அரசாங்கம் (government), என்பதும் அரசு (state) என்பதும் ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அதை மாத்தி மாத்திப் பாவிப்பதால் பலரும் குழப்பமடைகிறார்கள். அரசின் நிகழ்ச்சி நிரலை மக்களிடம் கொண்டுசென்று செயற்படுத்தும் முக்கியமான நிர்வாக அலகுதான் அரசாங்கம். அரசாங்கத்துக்கும் அதன் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருக்கிறதுதான். அவர்களுக்கான பலமாக அரசியல் யாப்பும் இருக்கிறது. அதன் எல்லைக்குள் அவர்கள் செயற்படுகிறபோது எந்தச் சிக்கலும் அரசு(state) க்கு இருப்பதில்லை. மக்கள் எழுச்சியும்கூட அப்படித்தான் கையாளப்படுகிறது.
Continue reading “அரசும் அரசாங்கமும்”Category: Uncategorized
அங்கீகரித்தலின் அரசியல்
எல்லாப் பிரச்சினைகளும் 2022 ஒக்ரோபர் 7 இலிருந்துதான் தொடங்கியதான ஒரு தோற்றத்துடன்தான் இன்றைய பலஸ்தீனம் -இஸ்ரேல் இடையிலான பிரச்சினைகள் அணுகப்படுவது தற்செயலானதல்ல. திட்டமிட்ட செயல் அது.
பலஸ்தீனத்தை ஓர் அரசாக அங்கீகரித்தல் என்பதே ஓர் வரலாற்றுக் கேலிதான் என்றபோதும், அதை பேசவேண்டியிருக்கிறதுதான் வரலாற்று அவலம். இஸ்ரேல் என்ற நாடு போலன்றி பலஸ்தீனம் என்ற நாடு 1948 வரை வரைபடத்தில் இருந்த ஓர் நாடு. அதை அங்கீகரிக்கிறோம் என சொல்ல வருமளவுக்கு அரசியலை தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்கள் யார். பலஸ்தீனத்தை காலனியாக்கி வைத்திருந்த பிரித்தானியர்கள்தான். 1947 இல் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அதிகார நிழலில், சியோனிஸ்டுகளின் தொடர் முயற்சியில், இஸ்ரேல் என்ற நாடு முளைத்தெழும்பியது.
Continue reading “அங்கீகரித்தலின் அரசியல்”இனி வருமா
காஸா படுகொலைக்குப் பின் உலகம் பூராவும் இஸ்ரேல் மீதான மக்களின் வெறுப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. காஸா இனப்படுகொலையை எதிர்த்து பல பேரணிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
பிரான்ஸ், பிரித்தானியா, இப்போ ஜேர்மனி என ஆட்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஏதோ முனகுவதற்கு இந்த எதிர்ப்புப் போராட்டங்கள்தான் காரணம். அது அவர்களின் பிழைப்புவாதமாக இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் போற்றத் தக்கவை. அவை ஏற்கனவே பலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்து வருபவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அயர்லாந்து காஸா படுகொலையை எதிர்த்தும் சியோனிச இஸ்ரேலை கண்டித்தும் அரசியல் ரீதியாக கிழித்து தொங்கவிட்டுக் கொண்டே இருப்பவர்கள்.
Continue reading “இனி வருமா”போக்காளி (நாவல்)
எனது வாசிப்பு
ஒரு போரின்போது மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நாட்டுக்குள் மாறிமாறி இடம்பெயர்கிறார்கள். அயல் நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். தூர தேசங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இலங்கையிலும் போர் துரத்திய தமிழ் பேசும் மக்கள் இவ்வாறே ஆனார்கள். மேற்குலகுக்கு புலம்பெயர்ந்தோர் எல்லோரும்அரசியல் அகதிகளா பொருளாதார அகதிகளா என பலர் கேள்வி எழுப்புவதுண்டு. வெறும் பொருளாதாரக் காரணிகளால் போர்ப் பிரதேசத்திலிருந்து மேற்குலகுக்கு இடம் பெயர்பவர்களை அரசியல் அகதிகள் எனலாமா என்ற விவாதம் இங்கும்கூட நடைபெறுகிற ஒன்று. பொருளாதாரப் பிரச்சினை என்பதும் ஓர் அரசியல் பிரச்சினைதான் என்ற எதிர்வாதமொன்றும் வைக்கப்படுவதுண்டு. (எனக்கு இதில் உடன்பாடு உண்டு).
இந் நாவல் இதற்கான ஒரு விடையை தருகிறதாக எனக்குப் படுகிறது. பொய்யாக ஒரு கதையைச் சொல்லி தாம் நேரடியாக இராணுவத்தாலோ புலிகளாலோ பாதிக்கப்படுவதாகக் கூறி சாதித்தாலொழிய அரசியல் தஞ்சம் கேள்விக்குள்ளாகிவிடும். அப்படியாக அகதி வாழ்வைத் தொடங்குபவர்கள் -தாம் விரும்பினாலும்கூட- தனி பொருளாதாரக் காரணிகளை நிவர்த்திக்கும் வேலையில் மட்டும் பயணிக்கவே முடியாமல் போகிறது. அது ஈழப் போராட்ட அரசியலை, அதன் சிந்தனை முறையை இழுத்துக்கொண்டுதான் பயணிக்கிறது. அது அவர்களின் புதிய வாழ்வியலையும் பாதிக்கிறது. நவமகனின் போக்காளி என்ற இந்த நாவல் அதை சிறப்பாக வெளிக் கொணர்கிறது.
Continue reading “போக்காளி (நாவல்)”சமாதானம் உருவாகுமா?
மாறிவரும் பூகோள அரசியல்
தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது அவளவு இலகுவில் முடியாமல் போனது. ஏன், இப்போதும் அது சாத்தியமற்றது என்பதிலிருந்து சாத்தியமானது என்ற எல்லைக்கள் வந்தபாடில்லை. அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என பலரும் நினைத்திருந்தார்கள். அது உண்மையில் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என்ற வியாபகத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக ரசியா இருக்கிறது என அமெரிக்காவால் ஒருபோதும் பர்க்கப்படவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலென உருவாக்கப்பட்ட புனைவுக் கதையாடலைக் கொண்டு போருக்கான சூழலை உருவாக்கி ரசிய ஆக்கிரமிப்பை சாதித்ததுதான் நடந்தது.
Continue reading “சமாதானம் உருவாகுமா?”1027
மியன்மாரில் போர்
ஊடகங்களில் உக்ரைன்-ரசியா என சுழன்றுகொண்டிருந்த போர்ச் செய்திகளை ஒக்ரோபர் 7 அன்று இஸ்ரேல்-கமாஸ் மோதல் அள்ளிக் கொண்டு போனது. பெரும் வல்லரசுகள் சம்பந்தப்பட்ட இந்தப் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஊடக சந்தடியில்லாமல் ஒக்ரோபர் 27 மியன்மாரில் போர் வெடித்திருக்கிறது.
Continue reading “1027”மோடி அழைக்கிறார் !
இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் ஆபிரிக்க ஒன்றியத்தை நிரந்தர உறுப்பினராக -அதாவது 21வது அங்கத்தவராக- சேர்த்திருக்கிறார்கள். இன்றைய ஆபிரிக்க கொந்தளிப்புகளின் காரணமாக மேற்குலகினது பிடி ஆபிரிக்காவில் தளர்வதும் மறுபுறத்தில் இந்தியா, ரசியா உட்பட சீனாவினஞது பிடி வியாபிப்பதுமாக இருக்கும் சூழலில் அவர்களுக்கான தத்தமது நலன் சார்ந்த தேவை ஆபிரிக்க யூனியனை இணைத்துக்கொள்ள இடமளித்திருக்கிறது அல்லது அவசரப்படுத்தியிருக்கிறது. இவ்வாறான பூகோள அரசியல் கள்ள நோக்கம் இருந்தாலும், ஆபிரிக்க ஒன்றியத்தையும் அந்த தளத்தில் இயங்க இடமளிப்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆபிரிக்க ஒன்றியம் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டது. அது 55 ஆபிரிக்க நாடுகளின் கூட்டணியாக உள்ளது.
Continue reading “மோடி அழைக்கிறார் !”The 2000 Sculpture
சூரிச் கலைக்கூடத்தில் (Zurich Kunsthaus)இன்னொரு கலைக்காட்சி இது!
வால்ரர் டி மரியா (Walter De Maria) என்ற அமெரிக்க சிற்பக் கலைஞரின் நிலச் சிற்பம் (Land Sculpture) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2000 எண்ணிக்கைகள் கொண்ட (5, 7 அல்லது 9 பக்க) பன்முக Gips உருளைகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உருளையும் 50 செ.மீ நீளம், 11.8 இலிருந்து 12 செ.மீ உயரம்.
Continue reading “The 2000 Sculpture”சோஃபியின் உலகம்
- நூல் மீதான வாசிப்பு
01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.

சோபியின் உலகம்.
நோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்கிறது.
சும்மா காலமும் பட்டையடியும்

ஓபாமாவின் மகள் Sasha (16) படிப்பில் ஈடுபடும் அதேநேரத்தில் கடலுணவு விடுதியொன்றில் பகுதிநேர வேலைசெய்வதை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் (இலங்கையர், இந்தியர்) பகிர்ந்துள்ளனர். நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த விடயத்தை இது நினைவுபடுத்தியுள்ளது.





