நினைவேந்தல்
சாமப் பொழுதில்
அல்லது ஓர் அந்திமப் பொழுதில்
இல்லாவிடினும்
ஓர் கருக்கல் பொழுதில்
மறைந்திருத்தல்; இலகு என்றபோதும்
நிலம்வெளித்த ஓர் காலைப் பொழுதில்
யார் கண்டார்
மரணம் ஒளித்திருத்தல் கூடுமென.
நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.
(மயூ மனோ வின் “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ கவிதைத் தொகுதி மீதான ஒரு வாசிப்பு)
குழந்தையொன்று உருவங்களை வடிவமைக்கும் கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தது. சாத்தியப்பாடுகளை அனுபவம் படிப்பித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீழ்தலின்போதும் மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்துடனும் புதிய படைப்பாக்கத்துடனும் குழந்தை முயன்று கொண்டிருந்தது. “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ என்ற மயூ மனோவின் கவிதைத் தொகுதியினை நான் கையில் வைத்திருந்தேன்.
Continue reading “நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.”
இன்னமும் உறங்கியிருக்கவில்லை
இருள்படர்ந்த கடற்பரப்பை நீவிவரும் காற்று
எனது குடிசையின்மீது இடறுகிறது.
இடையிடையே அது கிடுகை கூரையிலிருந்து
பெயர்த்துவிடுவது போலவும், பின்னர்
கிடுகு அமைதியடைவதாயும் இருந்த கணங்கள்
என்னை கடத்திவைத்திருந்தன.
மே தின நினைவு
1994 மே மாதம் நாம் சூரிச் புகையிரத நிலையத்தில் பிரசுரங்களுடன் மூவர், நால்வர் கொண்ட குழுவாக நிற்கிறோம். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களிடத்தில் கார் பாவனை என்பது அரிதான ஒன்று. அதனால் முக்கிய புகையிரத நிலையங்கள் எமது “மனிதம்” சஞ்சிகையின் விற்பனை இடமாக இருக்கும். இன்று பிரசுரத்துடன் நிற்கிறோம். ஒருவித பயம். பிரசுரங்களை விநியோகிக்கின்றோம். தமிழ்மொழியிலும், யேர்மன் மொழியிலுமான பிரசுரங்கள் அவை. பதட்டத்துடனும் கோபத்துடனும் அடுத்து எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்ற கேள்விகளுடனும் நாம் நின்றோம். ஆம், நண்பர் சபாலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் பிரசுரங்கள்தான் அவை.
“பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்
பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் கவிஞைகளிலும் புலி அடையாளத்தை மட்டும் வைத்து நோக்கும் எளிமையான போக்கு மறைமுகமான எதிர்ப்பாகவும், கள்ள மௌனமாகவும் பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இந்த ~மறுப்புக்கான| சமூக நியாயத்தை வைக்க முற்படுதல் என்ற நேர்மையான வழியில் இதை உரையாட முன்வருவதே சரியாக இருக்கும். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இருமைகளில் சிக்குண்டு இருப்பது இவ்வகை தேக்கத்தை கடக்க முடியாத நிலையில் பலரை விட்டுள்ளது ஒருவகை அவலம்தான்.
Continue reading ““பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்”
நான் சமாதானத்தை நேசிப்பதால்… -அலேகிரியா
யுத்தத்தையல்ல, நான்
சமாதானத்தை நேசிக்கிறேன் என்பதால்…
பசித்திருக்கும் குழந்தைகளையும்
உருவழிந்த பெண்களையும் மட்டுமல்ல
ஊமைகளாக்கப்பட்ட மனிதர்களையும் நான்
பார்க்க விரும்பாததால்…
களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும். Continue reading “நான் சமாதானத்தை நேசிப்பதால்… -அலேகிரியா”
மசிருரிமை
அடித்துக் கொல்வது
அறுத்துக் கொல்வது
ஆண்குறியால் கொல்வது
கோடரியால் வெட்டிக் கொல்வது
பிணத்தைச் சுற்றி ஆர்ப்பரிப்பது… எல்லாமுமே
ஒரு நிகழ்தகவாய்
ஒரு வாழைப்பழ ஜீரணிப்பாய்
குரூரப்படும் காலங்களுடன்
கைகோர்த்துச் செல்கிறது
காட்டுமிராண்டிக் காலம்.
மனித உரிமை மசிருரிமையாய்
தூசித்து விழுகிறது.
– ரவி (25102011)
சூடேறிக்கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்
இறுகிய பனிமலைகள்
பிளந்து விழுகிறது துருவத்தில்.
சூடேறிக்கொண்டிருக்கும் பூமிபற்றி
கவலைகொள்கின்றனர் மனிதர்கள்.
ஓவியர்களின் தூரிகைகள்
எதிர்காலத்தை எட்டுகின்றன.
எனது மனங்கொத்திப் பறவை
இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன்
எனது பிரிய மனங்கொத்திப் பறவையின்
மீள்வரவில்
நான் இலேசாகிப்போயிருக்கிறேன்.
நான் எதையும்
விசாரணை செய்வதாயில்லை.
ஏன் பறந்தாய்
ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய்
என்பதெல்லாம்
எனக்கு பொருட்டல்ல இப்போ.