பிரதியில் மரபும் நவீனத்துவமும்

ஏ.ஜி.யோகராஜா அவர்களின் “புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்“ நூல் வெளியீட்டு விழா சுவிஸ் இல் 20.12.2014 அன்று நடைபெற்றது. அதில் மேலுள்ள தலைப்பில் நான் ஆற்றிய உரை இது – ரவி

yoga-nool pic

எல்லோருக்கும் வணக்கம்.
புலம்பெயர் நாடக எழுத்துருக்கள் என்ற இந் நூலின் அறிமுக ஒன்றுகூடலில் நாம் இருக்கிறோம்;. நாடக எழுத்துரு பற்றிய, அதாவது பிரதி பற்றியதுதான் எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு. “நாடகப் பிரதியில் மரபும் நவீனத்துவமும்“ என்று தரப்பட்டிருக்கிறது.

கலை இலக்கிய வரலாற்றில் கிளாசிசம் முதல் இருத்தலியம் வரையிலான பல கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் உருவாகியிருக்கின்றன. மாற்றம் என்பதே மாறாதது என்பார்கள். இந்தக் கோட்பாடுகளின் உருவாக்கமும் அவ்வாறே நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த மேற்குலகக் கோட்பாடுகள் கீழைத்தேயத்துக்கு நகர்ந்து வருகிறபோது அதை எமது சூழலுக்கு எப்படி எதிர்கொள்வது என்பது சவால்களாக ஆகிவிடுவது இயல்பு.

Continue reading “பிரதியில் மரபும் நவீனத்துவமும்”

இன்று ஆழ்ந்து உறங்குதல் சாத்தியப்படுமா?

சீலனின் “வெல்வோம், அதற்காக..“ என்ற நூலை வாசித்து முடித்திருந்தேன். தமிழீழ விடுதலைக்கு என புறப்பட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) தனது தோழர்களை உட்படுகொலைசெய்வதிலும் சித்திரவதை செய்வதிலும் சக்தியை விரயமாக்கி அழிந்துபோன இயக்கம்.  அது தளத்தில் (இலங்கையில்) இயங்கியதைப் போலன்றி, பின்தளத்தில் (இந்தியாவில்) மூடுண்ட இயக்கமாக இருந்தது. இந்த இயக்கம் என்ற குகைக்குள் சிக்கிச் சுழன்ற அனுபவங்களை, துயரங்களை, அனுபவித்த கொடுமையான சித்திரவதைகளை… என சீலனின் “வெல்வோம், அதற்காக..“ பேசுகிறது. 112 பக்கங்களைக் கொண்ட இந்நூல் கற்பனையல்ல, இலக்கிய நயம் இழையோடும் கதையுமல்ல. சொந்த அனுபவங்களின் தொகுப்பு.

Continue reading “இன்று ஆழ்ந்து உறங்குதல் சாத்தியப்படுமா?”

வன்முறையே வாழ்வாய்…

ஆயுதங்கள் மனிதர்கள் மீது மட்டுமன்றி இயற்கை மீதும் பண்பாடுகள் மீதும் மனவளங்கள் மீதும் பெரும் அழிவுகளையும் பாதிப்பையும் செலுத்துகிறது. இது பெரும் துயரம். அதிகார அலகுகொண்ட ஆட்சிமுறைகள் இதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன. போர்கள், ஆக்கிரமிப்புகள், இயற்கை சூறையாடல், வளங்களின்மீதான மேலாதிக்கம் தன்னலன்கள் என இன்னபிற வடிவங்களில் அது குரூரிக்கிறது. அதனால் ஆயுதங்களின் மீது நாம் காதல்கொள்ள முடியாது.

Continue reading “வன்முறையே வாழ்வாய்…”

அரசியல் மயப்படலும் மயப்படுத்தலும்.

அரசியல் மயப்படுத்தப்படுவதைப் பற்றி பேசும்போது அரசியல்மயப்படல் என்பதை ஓரங்கட்டாமல் இருப்பது முக்கியமானது. வாழ்நிலை உணர்வுகளைத் தீர்மானிக்கிறது என்பதை அரசியல்வெளிக்கு அப்பால் வைத்து வரைவுசெய்ய முடியாது. இந்த 30 வருட யுத்தம் உருவாக்கிய புறச்சூழல் மக்களிடம் உண்டாக்கிய உணர்வலைகள் என்ன? தமது இருத்தலை பாதிக்கும் விசயங்களில் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் இயன்றளவு காட்டிவரும் எதிர்ப்பு அரசியல்மயப்படலன்றி வேறென்ன?

Continue reading “அரசியல் மயப்படலும் மயப்படுத்தலும்.”

பேய்த்தோப்புக்குள் விளக்கு !

1984 கடைசிப் பகுதி.

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரந்தராயன்குடிக்காடு கிராமம்.

கழக கமாண்டோப் பிரிவினருக்கான தொலைத்தொடர்பு முகாம்.

“பெரிய ஐயா” வருகிறார், உளவுப்படை தளபதி சங்கிலியின் பாதுகாப்புடன்.

 பெரிய ஐயா வெள்ளை வேட்டியுடன் சிவப்புநிற ரீசேர்ட் உடன் இப்போதெல்லாம் பஸ்ஸில் வந்து இறங்குவதில்லை. அவருடன் சந்ததியாரையும் காண்பதில்லை.

மோட்டார் சைக்கிள் சவாரி. கமாண்டோ யூனிபோர்ம். முன்னுக்கும் பின்னுக்கும் இன்னும் ஒருசில மோட்டார் சைக்கிள் உறுமல். ஜீப் வேறை.

Continue reading “பேய்த்தோப்புக்குள் விளக்கு !”

யாழ்நூல் நிலைய நினைவுகூரல் !

33 வருடங்கள் கடந்துவிட்டது. யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டது வரலாற்றின் மிகப் பெரும் பண்பாட்டுக் கொலை. இது ஓர் இனத்தின் அறிவுத் தளத்தின் முதகெலும்பை முறிக்கும் சதி. அதனால் அது இனப்படுகொலையின் ஒரு அங்கம்.

வசதியற்றவர்களுக்கும் அது ஒரு அறிவுப்பிரசாதமாக இருந்து கைகொடுத்திருக்கிறது. அது தலித்துகள் உட்பட விளிம்புநிலை மாந்தரையும் சென்றடைந்தது. தெற்காசியாவிலேயே மிகப்பெரும் நூல்நிலையமாக அது வளர்ந்த கதையின் பின்னால் இருந்த உழைப்புகள் அர்ப்பணிப்புகள் எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.

Continue reading “யாழ்நூல் நிலைய நினைவுகூரல் !”

ஒரு நட்புக் குறிப்பு

 

மந்திகை என்றால் பலருக்கும் “விசர் ஆஸ்பத்திரி” என்றவாறுதான் முதலில் கிளிக் பண்ணும். நமட்டாய் சிரிப்பும் வரும்.  அப்போதெல்லாம் நான் ஒரு பதில் வைத்திருந்தேன். கார் உள்ள இடத்தில்தான் கராஜ் இருக்கும்.. மூளை உள்ள இடத்தில்தான் அதுக்கான ஆஸ்பத்திரி இருக்கும் என.

 உண்மையில் அது “விசர் ஆஸ்பத்திரி“ அல்ல. பொது மருத்துவமனை. பைத்தியத்தை குணமாக்கும் முயற்சியில் தனது அறிவெல்லைக்குள் செயற்பட்ட பகுதியையும் உள்ளடக்கிய மருத்துவமனை. குழந்தைப் பேறு மருத்துவமனையும்கூட. அதன் சேவை குறைபாடுகளையும் கடந்து எப்போதுமே உயர்ந்துதான் நிற்கும். அதிலும் மனநோய்க்கான வைத்தியர்களின் சேவை எப்போதும் அர்ப்பணிப்பு நிறைந்ததாகவே எனது காலத்தில் நினைவுகூர்கிறேன்.

Continue reading “ஒரு நட்புக் குறிப்பு”

இடது வளைவு..!!

நீண்டகாலமாகவே மக்கள் சார்ந்து நியாயமாக குரல் எழுப்பி வந்தவர் வாசுதேவ நாணயக்கார. கவனிப்புப் பெற்ற இடதுசாரியாக வாழ்ந்தவர். மகிந்தவின் நண்பரான அவர் அரசுக்குள் உள்ளிழுக்கப்பட்ட காலத்திலிருந்து அவரது குரல்கள் அவஸ்தைப்பட ஆரம்பித்தன.

Continue reading “இடது வளைவு..!!”

இது ஏன் முடியாதாம்!

தமிழ் பேசும் மக்களின் எல்லாப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தாத (எல்லா இயக்கங்களினதும்) போராட்டத்தை தமிழ் மக்களின் போராட்டம் என்றுதான் அழைத்தோம். தமிழ் மக்களைப் பிரதிநித்துவப் படுத்தாத கிரிக்கெட் அணியினை இலங்கை அணி என்று அழைக்கிறோம்.

 நான் ஓர் இலங்கைப் பிரசை… அது சிங்கள மக்களினது மட்டுமல்ல, தமிழ்மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் மலையக மக்களினதும் நாடு. அந்த உரிமையை நாம்விட்டுக்கொடுக்க முடியுமா என்ன.

Continue reading “இது ஏன் முடியாதாம்!”

இராணுவப் பயிற்சி வக்கிரம்

பாடசாலை முடிந்து பிள்ளை பரீட்சை பெறுபேறுடன் வீட்டுக்கு வருகிறது. அது தன்னளவில் திருப்பதியடைந்தோ அல்லது திருப்திப்படாமலோ வருகிறது. அதைவிட அக் குழந்தையிடம் தனது பெற்றோரின் அலசல் முறையில் பயம் மேலிடுகிறது. பக்கத்துவீட்டு சக மாணவர்களின் புள்ளிகளை விசாரித்து தனது குழந்தையின் திறமை அல்லது திறமையின்மைமீது தீர்ப்பு வழங்கும் மனோபாவம்தான் அது.

Continue reading “இராணுவப் பயிற்சி வக்கிரம்”