மசிருரிமை

அடித்துக் கொல்வது
அறுத்துக் கொல்வது
ஆண்குறியால் கொல்வது
கோடரியால் வெட்டிக் கொல்வது
பிணத்தைச் சுற்றி ஆர்ப்பரிப்பது… எல்லாமுமே
ஒரு நிகழ்தகவாய்
ஒரு வாழைப்பழ ஜீரணிப்பாய்
குரூரப்படும் காலங்களுடன்
கைகோர்த்துச் செல்கிறது
காட்டுமிராண்டிக் காலம்.
மனித உரிமை மசிருரிமையாய்
தூசித்து விழுகிறது.

– ரவி (25102011)

சூடேறிக்கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்

இறுகிய பனிமலைகள்
பிளந்து விழுகிறது துருவத்தில்.
சூடேறிக்கொண்டிருக்கும் பூமிபற்றி
கவலைகொள்கின்றனர் மனிதர்கள்.
ஓவியர்களின் தூரிகைகள்
எதிர்காலத்தை எட்டுகின்றன.

Continue reading “சூடேறிக்கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்”

எனது மனங்கொத்திப் பறவை

இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன்
எனது பிரிய மனங்கொத்திப் பறவையின்
மீள்வரவில்
நான் இலேசாகிப்போயிருக்கிறேன்.

நான் எதையும்
விசாரணை செய்வதாயில்லை.
ஏன் பறந்தாய்
ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய்
என்பதெல்லாம்
எனக்கு பொருட்டல்ல இப்போ.

Continue reading “எனது மனங்கொத்திப் பறவை”

நினைவுப் பெருவெளி

தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக …

மாலைநேரங்கள் பகல் பொழுதின் முடிவுரைகளாகப் போவதால் நான் காலாற நடந்துகொண்டிருந்தேன். நினைவுகளை மனது வாசித்துக்கொண்டிருக்க உணர்வுகள் எனை வருடிக்கொண்டிருந்தன. நான் அந்த வாங்கில் அமர்ந்திருந்தேன். சோலைகள் ஒளிக்கோடுகளை மெலிதாகவோ கற்றையாகவோ வரைந்துகொண்டிருந்தன. நான் அமைதியற்றிருந்தேன்.

Continue reading “நினைவுப் பெருவெளி”

விடைகொடல்

(தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக இந்தக் கவிதை)

இளவேனிற்காலம் தன்
சக்தியெல்லாம் திரட்டிப்
பெற்றெடுத்த தளிர்களெல்லாம்
பச்சையாய் விரிய முயற்சித்த
ஓர் பொழுதில்
நீ மட்டும் ஏன்
உதிர்ந்து விழுந்தாய்?

Continue reading “விடைகொடல்”

அம்மாவும் அப்பாவும் நானும்

நான் அப்போது இளவயதினனாய் இருந்தேன். குறும்புகள் செய்யும் பருவம் அது. அது இலங்கை வரலாற்றில் பஞ்சப் புயல் வீசிய காலம். அரை இறாத்தல் பாணுக்காக நீண்ட வரிசையில் சில்வா பேக்கரியிலும் சங்கக் கடையிலும் என முண்டியடித்த காலம் அது. இந்த பாண்வேட்டையின்பின் அன்று அதிகாலை இருளில் நானும் நண்பர்களும் எமது வாசிகசாலையில் சுவாரசியத்துக்காகக் காத்திருந்தோம்.

Continue reading “அம்மாவும் அப்பாவும் நானும்”

போய்வா அம்மா போய்வா

பெரும் தோப்பிலிருந்து குருவியொன்று
வீரிட்டுப் பறந்து வந்தது உன்
மரணச் சேதியுடன்.
அம்மா!
எனது சிறுபராயம் முதலான நினைவுகளை
அது தன் சின்னக் காலால்
கோதிக்கோதி என்
மனதைக் கசியவிட்டது.
யாரொடு நோவேன்!

Continue reading “போய்வா அம்மா போய்வா”

ஒரு “நல்ல” மனிதனும் கட்சி அரசியலும்

 – ரிபிசி கலந்துரையாடல்

கடந்த வியாழன் (29.10.09) அன்று ரிபிசி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன அவர்களுடன் ஒரு அரசியல் சந்திப்பை வானலையில் செய்திருந்தது. மொழிபெயர்ப்பில் முக்கிய பங்களிப்பை ஆய்வாளர் சிவலிங்கம் அவர்கள் பொறுப்புடன் செய்திருந்தார்.

சுனந்த தேசப்பிரிய ஆற்றிய உரை…

சூரிச் இல் [18-Oct-2009]

கடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று சூரிச் இல் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,

“இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின்  எதிர்காலமும்” 

என்ற தலைப்பில் சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார்.

Continue reading “சுனந்த தேசப்பிரிய ஆற்றிய உரை…”

முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்

[24-Aug-2009]

வவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு. இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது.

Continue reading “முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்”