இறுகிய பனிமலைகள்
பிளந்து விழுகிறது துருவத்தில்.
சூடேறிக்கொண்டிருக்கும் பூமிபற்றி
கவலைகொள்கின்றனர் மனிதர்கள்.
ஓவியர்களின் தூரிகைகள்
எதிர்காலத்தை எட்டுகின்றன.
Author: sudumanal
எனது மனங்கொத்திப் பறவை
இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன்
எனது பிரிய மனங்கொத்திப் பறவையின்
மீள்வரவில்
நான் இலேசாகிப்போயிருக்கிறேன்.
நான் எதையும்
விசாரணை செய்வதாயில்லை.
ஏன் பறந்தாய்
ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய்
என்பதெல்லாம்
எனக்கு பொருட்டல்ல இப்போ.
நினைவுப் பெருவெளி
தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக …
மாலைநேரங்கள் பகல் பொழுதின் முடிவுரைகளாகப் போவதால் நான் காலாற நடந்துகொண்டிருந்தேன். நினைவுகளை மனது வாசித்துக்கொண்டிருக்க உணர்வுகள் எனை வருடிக்கொண்டிருந்தன. நான் அந்த வாங்கில் அமர்ந்திருந்தேன். சோலைகள் ஒளிக்கோடுகளை மெலிதாகவோ கற்றையாகவோ வரைந்துகொண்டிருந்தன. நான் அமைதியற்றிருந்தேன்.
விடைகொடல்
(தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக இந்தக் கவிதை)
இளவேனிற்காலம் தன்
சக்தியெல்லாம் திரட்டிப்
பெற்றெடுத்த தளிர்களெல்லாம்
பச்சையாய் விரிய முயற்சித்த
ஓர் பொழுதில்
நீ மட்டும் ஏன்
உதிர்ந்து விழுந்தாய்?
அம்மாவும் அப்பாவும் நானும்
நான் அப்போது இளவயதினனாய் இருந்தேன். குறும்புகள் செய்யும் பருவம் அது. அது இலங்கை வரலாற்றில் பஞ்சப் புயல் வீசிய காலம். அரை இறாத்தல் பாணுக்காக நீண்ட வரிசையில் சில்வா பேக்கரியிலும் சங்கக் கடையிலும் என முண்டியடித்த காலம் அது. இந்த பாண்வேட்டையின்பின் அன்று அதிகாலை இருளில் நானும் நண்பர்களும் எமது வாசிகசாலையில் சுவாரசியத்துக்காகக் காத்திருந்தோம்.
போய்வா அம்மா போய்வா
பெரும் தோப்பிலிருந்து குருவியொன்று
வீரிட்டுப் பறந்து வந்தது உன்
மரணச் சேதியுடன்.
அம்மா!
எனது சிறுபராயம் முதலான நினைவுகளை
அது தன் சின்னக் காலால்
கோதிக்கோதி என்
மனதைக் கசியவிட்டது.
யாரொடு நோவேன்!
ஒரு “நல்ல” மனிதனும் கட்சி அரசியலும்
– ரிபிசி கலந்துரையாடல்
- கடந்த வியாழன் (29.10.09) அன்று ரிபிசி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களுடன் ஒரு அரசியல் சந்திப்பை வானலையில் செய்திருந்தது. மொழிபெயர்ப்பில் முக்கிய பங்களிப்பை ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் பொறுப்புடன் செய்திருந்தார்.
சுனந்த தேசப்பிரிய ஆற்றிய உரை…
சூரிச் இல் [18-Oct-2009]

கடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று சூரிச் இல் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,
“இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின் எதிர்காலமும்”
என்ற தலைப்பில் சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார்.
முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்
[24-Aug-2009]

வவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு. இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது.
இரத்தம் தோய்ந்த வெற்றியும் மைபூசிய மசிரும்
[24-May-2009]

இலங்கை அரசின் ஜனாதிபதி கறுப்பு மயிருடனும் கறுப்பு மீசையுடனும் கம்பீரமாய் வருகிறார். ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கும் அவசரத்தில் விமானத்திலிருந்து இறங்கிவருகிறார். இதுவரை மண்ணைப் பிரிந்து அகதியாக இருந்ததுபோன்ற, அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு மண்ணில் முதன்முதல் காலடி வைப்பதுபோன்ற ஒரு பாவனையில் மண்ணை தொட்டு வணங்குகிறார். அவர் பரபரப்பாக இருந்தார். விமான ஓடுபாதையில் அமைச்சர் பட்டாளம் குதூகலமாய் வரவேற்றுக் கொண்டிருந்தது…
Continue reading “இரத்தம் தோய்ந்த வெற்றியும் மைபூசிய மசிரும்”