இனி.. ?

VDO

https://www.srf.ch/play/tv/popupvideoplayer?id=e3911c84-38a2-42e7-b456-d9c31f4de65d

paster

இந்த கடவுளின் தூதனுக்கு (Pastor) வயது 62. தமிழன். பெயர் வில்லியம்ஸ். தமிழுலகை உய்விக்க அவன் GGMCI என்ற Tamil Evangelical Church இனை Bern (swiss) இல் ஆரம்பித்து தனது சேவையைத் தொடங்குகிறான். அடங்காத சேவை மனசு அவனுக்கு. தனது கிளைகளை யேர்மனி, பிரான்ஸ், கொலன்ட், நோர்வே போன்ற நாடுகளிலும் படரவிட்டு அருளொளிச் சோதியை பாவப்பட்ட அகதித் தமிழருக்காக பரவவிடுகிறான். இந்த ஐந்து நாடுகளிலும் 25 தேவாலயங்களை ஆண்டவன் அவனிடம் ஒப்படைக்கிறான். இளம் பெண்கள் உட்பட பல தமிழ் மாந்தர்கள் தேவதூதனிடம் தம்மை ஒப்புக் கொடுக்க திரள்கின்றனர்.

Continue reading “இனி.. ?”

என்ன செய்வது !

அண்மையில் எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை சட்டென அடையாளம் கண்டுவிட்டார், நம்மட தலையில் மயிர் போனபின்னும்!. எனக்கு அவரை தெரியவில்லை. “உங்களை நான் 28 வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். என்னைத் தெரியுதா” என கேட்டார். “தெரியவில்லை” என்றேன். “ஞாபகமிருக்கா, உங்கள் நண்பர் எக்ஸ் (புனைபெயர்) இன் கல்யாணவீட்டில் பிரச்சினை எழும்பினது. தாலி கட்டாமல், ஐயர் இல்லாமல் செய்த கல்யாணம். பரிசுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று அறிவித்து நடந்த கல்யாணம். பிரச்சினைப்பட்டது நாங்கதான். உங்கட நண்பர் என்ரை உறவினர்” என்றார்.

இப்ப தெரியுது என்றேன். தமிழ்க் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவருக்கு அந்த சம்பவம் நேற்றுப்போல இருந்திருக்கலாம். நமக்கெல்லாம் கடந்து சென்றுவிட்ட சம்பவங்கள் அவை. “நான் செய்தது சரியானது” என்று வேறு இப்பவும் அவர் ஒப்ப, நான் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தேன்.

Continue reading “என்ன செய்வது !”

சும்மா

நான் படித்த பாடசாலைக்கு சுமார் 100 மீற்றருக்குள் கடலில் அலைகள் ஓயாது நீந்திக்கொண்டிருக்கும். அவை நீர்த்திவலைகளை பாறைகளின் மேல் அள்ளி வீசியபடி இருக்க, நீர்மேவி வரும் காற்று சிலிர்த்தெழுந்து அலையின் ஓசையை எனது பாடசாலைவரை காவிவரும். எமது இரசனைக்காக ஏங்குவதுபோல் அலைகள் மூச்செறிந்து அழைக்கும் ஓசைக்கு எதிர்த்திசையில் நடந்து பக்கத்து கோவிலின் தேர்முட்டிப் படியில் எமது மதிய உணவை உட்கொள்வோம். மூடி தனியே அகலா அந்த சதுர பிளாஸ்ரிக் பெட்டியை அரசமர சலசலப்புக்குக் கீழே வாசனையை முகரத் துடிக்கும் காற்றினை விலத்தி, திறந்து சாப்பிட்டுக்கொண்டிருப்போம்.

Continue reading “சும்மா”

சுவிஸ் – வரலாற்றின் பொத்தல்கள்.

There is no short-cut to the revision of a country’s history – Hans Fässler

slave trade

“சுவிற்சர்லாந்து காலனியாதிக்கத்தில் பங்கேற்காத நாடு அடிமைகளை கொள்ளாத நாடு” என்று சொல்லப்படுகிறது. அது நேரடியாக கொலனிகளை வைத்திருக்காததால் அப்படி ஒரு தோற்றப்பாடு உள்ளது. இதற்கு மாறாக திரைமறைவில் இருந்த விவகாரம் அல்லது உண்மை சுவிசில் படிப்படியாக பேசப்படுகிற பொருளாக மாறியுள்ளது.

Continue reading “சுவிஸ் – வரலாற்றின் பொத்தல்கள்.”

பால்ய நண்பன் புஸ்பராஜாவுக்கு சமர்ப்பணம்.

தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு இளைஞர்களில் ஒரு பகுதியினரை அழைத்துச் சென்ற காரணிகளில் தரப்படுத்தலும் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. தேசிய இன அடிப்படையில் ஒடுக்கப்பட்ட ஓர் இனம் போராட்டத்தில் முன்முனைப்புடன் சம்பந்தப்பட்டதற்கான பன்மைக் காரணங்களில் அதுவும் ஒன்று. ஆனாலும் “யாழ்ப்பாணத்தார் தமது நலனின் அடிப்படையில் தரப்படுத்தலுக்காக தமிழீழப் போராட்டத்தைத் தொடங்கி, (தரப்படுத்தலால் நன்மையடைந்தவர்களை) மற்றவர்களை இந்த போராட்டத்துள் இழுத்துப் போட்டார்கள்” என்று அதை மொழியாக்கம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Continue reading “பால்ய நண்பன் புஸ்பராஜாவுக்கு சமர்ப்பணம்.”

கூச்சல்

ஒருமுறை வேலைநிமிர்த்தம் இங்கு (சுவிஸ்) வந்த பெங்களூர் நண்பர் ஒருவர் தமிழீழத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவித்துவிட்டிருந்தால் இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா..“ என அங்கலாய்த்தார். அவரிடம் நான் சொன்ன பதில், “அப்பிடியொரு நிலை வந்தால் இந்திய மாநிலமாக இருப்பதைவிட நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதற்காக போராட வேண்டி ஏற்படும்.“ என.
Continue reading “கூச்சல்”

யூலைக்கால நினைவுக் குறிப்பு

1983 யூலை கடைசிப் பகுதி. இரத்மலானை விமான நிலையம் அகதிமுகாமாக உருமாறியிருந்தது. ஆயிரக்கணக்கான அகதிகள். குழந்தைமையிலிருந்து கிழம்வரை பருவமுற்றிருந்தனர் அவர்கள். நாம் 55 பேரும் ஓரிடத்தில் குழவாகியிருந்தோம். படுக்கை, இருப்பு எல்லாம் அந்த இடத்துண்டை எமது பிரதேசமாக ஆக்கியிருந்தது. அனைவரும் மொரட்டுவ பல்கலைக் கழகத்திலிருந்து பத்திரமாக கொண்டுவரப்பட்டிருந்தோம். எம்மாலான உதவிப் பணிகளில் நாம் அநேகமாக ஓய்வற்றிருந்தோம். ஒரு கண்டத்தை கடந்து வந்ததான நினைப்பு எல்லாக் களைப்பையும் வெற்றிகொண்டது.

Continue reading “யூலைக்கால நினைவுக் குறிப்பு”

அது அழியா!

candle

பத்து வருடங்களுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் ‘உலகம் முடிகிற இடமாக அமைந்து’ காவுகொண்ட உயிர்களை நினைவுகூர்கிறேன். அது ஓர் இனப்படுகொலை என (என்போல்) வரைபுசெய்பவர்களோ, கூட்டுப் படுகொலை என வரைபுசெய்பவர்களோ எவர்களாகிலும் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்வதில் ஒரே புள்ளியில்தான் நிற்க முடியும்.

Continue reading “அது அழியா!”

துயரம்

srilanka-isis-superJumbo

இலங்கைப் பேரினவாத அரசு சிறுபான்மை இனங்களை பிரித்து வைத்து ஆடும் சதுரங்கத்தில் இன்று பலரும் அகப்பட்டிருக்கிறோம். போர் சப்பித் துப்பிய முன்னாள் போராளிகளை அழைத்து இராணுவம் சந்திப்புகளை நடத்துகிறது. இணைந்து வேலைசெய்ய அழைப்பு விடுத்ததாக செய்தி வருகிறது. இவளவு பெருந்தொகையான இராணுவத்தை வைத்துக்கொண்டு, 30 வருட போரை சந்தித்ததின் மூலம் மரபுப்படையணியாக இருந்த இராணுவம் கெரில்லாமுறை உத்திகளோடு அதை களத்திலேயே புலிகளோடு களமாடி கற்றுக்கொண்டது. இவ்வாறான திறமை வாய்ந்தததாக இருந்துகொண்டு ஏன் முன்னாள் போராளிகளை அழைக்கிறார்கள்.

Continue reading “துயரம்”

நிகழ்வுகளின் கொடுநிழல்

Sri-Lanka-attack

நேற்றைய தினம் (21.04.2019) இலங்கை வரலாற்றில் பயங்கரவாதம் இன்னொரு பரிமாணத்தை நிறுவியிருக்கிற அச்சம்தரும் நாளாகியது. பெரும்பாலும் உதிரிப் பயங்கரவாத தாக்குதல்கள் அல்ல இவை என்பதை தாக்குதலின் எண்ணிக்கைகளும் அதன் தன்மைகளும் நேரத் திட்டமிடல்களும் நாட்தேர்வும் குண்டுகளின் வலுவான சேதம் தருகிற தன்மைகளும் தற்கொலைத் தாக்குதலும் உணர்த்துகின்றன. எனவே இது இலங்கைக்குள்ளால் திடீரென கிளம்பிய பூதமல்ல. இதற்கு ஒரு அந்நியப் பின்னணி இருக்க சாத்தியம் இருக்கிறது.

Continue reading “நிகழ்வுகளின் கொடுநிழல்”