1994 மே மாதம் நாம் சூரிச் புகையிரத நிலையத்தில் பிரசுரங்களுடன் மூவர், நால்வர் கொண்ட குழுவாக நிற்கிறோம். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களிடத்தில் கார் பாவனை என்பது அரிதான ஒன்று. அதனால் முக்கிய புகையிரத நிலையங்கள் எமது “மனிதம்” சஞ்சிகையின் விற்பனை இடமாக இருக்கும். இன்று பிரசுரத்துடன் நிற்கிறோம். ஒருவித பயம். பிரசுரங்களை விநியோகிக்கின்றோம். தமிழ்மொழியிலும், யேர்மன் மொழியிலுமான பிரசுரங்கள் அவை. பதட்டத்துடனும் கோபத்துடனும் அடுத்து எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்ற கேள்விகளுடனும் நாம் நின்றோம். ஆம், நண்பர் சபாலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் பிரசுரங்கள்தான் அவை.
Category: பதிவு
நினைவுப் பெருவெளி
தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக …
மாலைநேரங்கள் பகல் பொழுதின் முடிவுரைகளாகப் போவதால் நான் காலாற நடந்துகொண்டிருந்தேன். நினைவுகளை மனது வாசித்துக்கொண்டிருக்க உணர்வுகள் எனை வருடிக்கொண்டிருந்தன. நான் அந்த வாங்கில் அமர்ந்திருந்தேன். சோலைகள் ஒளிக்கோடுகளை மெலிதாகவோ கற்றையாகவோ வரைந்துகொண்டிருந்தன. நான் அமைதியற்றிருந்தேன்.
விடைகொடல்
(தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக இந்தக் கவிதை)
இளவேனிற்காலம் தன்
சக்தியெல்லாம் திரட்டிப்
பெற்றெடுத்த தளிர்களெல்லாம்
பச்சையாய் விரிய முயற்சித்த
ஓர் பொழுதில்
நீ மட்டும் ஏன்
உதிர்ந்து விழுந்தாய்?
அம்மாவும் அப்பாவும் நானும்
நான் அப்போது இளவயதினனாய் இருந்தேன். குறும்புகள் செய்யும் பருவம் அது. அது இலங்கை வரலாற்றில் பஞ்சப் புயல் வீசிய காலம். அரை இறாத்தல் பாணுக்காக நீண்ட வரிசையில் சில்வா பேக்கரியிலும் சங்கக் கடையிலும் என முண்டியடித்த காலம் அது. இந்த பாண்வேட்டையின்பின் அன்று அதிகாலை இருளில் நானும் நண்பர்களும் எமது வாசிகசாலையில் சுவாரசியத்துக்காகக் காத்திருந்தோம்.
போய்வா அம்மா போய்வா
பெரும் தோப்பிலிருந்து குருவியொன்று
வீரிட்டுப் பறந்து வந்தது உன்
மரணச் சேதியுடன்.
அம்மா!
எனது சிறுபராயம் முதலான நினைவுகளை
அது தன் சின்னக் காலால்
கோதிக்கோதி என்
மனதைக் கசியவிட்டது.
யாரொடு நோவேன்!
ஒபாமா: கண்ணீரால் வரவேற்கப்பட்டவன்

இந்த நாட்டில் நான் மதிக்கப்படுகிறேனில்லை, ஏனெனில் நான் ஒரு கறுப்பன். பதவி உயர்வில் அலட்சியப்படுத்தப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். ஒரு கிரிமினலாக கவனிக்கப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். உங்களில் பல ஆயிரம்பேர் அவருக்கு வாக்களிக்க விருப்பமில்லை, ஏனெனில் அவர் ஒரு கறுப்பன், ஆனால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரிவதில்லை. எனக்கு மட்டும் அது தெரியவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்…
கையெழுத்து வேட்டை அரசியல்
தேசம் நெற் இணையத்தளத்துக்கு எழுதப்பட்டது தொடர்பாக..
இந்த அறிக்கையில் எனது பெயரும் (அடைமொழியுடன்) வந்திருக்கிறது. அறிக்கை இணையத்தளத்தில் வெளிவந்த பின்னரே அதை நான் வாசித்தேன். இதற்கு முன்னர் இது எமக்கு மின்னஞ்சல்மூலம் வந்திருந்தபோதும் இதை நான் வாசித்திருக்கவில்லை. அனுமதியின்றி எனது பெயரைப் போட்டது தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
ஒரே அலையில் நீச்சலடித்தல்
சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும்,
அதற்கு வெளியிலும்…
18.5.2008 அன்று இந்தக் கலந்துரையாடல் நடந்தது. சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். வடக்குக் கிழக்கு பிரிப்புப் பற்றியதும் கிழக்கின் நிலை பற்றியதுமான கருத்தரங்காக இது விரிந்திருந்தது. வடக்குக் கிழக்குப் பிரிப்பைப் பற்றிய விவாதம் அவசியமற்று இருந்தது. அதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கின் நிலை பற்றிய விவாதங்கள் நடந்தன. எதிர்விவாதங்களின் வலு குன்றி இருந்தாகவே எனது கணிப்பு. கலந்துரையாடல் நெடுகிலும் புலியெதிர்ப்பு மனஉளவு நிலையிலிருந்து வெளிவர முடியாது கருத்துக்கள் கணிசமானளவு இருந்ததாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் ஏதோ புதிய விடயமுமல்ல. இன்று ஐரோப்பிய சந்திப்புகள் எல்லாமே அல்லது கருத்தாடல்கள் எல்லாமே இதற்குள் புதையுண்டதாக சொல்லப்படுவது கவனத்திற்குரியதுதான்.
தோழர் பரா – இரங்கல் செய்தி
இன்று இந்த இறுதிநிகழ்வில் கலந்தகொள்ளமுடியாமல் போனது நான் எதிர்பாராத ஒன்று. அதனால்; எனது இரங்கல்செய்தியை தோழர் பராவின் இறுதிச்சூழலுக்குள் அனுப்பிவைத்துள்ளேன்.
—————————
புலம்பெயர்ந்து வாழ்தல் ~பாய்விரித்தால் படுத்துறங்கும் நாய்ச்சாதி| என்று பழிக்கப்பட்ட காலங்களை, அதன் ஈழஅறிவினை தூசாய்த் தட்டிவிட்டது மாற்றுக் கருத்துக்களின் முளைப்பும் அதன் தொடர்ச்சியும் என்பது நம்பக்க நியாயம். ஆம் இந்த உழைப்பு ஆரம்பகாலங்களில் வித்தாய் இடப்பட்டதில் தோழர் பரா அவர்களின் பணி புகலிடத்தில் தொடங்கிற்று.
20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு
இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்… கறுப்புப் பின்னணியில் அதன் எழுத்திருப்பு… அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம், எஸ்.ரி.என்.நாகரட்ணம் என வரைவோவியம்… முன்னால் ஒரு ஒலிவாங்கி. இருக்கைகள் நாற்திசையும் வரைந்த கோடுகளில் ஆர்வலர்கள் புள்ளிகளானார்கள். வழமையாகவே நேரத்தைக் கடைப்பிடிப்பதில் பேர்போன எமது பாரம்பரியத்திற்கு பிரான்ஸ் போக்குவரத்தின் வேலைநிறுத்தம் வேறு. நேரத்துக்கு வரத்துடித்தோரையும் அங்கங்கு ரயில் நிலையங்களிலும், வாகனநெரிசலிடை துண்டுகளாய்த் தெரிந்த வீதிகளிலும் காக்கவைத்து அரிப்புக்கொடுத்துக் கொண்டிருந்தது வேலைநிறுத்தம். Continue reading “20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு”