வாழ்வின் மீதான எளிய பாடல்கள்

– ஓர் அறிமுகக் குறிப்பு

நதிகள் கல்லானதை
பறவைகள் அழுததை
அடர்ந்த காடுகள் சிறகசைத்துப் பறந்ததை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?

முன்னைய கடவுள்கள் புதையுண்டதையும்
புதிய கடவுள்கள்
இருண்ட இரவில் ஆகாயத்திலிருந்து
உடல் நிர்வாணமாகவும்
உடல் கவசங்களோடும்
கடும் கோபமாகவும்
கடும் மகிழ்ச்சியாகவும்
இறங்கியதை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
…..

Continue reading “வாழ்வின் மீதான எளிய பாடல்கள்”

“கொரில்லா” – உள்ளும் புறமும்…

– ஒரு குறிப்பு-

ஷோபாசக்தியின் கொரில்லா நாவலிற்கான அடையாளத்தினை சாதிக் கொடுக்கும்போது இந்த எதிர்பார்ப்பை தந்து நாவலுக்குள் அனுப்புகிறார்.
ஊத்தையர்களோடு ஊத்தையர்களாக… விளிம்புநிலை வாழ்வை வரித்துக் கொண்ட… என்றெல்லாம் அடையாளம் ஷோபாசக்தியை அறிமுகம் செய்கிறது. பொருளாதார ரீதியிலும் வசதிவாய்ப்புகளிலும் ஏன் வேலை இல்லாதவனுக்கும் சமூகநலன் உதவியும் சமூக உத்தரவாதமும் இருக்கும் ஒரு நாட்டில் ஊத்தையனாக இருந்து தன்னை விளிம்புநிலை மனிதனாக காட்டவேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை.

Continue reading ““கொரில்லா” – உள்ளும் புறமும்…”

எனது பார்வையில் “செட்டை கழற்றிய நாங்கள்”

சந்திரவதனா செல்வகுமாரன்  (யேர்மனி)

95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.

செட்டை கழற்றிய நாங்கள் – கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல – ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.

சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.

Continue reading “எனது பார்வையில் “செட்டை கழற்றிய நாங்கள்””