யொஹானி!. இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் பாடகி. அண்மையில் பாடிய “மெனிக்கே மகே கித்தே” என்ற காதல் பாடல் அவருக்கே ஆச்சரியமூட்டக்கூடிய விதத்தில் இன்று 150 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை (views) தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இசைத்துறையில் அவரது இயல்பான ஈடுபாடும் முயற்சியும் ஒருபுறம் இருக்க, இன்றைய சமூகவலைத்தளங்களின் வீச்சு அவருக்கு சாதகமாக அமைந்த சந்தர்ப்பமும் சேர்ந்து அவரை திடீரெனத் தோன்றிய நட்சத்திரமாக ஒளிவீச விட்டுள்ளது. அதற்கு அவர் தகுதியானவர்தான் என்ற மதிப்பீட்டை -அவரது எல்லா பாடல்களையும் பார்க்கிறபோது- வந்தடைய முடிகிறது.
Continue reading “யொஹானியின் பாடல்”Category: விமர்சனம்
ஹிஷாலினிகள்
முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அமர்த்தப்பட்ட ஹிஷாலினியின் மரணம் உயிர்த்தெழும்பியிருக்கிறது. அது ஒரு குறியீட்டு வடிவமாக மாறியிருப்பதே அதன் சிறப்பம்சம். அது ஹிஷாலினிகள் குறித்த கரிசனையையும், பொதுவெளிக்குள் நிகழ்த்தப்படும் எதிர்ப்புணர்வுகளையும் வெளிப்படைத்தன்மையையும்; -தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுள்- நிகழ்த்திக்கொண்டிருப்பது முன்னோக்கிய ஒரு மாற்றம்தான். அது கொலையா அல்லது தற்கொலையா என்பதை அரசியல் தலையீடுகளற்றதும் நேர்மையானதுமான பொலிஸ் விசாரணையும் நீதிமன்றமும்தான் புலப்படுத்த முடியும்.
Continue reading “ஹிஷாலினிகள்”புகலிட இலக்கிய யதார்த்தம்
மேற்குலகம் நோக்கி நாம் (தமிழர்கள்) போரினால் புலம்பெயர்ந்து அதிக பட்சம் முப்பத்தியேழு வருடங்களாகிறது. இந்த முதல் சந்ததி இப்போ இரண்டாவது முன்றாவது சந்ததிகளாக விரிடைந்திருக்கிறது. முதலாம் சந்ததி குறித்து பருண்மையாக சொல்வதெனில் ஓர் ஒடுங்கிப்போன சமூகமாக தமக்குள் குறுகியே அது இயங்கிவந்திருக்கிறது. இந்த ஒடுங்கிப் போதலுக்கு கணிசமானவர்கள் தமிழன் என்ற பெருமிதத்தை அல்லது (இந்துப்) பண்பாட்டை தமக்குள் உயர்த்திப்பிடிப்பதானது உளவியல் ரீதியில் சுயதிருப்திகொள்ள வைக்கிறது. செவ்வாய்க் கிரகத்தை றோவர் தரைதொட்டபோது உலகம் குதூகலித்துக் கொண்டிருக்க, நாம் (தமிழிச்சியாக இல்லாதபோதும்) ஸ்வாதி மோகனின் நெற்றியில் பொட்டைக் கண்டு குதூகலித்தோம்.
Continue reading “புகலிட இலக்கிய யதார்த்தம்”P2P
பொத்துவில்லிலிருந்து பொலிகண்டிவரை! – அடையாள நடைப்பயணம்.
அரசியலில் சாத்தியப்பாடுகள் குறித்தே பேசமுடியும். பெரும்பா1லும் வெளித்தெரிகிற சாத்தியப்பாடுகளையே பொதுப்புத்தி முன்வைத்து வியாக்கியானம் செய்யும். வெளித்தெரியாமல் இயங்கும் நுண்ணரசியல் பற்றி புரிவது அவளவு இலகுவல்ல. ஆனால் இந்த நுண்ணரசியலின் உணர்வுதான் சமூக இயங்குதளத்தை நிர்மாணிக்கிறது. அது பொதுப்புத்தியின் வழி செயலூக்கம் பெறுகிறது.
Continue reading “P2P”குமிழி- நாவல் மீதான வாசிப்புகள்(44), காணொளிகள்(6)

குமிழி நூலை PDF வடிவில் பெறுவதற்கான இணைப்பு :
நூல் அறிமுங்கள் / விமர்சனங்கள்
- காணொளி வடிவில்
பாரதி (சுவிஸ்)
ரவின் திரு (யேர்மனி)
வைதேகி (இலங்கை)
அருள் எழிலன் (தமிழகம்)
புதியமாதவி (மும்பை)
சண்முகராஜா (தமிழகம்)
*
2. எழுத்து வடிவில்
பரதன் நவரத்தினம் – பாரதி சிவராஜா – மீராபாரதி – புதியவன் – தேவன் – மாலினி – புதியமாதவி – அரியநாச்சி – டேவிட் கிருஸ்ணன் – அம்பை – சண் நரேந்திரன் – கௌதம சித்தார்த்தன் – சந்திரா நல்லையா – தேவா – கருணாகரன் – அசுரா நாதன் – சிவச்சந்திரன் சிவஞானம் – பா.செயப்பிரகாசம் – யசோதா பத்மநாதன் – வாசன் – சுரேகா – தோழர் – இராகவன் (இலங்கை) – க.பத்திநாதன் – குமணன் – நிலாந்தி – ஜெகநாதன் சற்குரு – எஸ்.கே.விக்னேஸ்வரன் – அகரன் பூமிநேசன் – பரமநாதன் தவநாதன்– முகுந்தன் குணரட்ணம் – சுசீந்திரன் நடராஜா – கருணாகரமூர்த்தி – எம்.கே.முருகானந்தன் – சரவணன் மாணிக்கவாசகம் – பற்றிக் – டி.சே.தமிழன் – தேவ அபிரா – அன்பாதவன்– லலிதாகோபன் – எம். ரிஷான் ஷெரீப் – சர்மிளா செயத் – கௌதமன்– சந்திரவதனா
Continue reading “குமிழி- நாவல் மீதான வாசிப்புகள்(44), காணொளிகள்(6)”வெற்றிகொள்ள முடியாதா என்ன!
முகநூலில் நடந்த சாதிய கதையாடல்களை முன்வைத்து…
பகுதி-1
இந்த உலகம் ஓர் இனவாத உலகம். இனவாதம் தொன்றுதொட்டு வெவ்வேறு வடிவங்களில் நிலவிவருகிறது. ஜோர்ஜ் புளொய்ட் கொலை நிறவெறி வடிவிலான அமெரிக்க இனவாதத்தினதும், மறுதலையாக அந்த இனவாதத்துக்கு எதிரான மக்கள் மனநிலையினதும் ஓர் குறியீடு. அது அதிர்வலையை மட்டுமல்ல, பல கேள்விகளையும் எமது சிந்தனையில் எழுப்பியிருக்கிறது. அடிமை வாழ்வின் இழிவுபடுத்தல்களோடும், தனித்துவமான ஆபிரிக்கப் பண்பாடுகளின் அழிப்புகளோடும், வெள்ளை மேலாதிக்கத்தோடும் இயங்கிய இனவாத காலகட்டமானது கறுப்பின மக்களை மனிதப்பிறவிபோல நடத்தாத ஓர் வரலாற்று குரூரம் வாய்ந்தது. இந்த மனநிலையுடன் கறுப்பின மக்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு அமெரிக்காவினுள் கொண்டுவரப்பட்டார்கள். சுமார் நூற்றியைம்பது வருடங்களின் முன்னர் மிகமிகச் சிறிதான வெள்ளையர்கள் மட்டுமே -அதுவும் குறிப்பாக கத்தோலிக்க மதத்தை தமது ஆத்மாவில் ஏற்றுக்கொண்ட வெள்ளையர்களே- மனிதாபிமான அடிப்படையில் அடிமை முறைமையை தமது வலுவுக்குள் நின்று எதிர்த்தார்கள். கறுப்பின அடிமை வாழ்விலிருந்து உதிரிகளாக தப்பியோடிய கறுப்பின மக்களை கனடாவுக்குள் எல்லை கடந்து செல்ல உதவினார்கள். பொதுப்புத்தி என்பது முற்றாகவே வெள்ளை மேலாதிக்க கருத்தியலோடும் கற்பிதங்களோடும் வெள்ளையின சமூகத்தை இயக்கியது.
அழிந்து போகுமா?
பகடிவதையின் வேர்கள் குடும்பம், பாடசாலை போன்ற சமூகநிறுவனங்களில் பரந்து விரிந்திருக்கிறது. குடும்பத்துக்குள்ளோ பாடசாலையிலோ உறவு முறை அதிகாரம் சார்ந்தே செயற்படுகிறது. பெற்றோருடன் ஒரு பிள்ளை சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. பாடசாலையில் ஆசிரியருடன் சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. தமது கருத்துகளை அச்சமின்றி முன்வைக்க முடிவதில்லை. அவர்களது ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்படுவதுமில்லை. இந்த நிறுவனங்களுள் கல்வி சார்ந்த அடக்குமுறையும் அழுத்தமும் (பாடசாலையாலும் குடும்பத்தாலும்) இணைந்தே செயற்படுத்தப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரன்கூட “போய்ப் படியடா” என்று பிடரியில் தட்டுகிற உரிமையைக் கொண்டுள்ளான் என்பது எவளவு துயரமானது.
நினைவழியா வடுக்கள்
சிவா சின்னப்பொடி அவர்களின் நூல்

சமூக ஒடுக்குமுறைகளான சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை, நிறவெறி என்பன குறித்தான குரல்களுக்கு ஓய்வு இல்லாமலிருப்பதானது அவற்றின் ஒடுக்குமுறையை பிரதிபலித்துக் காட்டுவதான ஒன்று. எனவே இவைகளைப் பற்றி பேசுவதை எதிர்ப்பது அல்லது இதை பேசுவதால்தான் அவை வாழ்கிறது என வைக்கப்படுகிற பொதுப்புத்தி கதையாடல்கள் அர்த்தமற்றது. அனுபவத்தை தமிழில் பட்டறிவு என்ற சொல்லால் சுட்டுவர். எமது அறிவுத்தளம் விரிவடைய வேண்டுமானால் அனுபவங்களை கேட்பதும் கிரகிப்பதும், அதை தர்க்க விஞ்ஞானத்துக்கும் கோட்பாட்டு ஆய்வுக்கும் உட்படுத்தி புரிந்துகொள்வதும் பயனுடையது.
ஈழப்போராட்டம்
ரகுமான் ஜானின் தொகுப்புகள் குறித்து..
கடந்த 18.08.2019 அன்று சூரிச் இல் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை, மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய பிரச்சினைகளை உள்ளடக்கி மூன்று பகுதிகளாக வந்திருக்கும் -ஜான் மாஸ்ரர் தொகுத்தளித்துள்ள- நூல் பற்றிய அறிமுகம் நடந்தது. அதில் நான் வழங்கிய அறிமுகவுரையை பதிவாக்குகிறேன்.
சுவிஸ் – வரலாற்றின் பொத்தல்கள்.
There is no short-cut to the revision of a country’s history – Hans Fässler

“சுவிற்சர்லாந்து காலனியாதிக்கத்தில் பங்கேற்காத நாடு அடிமைகளை கொள்ளாத நாடு” என்று சொல்லப்படுகிறது. அது நேரடியாக கொலனிகளை வைத்திருக்காததால் அப்படி ஒரு தோற்றப்பாடு உள்ளது. இதற்கு மாறாக திரைமறைவில் இருந்த விவகாரம் அல்லது உண்மை சுவிசில் படிப்படியாக பேசப்படுகிற பொருளாக மாறியுள்ளது.



