மசிரைவிட்டான் சிங்கன்!

அனுமதிபெற்று இரவு முழுவதும் நடமாடும் சுதந்திரத்தை திருவிழா  கூத்து.. என ஒருசில சந்தர்ப்பங்களே வழங்கிய காலம் அது. நாம் இளசுகளாக இருந்தோம். ஓர் அரச நாடகத்தின் சாட்டு அன்று கிடைத்தது. இரவுகளை உரசி உரசி கூக்கிரலிட்டு சத்தமாய்க் கதைத்து நாம் களித்திருந்தோம். நாடகம் தொடங்கி… அதுவாய்ப் போய்க்கொண்டிருந்தது. நாம் அரைவாசி கவனத்தை நாடகத்தில் விட்டிருந்தோம். அரசன் அட்டகாசமாய் வரும்போதெல்லாம் நாம் கதைக்காமல் இருந்தோம். வாள்வீசி குதித்து விழும் காட்சிகளில் நமது நரம்பை ஏதோ தட்டிக்கொண்டிருந்தது. 

Continue reading “மசிரைவிட்டான் சிங்கன்!”

இது தேவைதானா?

// டெல்லி மாணவி பாதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது சொந்தப் பெயர், புகைப்படம், இருப்பிடம் குறித்த எந்தத் தகவலுவும் வெளிவரவில்லை. தற்போது அவளது இறப்பிற்குப் பின்பும் கூட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை.//- http://www.facebook.com/cimi.meena.3/posts/592299927453159

  இது தேவைதானா?

Continue reading “இது தேவைதானா?”

மை கார்.. மை றோட்.. மை பெற்றோல் !

மை கார்.. மை றோட்.. மை பெற்றோல். இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர் எனது ஊர் இங்கிலீஷ் தங்கராசா. அவர் கள்ளுக் கோப்பரேசனுக்குப் போகும்போது தமிழில் பேசுவார். திரும்பிவரும்போது அதிகம் இங்கிலீஷ் பேசுவார். அவரே தனது இங்கிலீசை அப்பப்போ தமிழாக்கமும் செய்வார். எனக்கும் நண்பர்களுக்கும் அவரை நன்றாகப் பிடிக்கும். தண்ணியடிச்சால் பறக்கும் தூசணவார்த்தைகளை வெறிக்குட்டிகளிடமிருந்து கேட்டுப் பழகிய எமக்கு, தங்கராசா அந்த றூட்டிலை வராத ஒருவர் என்றளவில் மனம்விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையாளனாகத் தெரிந்தார். 

Continue reading “மை கார்.. மை றோட்.. மை பெற்றோல் !”