| 1. நிறவெறி நான் கையைக் கழுவுகிறபோது
நீரில் கலைந்த அழுக்குளைப் பார்த்து உன் நிறம் கரைகிறது என்று சொல்லிச் சிரித்தான் சகதொழிலாளி. அவனது வெள்ளைத்தோலில் அப்பிக்கொண்டிருந்தது நிறவெறி. |
Category: கவிதை
போர் பூத்த நாகரிகம்
பலஸ்தீனத்தைக் குதறுகிறது
ஏவல் நாயொன்று
றமெல்லாவின் இடிபாடுகளுள் அது
மோந்து திரிகிறது -தன் சொல்ப்
‘பயங்கரவாதிகளை’.
காட்சிகளில் லயித்துப்போய்
அமர்ந்திருக்கிறான் அதன்
எஜமானன்.
புல்டோசர்கள் கட்டடங்களை
நிதானமாகத் தகர்க்கின்றன
இடிபாடுகளை நிர்மாணிக்கின்றன
என்னவாய் இருக்கக் கோருகிறது?
புத்தாண்டு பிறக்க இன்னமும்
சில மணித்தியாலங்கள் இருக்க,
வாங்க மறந்த சம்பானியாப் போத்தலுக்காக
விரைகிறேன் நான்.
காசா மீதான இஸ்ரேலின் சண்டித்தனத்தால்
துபாய் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இல்லாமல் போன துயரில்,
தலையில் கைவைத்தபடி
குந்தியிருக்கிறான் ஒருவன்,
நகரின் மையத்தில்.
துயரங்களிலிருந்து எழல்
நெருப்புக் கோளங்களை
சமாதானப் ப+க்களுக்குள் நுழைக்கும்
குரூரவாதிகளே
உங்கள்
சமாதானத்துக்கான போரினது
வரைவிலக்கணம்தான் என்ன
சொல்லிடுங்கள்!
இருப்புச்சுழி
எனது உடையில் ஓயில் மணத்தது
உடலை வியர்வை நனைத்திருந்தது
வேலையில் நான் ஓய்ந்துவிடாதபடி இயந்திரம்
என்னை இயக்கிக் கொண்டே இருக்கும்.
விரைந்துகொண்டிருந்தேன்
ஓடிக்கொண்டிருந்தேன்
வருந்தாதே கடலே
வருந்தாதே கடலே
உன் அடிமடி பிளந்து
வெளிப்பிரசவமாகிய சுனாமிப் பயங்கரம் உன்
முதுகுமீதேறி அதிசவாரிசெய்தது.
நாம் அறிவோம்
வருந்தாதே கடலே
நீர்திருகி அலைதிரட்டி எம் வாழ்வின்
குரல்வளைவரை தாக்கியது.
உயிரோடு நீருள் புதையுண்டனர் மனிதர்கள்
சிதைவுகளுள் சொருகுண்டனர்
தப்பிப் பிழைத்தவர்கள் உறவறுந்துபோயினர்.
கதறினர் நினைவுகளை வீசி
அவர்தம் வரவை கேள்விக்குறிகளால்
வரைந்து தள்ளினர்.
வலிதாங்க முடியவில்லை.
புனைவிட வாழ்வு
இன்றும் வீடுதிரும்புதல் சாத்தியமாகிப்போக
உறவுப் பார்வைகள்
அசைந்து முளைக்கின்றன.
வீதியில்
போர்வண்டி ஒலிதேய்ந்து மறைகிறது, இருளில்
பயத்தை விட்டுச் சென்றபடி.
போரபிமானம்
அழிவுகளைக் கணக்கிட்டுக் கொள்ளும்
காலங்கள் இவை.
இராணுவவீரன் களைத்துப் போய் இருக்கிறான்.
குண்டுவீசி பெயர்த்த இடிபாடுகளின் நடுவே
இவன் ஒரு சிகரட்டையோ கட்டையோ ஊதியபடி
இளைப்பாறுகிறான்.
பதவிநடை பிசகாமல் அரசியல்வாதிகள்
ஒலிவாங்கி; நோக்கி நடக்கின்றனர்.
பத்திரிகையாளர்கள் குறிப்பெடுக்கின்றனர்.
அகதி அந்தஸ்து
அவன் கூரைமீது ஏறி நிற்கிறான்
அச்சத்தின் ஒரு முளைப்பாய்.
குளிர் குலைத்த அதிகாலைப் பொழுது
இரவு உடையில் அந்த குர்திஸ்காரன்.
கூடாய்த் தொங்கியது எமது
அகதிகள் முகாம்.
சுற்றிவர பொலிசார்
மோப்ப நாய்கள்
நிகழ்தொன்மம்
காய்ந்து உலர்ந்து வரண்டு
இந்தக் காகிதத் துண்டு இப்போதும்
பச்சைப் புல்லிடை கிடக்கிறது.
இல்லை வாழ்கிறது.
ஒவ்வொரு முறையும். அது
கண்ணில் எத்துப்படத் தவறுவதேயில்லை.