அபத்தம்

வித்தியாவின் பாலியல் சித்திரவதைக் கொலை தொடர்பாக எதிர்பாராத அளவில் வடக்கு கிழக்கிலும் புத்தளம் போன்ற பிரதேசங்களிலும் ஓர் எதிர்ப்புப் போராட்டம் வெளிக்கிளம்பியுள்ளது. மிக நீண்ட காலமாக அடக்குமுறைக்குள் மெல்ல மெல்ல ஆழப்புதைந்த ஒரு சமூகம் மெல்லத் தலையெடுத்து வாழ்வியல் வெளிகளில் சமூக மனத்துடன் உலவத் தொடங்கியிருக்கிறது. தனது தொலைந்துபோன விழுமியங்கள் மீதான பச்சாதாபம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வன்முறைக்குள் அடக்கிவைக்கப்பட்ட அதன் மனித உணர்வுகள் உணர்ச்சிகள் எல்லாம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்தப்படுவது இயல்பு. தனிமனித உளவியலானாலும் சமூக உளவியலானாலும் அதேதான் நிலைமை.

இங்கு வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுஞ்செயலைக் கண்டித்து அது எழுந்திருக்கிறது. தனிமனித உளவியலின் தொகுப்பான சமூக உளவியல் வெளிப்பாடு இது. இதை வித்தியா என்ற தனிநபருக்கான போராட்டமாக மட்டும் பார்க்க முடியாது. இது இழந்துபோன விழுமியங்களை மீளுருவாக்கம் செய்ய ஏங்கும் சமூக மனங்களின் போராட்டமாக வரையறுக்க முடியும்.

Continue reading “அபத்தம்”

பிறழ்வு

முதலில் வித்தியாவுக்கு எனது கனத்த அஞ்சலிகள்.

வித்தியாவின் இழப்பின் மீதான தார்மீக கோபங்களிலிருந்து பிறழ்ந்து விழும் சொற்கள் இக் குறிப்பை எழுதத் தூண்டியது.

மாணவி வித்தியாவை கொன்றொழித்த குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பெண்ணுடலின் மீதான மலின அரசியலை நடத்தி காசு பொறுக்கும் குறுக்குவழியில் ஈடுபடாமல் குற்றவாளிகளை அம்லப்படுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும். இவையிரண்டுக்குமான போராட்டங்கள், அழுத்தங்கள் எழுவது ஓரளவாவது பயன்தரும்.

Continue reading “பிறழ்வு”

“பொறுக்கி” வாழ்வு.

marana-gana-viji-1

// கானா என்ற வார்த்தை மேல் உறைஞ்சுபோய் காய்ஞ்சு போய் எங்கட ரத்த நாத்தம்தான் நிறைய அடிக்கும். இது எங்கட வலி. எங்கட உணர்ச்சி. உங்களோடு அழ முடியல. அழுவதற்கான மனிதர்கள் எங்களட்டை இல்லை. எங்க முகத்தைப் பார்த்து பேசவோ, எங்களை தொட்டுப் பேசவோ இந்த சமுதாயத்தில் ஆள் இல்லாதபோது, நாங்கள் பிணத்தைத்தான் கட்டி அழவேண்டியிருக்கும்.//

“மரண கானா விஜி” என்ற தற்போதைய கானாக் கலைஞன் சொல்லுகிற வார்த்தைகள் இவை.

Continue reading ““பொறுக்கி” வாழ்வு.”

பயம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு van இல் பயணித்துக் கொண்டிருந்தோம். சாரதி ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளிலிருக்கும் (அகதித்) தமிழர்களை ஏற்றியிறக்கிய அனுபவம் வாய்ந்தவராக இருப்பார் என தெரிந்துகொண்டேன். வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ்ப் பிள்ளைகளெல்லாம் பயந்தவர்கள் என்றார். பூச்சிகளைக் கண்டு பயப்படுகிறார்கள். பாம்பைக் கண்டு பயப்படுகிறார்கள். பல்லியைக் கண்டு பயப்படுகிறார்கள்… என அடுக்கிக்கொண்டிருந்தார்.

Continue reading “பயம்.”

அது எப்போது ?

cricket

எனக்குள் இப்போதும் கிரிக்கெட் ரசிகன் வாழ்ந்துகொண்டேயிருக்கிறான். உலகக் கோப்பைக்கான இன்னொரு ஆட்டக்களம் போய்க்கொண்டிருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடந்த போட்டியிலும் இலங்கைதான் வெற்றிபெற வேண்டும் என எனது ரசிகனோடு நானும் ஒன்றியிருந்தேன்.

Continue reading “அது எப்போது ?”

முத்துலிங்கத்தின் பேய்கள்!

இயக்கத்தை பற்றைக்குள் ஒளித்திருந்து பார்த்து எழுதிய கதை.
கறல் பிடித்த எழுத்துகளால் தாக்குதல் தொடுக்கிறார். இயக்கத்தினுள் இயங்கிய மனிதர்களின் உணர்வுகளை முத்துலிங்கம் செயற்கைக்கோல் அனுப்பி எட்ட முயற்சித்து பரிதாபகரமாக வீழ்ந்து நொருங்குகிறார்.

muthulingam

Continue reading “முத்துலிங்கத்தின் பேய்கள்!”

Shaimaa El-Sabag ! – அஞ்சலிக் குறிப்பு

scheima -poet-1small

ஸைமா அல்-ஸாபா.

செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.

எகிப்தின் தாகீர் சதுக்க (Tahrir Square) எழுச்சியின் நான்காவது வருட நினைவுநாள் இந்த இளம் கவிஞையின் உயிரையும் காவுகொண்டது. அதிகார துர்நெடிலை முகரும் கொலைகாரர்களின் துப்பாக்கிக் குண்டுகள் அறியுமா கவிவாசனை. 2011 ஜனவரி 25 இல் தொடங்கிய தாகீர் சதுக்க எழுச்சியின் 4 வருட நினைவை தாங்கி மலர்வளையங்களுடன் அமைதியாய் ஊர்வலமாகச் சென்ற சோசலிசவழிச் செயற்பாட்டாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஓடமறுத்தவர்களில் அவளும் ஒருத்தியாக தாகீர் சதுக்கத்துக்கு அருகே நடைபாதையில் அவள் நடந்துகொண்டிருந்தாள். மிக அருகில் வைத்து அவள் சுடப்பட்டு இறந்துபோனாள்.

Continue reading “Shaimaa El-Sabag ! – அஞ்சலிக் குறிப்பு”

ஒரு நினைவுக் குறிப்பு .

இயக்கம் கற்றுத்தந்த பாடம் என்றெல்லாம் உருப்படியாக எதுவும் தொடர்ந்துதோ இல்லையோ, அவை கற்றுக்கொடுத்த மலினப்பட்ட சந்தேக மனநிலை அவ்வப்போது முளைத்துக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது- ஒரு நோய்க்கூறுடன்.

Continue reading “ஒரு நினைவுக் குறிப்பு .”

எனச் சொல்வது பிழையாகுமா?

ஒரு பெண் துணிச்சலாக தனது கருத்தைச் சொல்லும் உரிமை ஆணதிகாரத்தில் எரிச்சலை வரவழைக்கிறது. பெண்கள் எப்போதுமே கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு இவை சாட்சிகள்.

அரசியல் தளத்தில் கருத்தை சொல்வதிலிருந்து, இணையத்தளம் ஊடாக, முகநூலில் புகைப்படம் போடுவதுவரையான அவர்களின் சுதந்திரத்தை பின்தொடர்ந்தபடியே இருக்கிறது ஆணதிகார மனநிலை.

Continue reading “எனச் சொல்வது பிழையாகுமா?”