கேட்க மறந்துபோனேன்.

அவசர அவசரமாக அந்த முதியவர்  வந்து ஏறினார். அருகில் அமர்ந்துகொண்டார். இலக்கியச் சண்டையொன்றை பார்த்ததாக அவர் சொல்லத் தொடங்கியபோது “நானும் கண்டனான்” என சொல்ல வாய் வந்தது. சொல்லவில்லை. சோலி இல்லாமல் பேசாமலே இருந்துவிடுவம் எண்டு இருந்தேன்.
இந்த முதியவருக்குப் பக்கத்திலை போன தடவை ஒரு இளைஞன் அகப்பட்டுப் போயிருந்தான். அவன் வேலைவெட்டியில்லாமல் சோசல் காசிலை இருந்ததை தெரியாமல் சொல்லிவிட்டான்.
“அப்ப அரசாங்கப் பணத்திலை இருக்கிறியள். தம்பி வேலையில்லாமல் இருக்கக்கூடாது . இந்த நாட்டுக்கு வந்திட்டம். அதுக்காக உழைக்காமல் அரசாங்கத்திட்டையிருந்து காசெடுக்கிற அலுவல் அவளவு நல்லாயில்லை² என்றார்.

Continue reading “கேட்க மறந்துபோனேன்.”