கெய்சா (Geisha)
அறிமுகமும் அப்பாலும்

கெய்சாக்களின் தோற்றம்
யப்பானின் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகத் தோன்றியவர்கள்தான் கெய்சா. இசை நாட்டியம் நடனம் காதல் காமம் என எல்லாமுமான கலைவடிவம் அவள். சிறுபான்மையாக ஆண் கெய்சாக்களும் இருந்தனர். அவர்களும் பெண் உடையிலேயே தோற்றமளித்தனர். பெண்கள் மிக உயரமான வெள்ளை மரக் காலணியையும் கிமோனோ என்ற பாரமான உடையையும் அணிந்திருப்பார்கள். கெய்சா ஆண்கள் வெள்ளை காலுறைகளைகளையும் கிமோனோவையும் அணிந்துகொள்வர். முகம் முற்றாக வெள்ளைப் பூச்சால் நிறைந்திருக்கும். கண் இமைகள் புருவங்கள் இதழ்கள் எல்லாவற்றையும் வெள்ளை, சிவப்பு, கறுப்பு என பூச்சுகள் மேய்ந்திருக்கும். தலை முடிகள் கொண்டையாக வாரிக் கட்டப்பட்டு குச்சிகள் சொருகப்பட்டு, தொங்கும் அலங்காரங்கள் கொண்டவளாய் காட்சியளிப்பாள். மொத்தத்தில் அவள் ஒரு அழகுப் பொம்மைபோல இருப்பாள். சாமிசென் இசைக்கருவி உட்பட மேள இசையையும் வாசிப்பதில் கடுமையான பயிற்சி பெற்ற விற்பன்னர்களாக இருந்தனர். அரங்கியலிலும்கூட அவர்கள் தம்மை கலைஞர்களாக நிரூபித்துக்கொண்டவர்கள். நறுமணங்களை ஊகித்தறியும் ஆற்றலிலும் கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் என அவர்கள் ஒரு கலைப் பொக்கிசமாக இருந்தனர்.
எழுதத் தோன்றியது.
பொதுப்புத்தியின் பொது நீரோட்டத்தோடு வெகுமக்களில் பெரும் பகுதியினரும் (கேள்விகளின்றி) பயணிப்பதுதான் வாழ்க்கை ஒழுங்காக மனித ஒழுக்கமாகப் பேணப்படுகிறது. பொதுப்புத்தி இன்றி பொதுமக்கள் என்ற கட்டமைப்புக் கிடையாது. இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். எனவே பொதுப்புத்தியை நிராகரிக்க முடியாது. அதை விமர்சிக்க முடியும். அதிர்ச்சிக்குள்ளாக்குவதன் மூலம் அதை கேள்விக்கு உட்படுத்தி மேம்படுத்த முடியும். பொதுப்புத்தி என்பது வெகுமக்களின் தத்துவம் என்பார் கிராம்சி. எனவே அதை அறிவார்ந்த தளத்திலும் பண்பாட்டுத்தளத்திலும் மேல்நிலைக்குக் கொண்டுவருவதே மாற்றத்தை நேசிப்பவர்களின் கடமையாக இருக்க முடியும். இங்குதான் (அரசியல், சமூக) அமைப்புகள் மட்டுமல்ல, கலகக்காரர்களும் எதிர்மறுப்பாளர்களும் தமது பங்கை ஆற்றவேண்டியிருக்கும்.
மெர்சோவின் நட்சத்திரங்கள்.
எப்போதுமில்லாதவாறு இந்த வருடம் ஒரு நீளமான கோடைகாலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் வெப்பமாக இருந்தது. இன்று வேறு அலுவல்கள் இல்லை. அல்லது அவற்றை முக்கியமற்றதாக்கிவிட்டு எனக்காக ஒதுக்கிக்கொள்வதான முடிவுடன் வேலையால் வந்துகொண்டிருந்தேன். உடலை உரசிய இதமான காற்றும் வெப்பமும் “அதைச் செய்” என்பதுபோல் சைக்கிளையும் வருடிச் சென்றது. இண்டைக்கு (உடற் பயிற்சிக்காக) ஓடுவம் என்று முடிவெடுத்தேன்.
புரட்டு
மேற்குலகின் முப்பெரும் மதங்களாக கிறிஸ்தவத்தை, இஸ்லாமை, யூத மதத்தை முன்வைப்பதானது ஐரோப்பிய மையவாத சிந்தனை முறைமை ஆகும்.. இந்த வரலாற்றுப் புரட்டு ஐரோப்பாவின் மேலாளுமை உருவாக்கத்தை நிகழ்த்த அவசியமாகவே அவர்களுக்கு இருந்தது.
யூதமதம் தோன்றிய இஸ்ரேல் ஐரோப்பிவிலா இருக்கிறது?
கிறிஸ்தவ மதம் தோன்றிய ஜெரூசலம் ஐரோப்பிவிலா இருக்கிறது?
இஸ்லாம் மதம் தோன்றிய மத்திய கிழக்கு ஐரோப்பாவிலா இருக்கிறது?