Vincent Van-Gogoh

கொலண்ட்டைச் சேர்ந்த வின்சன்ற் வான்கோ (1853-1890) ஒரு புகழ்பெற்ற post-impressionist ஓவியர். மேற்குலக ஓவிய வரலாற்றில் பாரிய தாக்கம் செலுத்தியவர்களில் அவரும் ஒருவர். ஒரு பத்து வருட காலத்தில் 2100 ஓவியங்களை அவர் வரைந்திருந்தார். இவைகளில் பெரும்பாலானவற்றை அவர் தனது வாழ்வின் கடைசி இரு வருடங்களில் வரைந்து தள்ளினார்.

1886 இல் அவர் பாரிஸ் க்கு குடிபெயர்ந்தார். அங்கு (Arles) அவர் தனது இல்லத்தில் ஓவியர்களைக் கொண்ட ஒரு கொலனியை நிறுவும் கனவுடன் ஓவியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவரது நண்பரான பிரெஞ்சு ஓவியர் Paul Gauguin மட்டும் இதில் பங்கெடுக்க முன்வந்தார். இருவரும் மிக நெருக்கமாக இந்த கனவுக்காக உழைக்கத் தொடங்கினர். இரண்டு மாதம்தான் இந்த இணைவு நீடித்தது.

இருவருமே கலை சம்பந்தமான வேறுபட்ட அபிப்பிராயம் கொண்டவர்கள். இருவருக்குமிடையில் கருத்து மோதல்கள் வலுக்கத் தொடங்கியது. Paul Gauguin விலகிச் செல்வதாக அறிவித்தார். தனது கனவு தன்முன்னாலேயே உடைந்து நொருங்கியதை சகிக்க முடியாத வின்சன்ற் க்கு உள ரீதியில் மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

அதன் உச்சக் கட்டமாக அவர் தனது காதை வெட்டி எறியுமளவுக்கு மனநோயாளி ஆனார். 1888 டிசம்பர் 23 அன்று இந்த துயரத்தை அவர் தனக்குத்தானே ஏற்படுத்தினார். வெட்டப்பட்ட காதின் பாகத்தை பத்திரமாக பார்சல் பண்ணி அருகில் ஒரு பாலியல்தொழிலாளர் நிலையத்தில் கொடுக்குமளவுக்கு மனநோயாளியாக மாறினார்.

உடல் உள ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த வின்சன்ற் முதலில் உடல் சிகிச்சையும் பின்னர் உளவியல் சிகிச்சையுமென அலைக்கழிவுற்றார். இந்த களேபரமான கொந்தளிப்பான மனநிலையில் அவர் வரைந்த (Starry Night and Irises உள்ளிட்ட) ஓவியங்கள் பின்னர் உலகப் புகழ்பெற்ற ஓவியங்களாக மாறின. தனது காது அறுபட்ட சுய உருவத்தை அவரே வரைந்தார். அந்த ஓவியம்தான் இது.

28.01.1889 இல் அவர் தனது சகோதரன் தேயோவுக்கு இவ்வாறு எழுதினார்,

“ஒருவருடைய கால் கையை உடைத்தால் பின்னர் சுகமாகி வரலாம் என எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஒருவருடைய மூளையை நொருக்கினால் மீண்டும் குணமாகி வரலாம் என எனக்குத் தெரியாது” என்றார். இத் துயர வரிகளில் நடந்த இவ் ஓவியனை யூலை 1890 இல் அவனுக்குள் சூறாவளியாக சுழன்றடித்த உளச் சிதைவு துப்பாக்கி ஏந்தி சுட்டுக் கொன்றது. 37 வயதில் அவன் தற்கொலை செய்துகொண்டான் என வரலாறு எழுதி பக்கத்தை மூடியது.

தனது வாழ்காலத்தில் அவரது ஒரேயொரு ஓவியமே விற்பனைக்கு போனது. அவரது தம்பி தியோ ஓவிய விற்பனை தரகராக இருந்ததால் அவர் வின்சன்ற் க்கு பண உதவி செய்தார். வின்சன்ற் வான்கூ இன் மரணம் மறுபிறப்பாக அவரது ஓவியங்களுக்கான வாழ்வை தொடக்கிவைத்து சாதனை புரியத் தொடங்கியது. பின்னர் ஒரு ஓவிய நுண்ணறிவாளனாக உலகம் போற்றிய அவர் வரைந்த ஓவியங்கள் விலையிலும் சாதனையை எட்டியது. வரலாற்றில் வான்கோவினை தவிர்த்த ஓவிய உலகம் என்ற ஒன்று இல்லை என்றாகிவிட்டது.

(photos taken in Kunsthaus, Zurich)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: