குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்!
*
குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்
மரணித்த குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மக்களுக்கு அந்தப் பெயர்கள் தெரியக் கூடாது
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் மறைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாக இருக்க வேண்டும்
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாகவே இந்த
உலகத்தை விட்டு நீங்க வேண்டும்
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயர் எவருக்குமே தெரியக் கூடாது.
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயரை எவருமே உச்சரிக்கக் கூடாது
அந்தக் குழந்தைகளுக்கு பெயர்கள் இருந்தன என்பதை
நினைத்துப் பார்க்கவும் கூடாது.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
தெரிந்து வைத்திருப்பது ஆபத்தானது என்பதை
மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை தெரிந்து வைப்பதிலிருந்து
மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் ஒரு
காட்டுத் தீயைப் போல பரவிவிடக் கூடும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
மக்கள் தெரிந்து கொண்டால் அது
அவர்களுக்கு பாதுகாப்பற்றது
மரணித்த அந்தக் குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைவுகூராதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைக்காதீர்கள்
அவர்களை,
“மரணித்த குழந்தைகள்” என சொல்லாதீர்கள்!
Category: முகநூல் குறிப்பு
நம்பிக்கை
நம்பிக்கை என்பது தர்க்க விஞ்ஞானத்துக்கு உட்பட்டதாக வளர்ந்து கொள்கிறபோது அது யதார்த்தமாகப் பரிணமிக்கிற சாத்தியப்பாடுகளை கொண்டிருக்கும். இல்லாதபோது அது மத நம்பிக்கை போன்று உளத்துள் உலாவுகிற அல்லது உளத்துக்கு அமைதி தருகிற நம்பிக்கையாக தேங்கிவிடும்.
Continue reading “நம்பிக்கை”வருக!
வருக!
தற்போதைய ஜேவிபியை ஒரு கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ற், சோசலிஸ்ட் கட்சி என்றெல்லாம் விளிப்பது அதீதம். ஜேவிபியின் சிற்பியான தோழர் ரோகண விஜயவீரா கால அடிச்சுவட்டிலிலிருந்து இந்தச் சிவப்பு நிறம் தொற்றிக் கொண்டதால், இப்போதும் அப்படி சுட்ட பலரும் தயங்கவில்லை. அது அபத்தம் நிறைந்தது. எனவே (அல்ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் சுட்டுகிற) அநுர ஒரு மார்க்ஸியத் தலைவர் என்ற லேபலில் மகிழ்ச்சி இல்லை. மார்க்ஸியத்தை அது கொச்சைப்படுத்துவதாகும்.
Continue reading “வருக!”ஓகஸ்ட்-1
ஓகஸ்ட்-1 சுவிற்சர்லாந்தின் தேசிய தினம். சுவிஸின் 4 மொழிகளிலும் தேசிய கீதம் ஒலிக்கிறது. அந்தந்த கன்ரோன்களில் (மாநிலங்களில்) பெரும்பான்மையினரால் பேசப்படுகிற மொழி பாடசாலையில், நிர்வாக அலுவல்களில், வீதிப் போக்குவரத்து அறிவிப்புகளில் என எல்லாவற்றிலும் முதன் மொழியாக இருக்கிறது. எல்லா மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் முறைமையிலான, தனிநபர் ஆட்சியதிகார முறைமையில்லாத 7 பேர் கொண்ட உயர் ஆட்சியதிகார அமைப்பும் தேசியப் பாராளுமன்றமும் கன்ரோன் பாராளுமன்றங்களும் என அதிகாரப் பரவலாக்க கட்டமைப்புக் கொண்டு நாடு இயங்குகிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சினையை தீர்க்க முன்மொழியப்படக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு கொண்ட இந்த நாட்டில் அகதிகளாக ஈழத் தமிழர்கள் வந்தடைந்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது.
Continue reading “ஓகஸ்ட்-1”எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?
ஹவார்ட் !
எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?
24.05.24 அன்று ஹவார்ட் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஸ்ருதி குமார் ஆற்றிய உரை பலரையும் கட்டிப் போட்டது. மிகத் தெளிவாக தனது உரையை, தான் கொணர்ந்த குறிப்புக்கு வெளியேயும் போய் முன்வைத்தார்.
Continue reading “எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?”பறத்தலும் ஊர்தலும்
வீட்டு பல்கனியை எட்டிப்பார்க்கும் மரக்கிளையில் சிட்டுக் குருவிகளுக்கான தீனை ஒரு சிறு மரவீடு செய்து அதற்குள் இடுவது எனது வழமையாக இருந்தது. பனிப்பொழிவில் அது உணவுதேடி அந்தரப்படுவதை காண சகிக்கவில்லை. அதிலிருந்து அந்த சிறுவீட்டில் தீன்தானம் தொடங்கியது. படபடக்கும் சிற்றிறகையும் அதன் சிறு அலகின் இசையசைவையும் எனது ரசிகன் பார்த்துக்கொண்டு இருப்பான். இப்படியே ஒரு வெயில்கால பருவத்திலும் நான் தொடர்ந்து செய்ததைக் கண்ட அயலவன் “இப் பருவ காலத்தில் பறவைகள் சுயமாக உணவுதேடக்கூடியன. அதற்கான அதனது உழைப்பை இல்லாமலாக்கி சோம்பேறிகளாக்கிவிடாதே” என சொன்னான். உறைத்தது. இயற்கை மீதான இன்னொரு புரிதலாக அது இருந்தது. ஒரு வாழ்க்கைப் பாடமாகவும் இருந்தது.
Continue reading “பறத்தலும் ஊர்தலும்”ஆதரிப்போம் !
கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐநா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலாதிக்க நலனையும் நயவஞ்சகத்தையும் உள்நிறுத்தி அரசியல்வாதிகளும் அரசும் பேசும் ஜனநாயகம் வார்த்தை ஜாலங்களாக தொடர்கின்றன. மக்கள் வீதிக்கு இறங்கி பெரும் ஊர்வலங்களை நடத்தியும் பார்த்தார்கள். எல்லா இயலாமைகளும் கடைசியில் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட நிலைதான் இன்றைய காட்சிகள்.
Continue reading “ஆதரிப்போம் !”தடங்களில் அலைதல்
நூல் அறிமுகம்
“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன்.
என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார்.
Continue reading “தடங்களில் அலைதல்”மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!
யாழ் பல்கலைக்கழக வளவுக்குள் நடந்த திரைப்பட விழாவொன்றுக்கு ஒருவர் அரைக் காற்சட்டையோடு போக அனுமதிக்கப்படாத விவகாரம் சமூகவலைத் தளங்களில் பெரும் பேசு பொருளாக வலம்வந்து கொண்டிருக்கிறது. இச் சம்பவம் குறித்து கருத்துச் சொல்ல நான் முனையவில்லை. இந்த சம்பவம் எதை வெளிப்படுத்துகிறது என்று பார்க்க முயல்கிறேன்.
Continue reading “மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!”மாவீரர் தினம்
2023

P. Duvaraga & AI Duvaraga
விமர்சனம் என்பது வரலாற்றை மறுத்தல் அல்ல. வரலாற்றின் மீது நின்று பேசுதல் ஆகும். தமிழீழ விடுதலைக்காக போராடிய இயக்கங்களுக்கு ஒரு வரலாறு இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு ஒரு நீள் வரலாறு இருந்தது. அதற்குள்ளும் ஒரு வரலாறு உள்ளோட்டமாய் இருந்தது. மண்ணுக்காக மடிந்தோர் எல்லோரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்தான். மரணித்த போராளிகளின் உறவினர்கள் இந்த மாவீரர் நாளில் விடும் கண்ணீர் ஆத்மார்த்தமானது என்பதும் உண்மை. அதை வைத்து ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை சென்ரிமென்ராக எழுத முடியாது. அதில் பிரயோசனம் இல்லை.
Continue reading “மாவீரர் தினம்”



