தோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி

சூரிச், சுவிஸ்

18.2.2007. ஞாயிற்றுக்கிழமை. நேரம் சுமார் 3 மணியைத் தாண்டியது. பகல் வெளிச்சத்தின் நுழைவுகளை தொடர்யன்னலினூடாக தாராளமாய் அனுமதித்திருந்தது அந்த மண்டபம். மண்டபத்தின் முன்பகுதியில் தேசபிதா தோழர் ரட்ணா என்று எழுதப்பட்ட எழுத்துக்களின் சொந்தக்காரனான இளையதம்பி இரத்தினசபாபதியின் நிழற்படம் சிவப்பு நிறத்துணியுடன் இசைந்துபோய் இருந்தது.

Continue reading “தோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி”

இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு?

துயரமான செய்தி. மீண்டும் ஒரு உயிர் தீயில் தன்னைக் கருக்கியிருக்கிறது. ஜெனீவாhவில் ஐநா சபைக்கு முன்பாக 12.02.2009 அன்று முருகதாஸ் என்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியிக்கிறான். போராட்டம் என்பதே வாழ்தலுக்கானது. வாழ்தலை அழித்துக்கொள்கிறபோது போராட்டம் என்பதற்கு என்ன பொருள்தான் வேண்டியிருக்கிறது. எனவே தற்கொலைகள் போராட்ட வழிமுறையாக கைக்கொள்ளப்படுவதற்கு எதிரான கருத்துநிலைகள் வலுப்பெற வேண்டும்.

Continue reading “இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு?”

சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள்

அறிமுகமும், கலை இலக்கிய ஒன்றுகூடலும்

நேரம் 3 மணியை அண்மித்துக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கடைதெருக்கள் வேலைத்தலங்கள் ஓய்வுற்றிருந்ததால் வீதிகள் நெரிசலற்று சுமுகமாய்த் தெரிந்தன. சூரிச் மாநகரம் மெதுவாய் இயங்கியது. நாம் போல்க்ஸ் கவுஸ் இன் ஒரு நடுத்தர மண்டபத்துள் கூடுகிறோம். சிறிய சந்திப்பகளிலிருந்து பெரும் சந்திப்புகளை நடத்துவதற்கான மண்டபங்களைக் கொண்டது இந்த போல்க்ஸ் கவுஸ். தமிழ்க் கடைகள் அவ்வப்போது மலிவுவிற்பனை மண்டபமாக இதை மாற்றுவதுண்டு. இங்குள்ள தமிழர்களுக்கு மலிவு விற்பனை நடக்கிற இடம் என்று அறிமுகப்படுத்திவிடுவது சுலபமாகக்கூடப் போய்விடுகிறது. பெரும்திரளாய்க் கூடுவர்… போவர்…வருவர் மலிவுவிற்பனைக்கு.

Continue reading “சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள்”