காஸாவில் நாம் இவ்வாறாகத்தான் பிறந்தோம்.
காஸாவின் புதல்விகளாய் புதல்வர்களாய்
மரணத்தைப் போர்த்தியபடிதான் நாம் பிறக்கிறோம்.
எனது மகளும் அவ்வாறேதான் பிறந்தாள்.
நாட்கள் அவளது வாழ்வில் முளைத்து, குருத்தெறியத் தொடங்கியிருக்கின்றன.
குண்டுவீச்சுகள், வெடிச் சத்தங்கள், மரண ஓலங்கள்
எல்லாவற்றையும் அவள் கேட்டாள்.
போரற்ற உலகில் தூங்கியெழும் மனிதர்
கேட்டிலர், தன் வாழ்நாள் முழுதிலும் இவளவையும்!
Author: sudumanal
நம்பிக்கை
நம்பிக்கை என்பது தர்க்க விஞ்ஞானத்துக்கு உட்பட்டதாக வளர்ந்து கொள்கிறபோது அது யதார்த்தமாகப் பரிணமிக்கிற சாத்தியப்பாடுகளை கொண்டிருக்கும். இல்லாதபோது அது மத நம்பிக்கை போன்று உளத்துள் உலாவுகிற அல்லது உளத்துக்கு அமைதி தருகிற நம்பிக்கையாக தேங்கிவிடும்.
Continue reading “நம்பிக்கை”எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு
கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது.
Continue reading “எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு”அலைகளின் நடுவே
இலங்கை அரசியல்
ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும்.
Continue reading “அலைகளின் நடுவே”The ‘Poorest’ President
Jose Mujica
ஒரு நல்ல தலைவர் என்பவர் தனது காலத்தில் நல்லனவற்றை செய்வது மட்டுமல்ல, தனக்குப் பின்னரான காலத்தில் தன்னைவிட சிறந்த மக்களை உருவாக்கி விடவும் வேண்டும்.
அரசியல் என்பது தொழிலல்ல. அது ஒரு வாழ்முறை. போராடவேண்டிய தேவை ஏற்படுகிறபோது, சிலவேளைகளில் புரட்சி என்பது தனது சொந்த பிள்ளையைக்கூட தின்று செரிக்கும்.
Continue reading “The ‘Poorest’ President”ஓர் அரச தலைவர் என்பவர் நாட்டை நிர்வகிக்கும் உயர் நிர்வாக உத்தியோகத்தராக மக்களால் தேர்வுசெய்யப்படுபவர். அவர் ஓர் அரசனல்ல, கடவுளும் அல்ல. அவர் ஒரு பழங்குடி சூனிய வைத்தியருமல்ல. அவர் ஒரு மக்கள் சேவகர். அவர் நாட்டுக்காக செயற்படுவது தியாகமல்ல. கடமை!
வருக!
வருக!
தற்போதைய ஜேவிபியை ஒரு கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ற், சோசலிஸ்ட் கட்சி என்றெல்லாம் விளிப்பது அதீதம். ஜேவிபியின் சிற்பியான தோழர் ரோகண விஜயவீரா கால அடிச்சுவட்டிலிலிருந்து இந்தச் சிவப்பு நிறம் தொற்றிக் கொண்டதால், இப்போதும் அப்படி சுட்ட பலரும் தயங்கவில்லை. அது அபத்தம் நிறைந்தது. எனவே (அல்ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் சுட்டுகிற) அநுர ஒரு மார்க்ஸியத் தலைவர் என்ற லேபலில் மகிழ்ச்சி இல்லை. மார்க்ஸியத்தை அது கொச்சைப்படுத்துவதாகும்.
Continue reading “வருக!”அநுர அலை
2024 ஜனாதிபதித் தேர்தல்
ஊடகங்கள் -முக்கியமாக சமூகவலைத் தளங்கள்- உருவாக்கிக் காட்டுகிற அநுர அலை இலங்கையின் யதார்த்த அரசியல் நிலைமையை பிரதிபலிக்கிறதா என தெரியவில்லை. இருந்தபோதும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இம்முறை இந்தளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு “அரகல” 2022 காலிமுகத்திடல் போராட்டத்தின் அரசியல் விளைவுதான் முக்கிய காரணமேயொழிய, கடந்த அரசாங்கங்களின் ஊழல் இலஞ்சம், ஏமாற்றுகள் அல்ல. இந்தச் சேற்றில் உழலும் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் அரசியல்வாதிகளும் ஜனநாயக முகமூடியை அணிந்து நடனமாடுவது ஒன்றும் புதிதல்ல.
Continue reading “அநுர அலை”வாழை
திரைப் பார்வை
பொதுவாக பல திரைப்படங்கள் ஒரு முடிவை பரிசளித்து இருக்கையிலிருக்கும் எம்மிடம் தந்து அனுப்பிவைக்கும். சிந்தனையில் இடையீடு இன்றி எழுந்து சென்று விடுவோம். அநாதரவாக எழுத்தோட்டம் திரையில் நகரும் வால்போல அசைந்துகொண்டிருக்கும். வாழை திரைப்படம் முடிந்தும் பார்வையாளர்கள் எழுந்தபாடில்லை. வாழையின் கனதியும் படத் தொகுப்பும் இருக்கையோடு கட்டிப் போட்டுவிட்டிருந்தது. இசை மூளையறையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. காட்சிப்புலத்துள் யாரோ கலவரப்பட்டபடி ஓடித்திரிந்தார்கள்.
Continue reading “வாழை”ஓகஸ்ட்-1
ஓகஸ்ட்-1 சுவிற்சர்லாந்தின் தேசிய தினம். சுவிஸின் 4 மொழிகளிலும் தேசிய கீதம் ஒலிக்கிறது. அந்தந்த கன்ரோன்களில் (மாநிலங்களில்) பெரும்பான்மையினரால் பேசப்படுகிற மொழி பாடசாலையில், நிர்வாக அலுவல்களில், வீதிப் போக்குவரத்து அறிவிப்புகளில் என எல்லாவற்றிலும் முதன் மொழியாக இருக்கிறது. எல்லா மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் முறைமையிலான, தனிநபர் ஆட்சியதிகார முறைமையில்லாத 7 பேர் கொண்ட உயர் ஆட்சியதிகார அமைப்பும் தேசியப் பாராளுமன்றமும் கன்ரோன் பாராளுமன்றங்களும் என அதிகாரப் பரவலாக்க கட்டமைப்புக் கொண்டு நாடு இயங்குகிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சினையை தீர்க்க முன்மொழியப்படக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு கொண்ட இந்த நாட்டில் அகதிகளாக ஈழத் தமிழர்கள் வந்தடைந்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது.
Continue reading “ஓகஸ்ட்-1”“மலையகா” நூல் அறிமுகம்
சூரிச் சந்திப்பு

30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் சூரிச் இல் 14:30 மணி தொடங்கி 18:00 மணிவரை ஓர் ஆர்வமூட்டும் சந்திப்பாக நடந்து முடிந்தது. 70 களில் தொடங்கி 2015 வரையான காலப் பகுதியில் 23 மலையகப் பெண்களால்/ எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 42 கதைகளை கொண்ட இத் தொகுப்பு நூல் “ஊடறு” வெளியீடாக வந்திருந்தது. மலையகம்-200 நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் இணைத்துக் கொண்ட இத் தொகுப்புக் குறித்தான சந்திப்பாக நேற்றைய சந்திப்பு அமைந்தது.
Continue reading ““மலையகா” நூல் அறிமுகம்”





