சுவிஸ் கட்டடக் கலைஞனான பீற்றர் வெற்ஷ் (Peter Vetsch) இன் படைப்பாக்கம் இது. “நிலவீடு” என அழைக்கப்படும் இந்த கட்டடத் தொகுதியை அவர் டியற்றிக்கோன் (சூரிச்) இல் அமைத்து இந்த ஆண்டுடன் 30 வருடங்களாகியிருக்கிறது. அதைக் கொண்டாடும் விதத்தில் நிலம் பூத்த அந்தக் கட்டடக்கலையின் நினைவாக திரும்பவும் அவை பேசப்படுகிற பொருளாக செய்திகளில் வருகிறது.
Continue reading “நிலவீடுகள் (Earth Hause)”Category: பதிவு
கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது!
Continue reading “கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது.”நிம்மதியாக இருக்கப்போவதில்லை!
இந்திய வரலாற்றாசிரியரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விஜய் பிரசாத் அவர்கள் “இஸ்ரேல் ஓரரசு தீர்வையோ ஈரரசு தீர்வையோ ஏற்றுக் கொள்பவர்களாக இல்லை. உண்மையில் அவர்கள் மூவரசு கொள்கைையையே கொண்டுள்ளனர்” என்கிறார். ஓரரசு என்பது பலஸ்தீன பிரதேசத்தை தன்னுள் விழுங்கி, முழுவதுமான ஒரேயொரு அரசாக -இஸ்ரேலிய அரசாக- நிர்மாணிக்கும் திட்டமாகும். ஈரரசு என்பது ஐநாவாலும் யசீர் அரபாத் இனாலும் இறுதியாக 1993 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படியான பலஸ்தீனம், இஸ்ரேல் என இரண்டு அரசுகளைக் கொண்ட திட்டாகும்.
Continue reading “நிம்மதியாக இருக்கப்போவதில்லை!”காஸா குழந்தைகள்
குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்!
*
குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்
மரணித்த குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மக்களுக்கு அந்தப் பெயர்கள் தெரியக் கூடாது
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் மறைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாக இருக்க வேண்டும்
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாகவே இந்த
உலகத்தை விட்டு நீங்க வேண்டும்
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயர் எவருக்குமே தெரியக் கூடாது.
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயரை எவருமே உச்சரிக்கக் கூடாது
அந்தக் குழந்தைகளுக்கு பெயர்கள் இருந்தன என்பதை
நினைத்துப் பார்க்கவும் கூடாது.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
தெரிந்து வைத்திருப்பது ஆபத்தானது என்பதை
மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை தெரிந்து வைப்பதிலிருந்து
மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் ஒரு
காட்டுத் தீயைப் போல பரவிவிடக் கூடும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
மக்கள் தெரிந்து கொண்டால் அது
அவர்களுக்கு பாதுகாப்பற்றது
மரணித்த அந்தக் குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைவுகூராதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைக்காதீர்கள்
அவர்களை,
“மரணித்த குழந்தைகள்” என சொல்லாதீர்கள்!
முரளி & முகுந்தனை சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!.
இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார்.
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்சியின் முடிவு இது ஒரு திட்டமிட்ட கொலை என்கிறது. இது கொலை என்ற கோணத்தில் இன்று வரை காவல்துறையினர் விசாரிக்க மறந்ததால் கொலைக்காரர்களும் இன்றுவரை பிடிபடவில்லை.
Continue reading “முரளி & முகுந்தனை சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?”வரவேற்போம்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் 2025
“போரின்றி அமையாது இவ் உலகு” என்ற எல்லைக்கு இந்த உலகம் பயணிக்கத் தொடங்கி நூற்றாண்டுகளாகிவிட்டது. இருந்த போதும் போருக்கு எதிரான குரல்களுக்கும் அதே வயதுதான். போர் வெற்றி என்பது ஓட்டை ஒடிசல் பாத்திரத்தில் இசை அமைத்து, அதை இனிமையானது என அரசுகளும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பரப்பும் செய்தி. அவை மக்கள் இழந்த வாழ்வு குறித்தும் உளவியல் நெருக்கடிகள் குறித்தும், பண்பாட்டு அழிவுகள் குறித்தும் கணக்கெடுப்பதில்லை.
Continue reading “வரவேற்போம்!”10
“வாசிப்பும் உரையாடலும்-சூரிச்”
பத்தாவது ஆண்டை கடந்துவிட்டிருக்கிறது!
2014 இல் ஒருநாள் சயந்தன் என்னை அழைத்து இப்படியோர் அமைப்பை உருவாக்க தாம் மூவர் யோசித்திருப்பதாக சொல்லி, எனது பங்குபற்றலையும் கோரினார். உற்சாகமாக இருந்தது. முதல் சந்திப்பில் நாம் நால்வர்தான் பங்குகொண்டோம். இரண்டாவது சந்திப்பில் கொஞ்சம் பேர் பங்குபற்றினார்கள். இந் நிலை கொஞ்சம் நீடிக்கவே செய்தது. விடாப்பிடியாக இதை தொடர்ந்தோம். பிறகு இது பலரின் பங்குபற்றலுடன் மிக உற்சாகமாகவும் வாசிப்பு மனநிலையை ஊக்குவிப்பதாகவும் வளர்ச்சி பெற்றது.
Continue reading “10”வருக!
வருக!
தற்போதைய ஜேவிபியை ஒரு கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ற், சோசலிஸ்ட் கட்சி என்றெல்லாம் விளிப்பது அதீதம். ஜேவிபியின் சிற்பியான தோழர் ரோகண விஜயவீரா கால அடிச்சுவட்டிலிலிருந்து இந்தச் சிவப்பு நிறம் தொற்றிக் கொண்டதால், இப்போதும் அப்படி சுட்ட பலரும் தயங்கவில்லை. அது அபத்தம் நிறைந்தது. எனவே (அல்ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் சுட்டுகிற) அநுர ஒரு மார்க்ஸியத் தலைவர் என்ற லேபலில் மகிழ்ச்சி இல்லை. மார்க்ஸியத்தை அது கொச்சைப்படுத்துவதாகும்.
Continue reading “வருக!”ஓகஸ்ட்-1
ஓகஸ்ட்-1 சுவிற்சர்லாந்தின் தேசிய தினம். சுவிஸின் 4 மொழிகளிலும் தேசிய கீதம் ஒலிக்கிறது. அந்தந்த கன்ரோன்களில் (மாநிலங்களில்) பெரும்பான்மையினரால் பேசப்படுகிற மொழி பாடசாலையில், நிர்வாக அலுவல்களில், வீதிப் போக்குவரத்து அறிவிப்புகளில் என எல்லாவற்றிலும் முதன் மொழியாக இருக்கிறது. எல்லா மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் முறைமையிலான, தனிநபர் ஆட்சியதிகார முறைமையில்லாத 7 பேர் கொண்ட உயர் ஆட்சியதிகார அமைப்பும் தேசியப் பாராளுமன்றமும் கன்ரோன் பாராளுமன்றங்களும் என அதிகாரப் பரவலாக்க கட்டமைப்புக் கொண்டு நாடு இயங்குகிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சினையை தீர்க்க முன்மொழியப்படக்கூடிய வலுவான அரசியல் கட்டமைப்பு கொண்ட இந்த நாட்டில் அகதிகளாக ஈழத் தமிழர்கள் வந்தடைந்து நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது.
Continue reading “ஓகஸ்ட்-1”“மலையகா” நூல் அறிமுகம்
சூரிச் சந்திப்பு

30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் சூரிச் இல் 14:30 மணி தொடங்கி 18:00 மணிவரை ஓர் ஆர்வமூட்டும் சந்திப்பாக நடந்து முடிந்தது. 70 களில் தொடங்கி 2015 வரையான காலப் பகுதியில் 23 மலையகப் பெண்களால்/ எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 42 கதைகளை கொண்ட இத் தொகுப்பு நூல் “ஊடறு” வெளியீடாக வந்திருந்தது. மலையகம்-200 நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் இணைத்துக் கொண்ட இத் தொகுப்புக் குறித்தான சந்திப்பாக நேற்றைய சந்திப்பு அமைந்தது.
Continue reading ““மலையகா” நூல் அறிமுகம்”





