பிசாசுகள்

எந்த நாடாகிலும் ஆட்சிக்கான தலைவர்களை தீர்மானிப்பதில் எந்தப் பிசாசு நல்ல பிசாசு என மக்கள் முடிவுக்கு வந்து வாக்களிப்பதை இன்றைய ‘ஜனநாயகம்’ அமைத்துத் தந்திருக்கிறது. அது சாதாரண தேர்தல் தொகுதியிலும்கூட நல்ல பிசாசையே தீர்மானிக்குமளவுக்கு மக்களை இக்கட்டான நிலைமைக்குள் தள்ளியிருக்கிறது. ஜனநாயகத்தின் பெறுமதி அதுவாகியிருக்கிறது.

Continue reading “பிசாசுகள்”

வருவதாயில்லை!

எனது கல்வி தகைமையைக் கேட்கிறாய்,
கொடுப்புக்குள் சிரிக்கிறாய்.
என்னருகில் நின்று உயரத்தைப் பார்க்கிறாய்,
நீ உயரம் என்கிறாய்
மயிரற்றுப்போன எனது தலையைப் பார்த்து
உனது முடியை கோதிவிடுகிறாய்.

Continue reading “வருவதாயில்லை!”

பனி பொழிந்த நிலம்

வெண்முகில்களை சீவி
துருவலாய்க் கொட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
இலைகள் சருகுகளாய் உதிர்ந்து கொட்டியிருந்தபோது
மரங்கள் தமது அர்த்தத்தை இழந்திருந்தன – அப்போ
எனது கமராவை நான் உறைக்குள் புதைத்திருந்தேன்.
இப்போ உறைக்குள்ளிருந்து உருவி எடுத்தேன்.

Continue reading “பனி பொழிந்த நிலம்”

புகலிட இலக்கிய யதார்த்தம்

மேற்குலகம் நோக்கி நாம் (தமிழர்கள்) போரினால் புலம்பெயர்ந்து அதிக பட்சம் முப்பத்தியேழு வருடங்களாகிறது. இந்த முதல் சந்ததி இப்போ இரண்டாவது முன்றாவது சந்ததிகளாக விரிடைந்திருக்கிறது. முதலாம் சந்ததி குறித்து பருண்மையாக சொல்வதெனில் ஓர் ஒடுங்கிப்போன சமூகமாக தமக்குள் குறுகியே அது இயங்கிவந்திருக்கிறது. இந்த ஒடுங்கிப் போதலுக்கு கணிசமானவர்கள் தமிழன் என்ற பெருமிதத்தை அல்லது (இந்துப்) பண்பாட்டை தமக்குள் உயர்த்திப்பிடிப்பதானது உளவியல் ரீதியில் சுயதிருப்திகொள்ள வைக்கிறது. செவ்வாய்க் கிரகத்தை றோவர் தரைதொட்டபோது உலகம் குதூகலித்துக் கொண்டிருக்க, நாம் (தமிழிச்சியாக இல்லாதபோதும்) ஸ்வாதி மோகனின் நெற்றியில் பொட்டைக் கண்டு குதூகலித்தோம்.

Continue reading “புகலிட இலக்கிய யதார்த்தம்”

P2P

பொத்துவில்லிலிருந்து பொலிகண்டிவரை! – அடையாள நடைப்பயணம்.

image : tgte-homeland.org

அரசியலில் சாத்தியப்பாடுகள் குறித்தே பேசமுடியும். பெரும்பா1லும் வெளித்தெரிகிற சாத்தியப்பாடுகளையே பொதுப்புத்தி முன்வைத்து வியாக்கியானம் செய்யும். வெளித்தெரியாமல் இயங்கும் நுண்ணரசியல் பற்றி புரிவது அவளவு இலகுவல்ல. ஆனால் இந்த நுண்ணரசியலின் உணர்வுதான் சமூக இயங்குதளத்தை நிர்மாணிக்கிறது. அது பொதுப்புத்தியின் வழி செயலூக்கம் பெறுகிறது.

Continue reading “P2P”

சன்ரியாகோவும் நானும் (கொரோனா அனுபவம்)

கோவிட்-19 இலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.

12 நவம்பர் 2020. வழமைபோல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன். உடலில் ஒரு சோர்வு தெரிகிறது. மதியச் சாப்பாட்டின் பின்னர் மீண்டும் தயக்கத்துடன் வேலையைத் தொடங்குகிறேன். உடல் பலமிழப்பது போலவும் மனம் எதிலும் பற்றற்று நழுவுவது போலவும் தெரியத் தொடங்குகிறது. இடையில் வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருகிறேன். விழுந்து படுக்கிறேன். அன்றிரவே உடலின் மூட்டுகளை கழற்ற எத்தனித்துக் கொண்டிருக்கிற உளைவுப் படை உடலை உலுக்கி உலுக்கி அடித்துப் போடுகிறது. சுகவீனகால வழமையான அனுபவமல்ல இது. தெரிந்துவிட்டது. கொரோனாதான்.

Continue reading “சன்ரியாகோவும் நானும் (கொரோனா அனுபவம்)”

குமிழி- நாவல் மீதான வாசிப்புகள்(44), காணொளிகள்(6)

குமிழி நூலை PDF வடிவில் பெறுவதற்கான இணைப்பு :

*
  1. காணொளி வடிவில்

பாரதி (சுவிஸ்)
ரவின் திரு (யேர்மனி)
வைதேகி (இலங்கை)
அருள் எழிலன் (தமிழகம்)

புதியமாதவி (மும்பை)
சண்முகராஜா (தமிழகம்)

*

2. எழுத்து வடிவில்

Continue reading “குமிழி- நாவல் மீதான வாசிப்புகள்(44), காணொளிகள்(6)”

நிகழ்காலத் துயரம்

மேற்குலகில் கொரோனா மரணங்கள் ஏற்படுத்தியிருக்கிற மோசமான நிலைமை தொடர்கிறது. கொரோனா யுகம் அரசியல் ரீதியில், பண்பாட்டு ரீதியில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிற மாற்றங்கள் குறித்து நாம் அதிக அறிதல் பெறவேண்டியிருக்கிற காலம் இது.
கொரோனா மரணங்களில் தமிழர்கள் ஒரு பகுதியினர். இந்த இறப்புகளில் அவர்கள் தனித்து விசேட காரணங்களால் மரணமடையவில்லை. பெருமளவு இளைஞர்கள் சாகிறார்கள் என எந்த புள்ளிவிபரமுமற்ற அறிதலோடு எழுதப்படும் பதிவுகளும், புகலிடத் தமிழர்களின் சிந்தனைப் போக்கை சாடி இந்த மரணங்களை அணுகும் போக்குகளும் அபத்தமானது மட்டுமல்ல மனிதாபிமானமற்றதுமாகும்.

Continue reading “நிகழ்காலத் துயரம்”

உதவ முன்வருவோம் !

இன்றைய ஊரடங்கு நிலை ஈழத்தில் ஏற்படுத்தியுள்ள நிலை அன்றாடங்காய்ச்சியாய் உள்ள மக்களை பெரிதும் பாதித்திருக்கிறது. கொரோனா பற்றிய பயத்தை மேவுகிற விதத்தில் பசி அவர்களை வாட்டுகிறது. தினக் கூலித் தொழில் தடைப்பட்டுள்ள நிலையில் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டிய நிலை. தொழில் இல்லை. பசியாற எதுவுமில்லை. வயோதிபர் குழந்தைகளின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது. அரசாங்க நிவாரணம் அரசியல் பாதையினூடாக எவரெவரை போய்ச் சென்றடைகிறது என்பது தெரியாது. இதற்கு உதவ இயலுமானவர்கள் முன்வர வேண்டும். இதற்கு புகலிடத் தமிழர்களும் நாட்டிலுள்ளவர்களும் உதவி அமைப்பு வடிவத்துக்கான ஒரு தேர்ந்த முறைமையை (sytem) வைத்திருப்பது அவசியம். மிகச்சிறு பகுதியினர் இதற்குள் ஆரோக்கியமாக இயங்குவதை அறிந்திருக்கிறேன். திடீர் அனர்த்தங்களின் போதான உதவி அமைப்பு ஒரு தற்காலிகமான (OK அமைப்பு என்பர்) அமைப்பாக இருத்தலும் சாத்தியமானது.

Continue reading “உதவ முன்வருவோம் !”

அழிந்து போகுமா?

பகடிவதையின் வேர்கள் குடும்பம், பாடசாலை போன்ற சமூகநிறுவனங்களில் பரந்து விரிந்திருக்கிறது. குடும்பத்துக்குள்ளோ பாடசாலையிலோ உறவு முறை அதிகாரம் சார்ந்தே செயற்படுகிறது. பெற்றோருடன் ஒரு பிள்ளை சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. பாடசாலையில் ஆசிரியருடன் சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. தமது கருத்துகளை அச்சமின்றி முன்வைக்க முடிவதில்லை. அவர்களது ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்படுவதுமில்லை. இந்த நிறுவனங்களுள் கல்வி சார்ந்த அடக்குமுறையும் அழுத்தமும் (பாடசாலையாலும் குடும்பத்தாலும்) இணைந்தே செயற்படுத்தப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரன்கூட “போய்ப் படியடா” என்று பிடரியில் தட்டுகிற உரிமையைக் கொண்டுள்ளான் என்பது எவளவு துயரமானது.

Continue reading “அழிந்து போகுமா?”