Category: முகநூல் குறிப்பு
முன்னிலை சோசலிசக் கட்சி – ஓர் அவதானிப்பு
1983 யூலை 26. தீமூண்டெழுந்த கொழும்பு புறநகர்ப் பகுதியின் புகைமண்டலத்தை அப்போ காண்கிறோம் நாம். அதேவேகத்தில் தமிழ் சிங்கள கலவரம் என்ற செய்தியும் எட்டிவிடுகிறது. பல்கலைக்கழகத்தின் விடுதியில் நாம் (55 தமிழர்கள்) இருளத் தொடங்கினோம். பயம். சுற்றிவர சிங்கள மக்கள் வாள்களுடனும் பொல்லுகளுடனும் நிற்பதாக கதைகள் தைத்துக்கொண்டிருந்தன.இரவாகியது. எம்மை விடுதிக்குள் இருக்கும்படி கூறுகிறார்கள் அந்த சில சிங்கள சக மாணவர்கள். அங்குமிங்கும் ஓடித்திரிந்தார்கள். இரவுச் சாப்பாட்டை பார்சலாகக் கொண்டுவந்தார்கள். லைற் எதையும் போடவேண்டாம் என்ற எச்சரிக்கையுடன், பயம் காவிய எமது முகங்களை விடியும்வரை யன்னலோரம் தொங்கப்போட்டிருந்தோம். விடியும்வரை அந்த மாணவர்கள் கொட்டன்களுடன் எமது விடுதியைச் சுற்றி காவல் காத்தார்கள்.
ஆசைஆசையாய் வருகிறது – ஒரு றிசானாக் குறிப்பு
கம்பளிப்பூச்சியை கையிலேந்தி அதன் மென்மையை லயித்திருந்த அந்தச் சிறுவயதில் என் அப்பா கடவுளை அறிமுகமாக்கினார். இந்த உயிரினங்களின் மீதான என் நேசிப்பில் கடவுளில் பிரியமானேன் நான். கடவுள் உயிரினங்களை சிருஷ்டித்ததாக எனக்கு அறிமுகம் செய்தார். எல்லாக் கடவுளர்களும் சிருஷ்டிகள்.. படைப்பாளிகள்… அதனால் மனிதர்கள் உயிர்களை அழிப்பது பாவம் என்பார்.
Continue reading “ஆசைஆசையாய் வருகிறது – ஒரு றிசானாக் குறிப்பு”
எந்த “மாற்று” இது?
அரசு(கள்) என்பதே ஒரு வன்முறை இயந்திரம். அதன் விளைபொருளாக எதிர்ப் பயங்கரவாதம் உருவாகுவது ஒன்றும் அதிசயமல்ல. இலங்கையில் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஒரு பகுதியினரால் தமிழ்மக்களுக்கான போராட்டமாகவும் இன்னொரு பகுதியினரால் பயங்கரவாதமாகவும் வரைவுசெய்யப்பட்டது. எது எப்படியோ புலிகளின் அழிவு (ஆயுதரீதியிலான இயங்குதளம்) முற்றாக 2009 உடன் முடிந்துபோயிருக்கிறது. தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுத்துவிட புலிகளே தடையாக இருக்கின்றனர் என்ற அரசின் அல்லது அரச ஆதரவாளர்களின் வாதத்தை இந்த 3 ஆண்டுகள் பரிட்சைக்காலமாக எடுத்துக்கொண்டால் பெறுபேறுகள் என்னவாக இருக்கிறது? கடைசியில் நடந்துள்ள வைத்தியர் சங்கரின் கைது பற்றிய செய்தி இன்னமும் உலரவில்லை.
மசிரைவிட்டான் சிங்கன்!
அனுமதிபெற்று இரவு முழுவதும் நடமாடும் சுதந்திரத்தை திருவிழா கூத்து.. என ஒருசில சந்தர்ப்பங்களே வழங்கிய காலம் அது. நாம் இளசுகளாக இருந்தோம். ஓர் அரச நாடகத்தின் சாட்டு அன்று கிடைத்தது. இரவுகளை உரசி உரசி கூக்கிரலிட்டு சத்தமாய்க் கதைத்து நாம் களித்திருந்தோம். நாடகம் தொடங்கி… அதுவாய்ப் போய்க்கொண்டிருந்தது. நாம் அரைவாசி கவனத்தை நாடகத்தில் விட்டிருந்தோம். அரசன் அட்டகாசமாய் வரும்போதெல்லாம் நாம் கதைக்காமல் இருந்தோம். வாள்வீசி குதித்து விழும் காட்சிகளில் நமது நரம்பை ஏதோ தட்டிக்கொண்டிருந்தது.
இது தேவைதானா?
// டெல்லி மாணவி பாதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது சொந்தப் பெயர், புகைப்படம், இருப்பிடம் குறித்த எந்தத் தகவலுவும் வெளிவரவில்லை. தற்போது அவளது இறப்பிற்குப் பின்பும் கூட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை.//- http://www.facebook.com/cimi.meena.3/posts/592299927453159
இது தேவைதானா?