காய்ந்து உலர்ந்து வரண்டு
இந்தக் காகிதத் துண்டு இப்போதும்
பச்சைப் புல்லிடை கிடக்கிறது.
இல்லை வாழ்கிறது.
ஒவ்வொரு முறையும். அது
கண்ணில் எத்துப்படத் தவறுவதேயில்லை.
Author: sudumanal
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி
தனதும் தன் பற்றியதுமான அத்தாட்சிப் பத்திரங்களுக்கு
கொழும்பிடம் விண்ணப்பித்தபடி
அகதியாகிறான் இவன்.
புலம்பெயர் தேசத்தில்
காசு கேட்டு வருகிறான் தமிழ்மக்களுக்காக
இவன்களிலொருவன்.
மேதினச் செய்தி 2005
ஊடகவியலாளரின் வெளி
இயலற்றுப்போனதாலோ என்னவோ
ஊடகர் என வலுவிழந்திற்று அந்த வார்த்தை.
பொருத்தமானதுதான்.
சினிமா இன்றி தமிழ்த் தொலைக்காட்சி
அணுவளவும் அசையாது
என்றதான இருப்பில் கனவுகள்
விற்கப்படுகின்றன புகலிட தேசத்திலும்.
சும்மா
ஒவ்வொரு அழிவின்போதும் அவர்கள்
நாலு வார்த்தைகளுடனும்
கையில் ஒரு கொப்பியுடனும் வந்து போகிறார்கள்.
சாவை நினைத்து அழுகிறது மனம்.
என்னுள் ஏதோவோர் குற்றவுணர்வை
புதைத்துவிட்டேனும் தம்மைச் சாதிக்க
பயிற்சி எடுக்கிறது அவர்களின் வார்த்தைகள்.
அலைப் போர்
இன்னுமென்னால் கற்பனை பண்ண முடியவில்லை
நாளுக்கு நாள் பெருகும் செய்திகளினூடு
நான்
பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
முடியவில்லை, இந்தக் காட்சியை
கற்பனையுள் வார்த்துக் கொள்ள.
அலைகள் இராட்சதித்து
மண்ணில் புகுந்து
நிகழ்த்தியாயிற்று ஒரு அலைப் போர்.
ப+மியின் மீதான ஒரு பிரளயத்தின் முன்மாதிரியாய்
எல்லாம் நடந்து முடிந்தது.
இரத்தசாட்சி
சகோதரியே
நீ
வெடிகுண்டை உன் உடலின்
பாகமாக்கிய கணத்திலேயே
இந்த மண்ணிலிருந்து உனது வேர்கள்
அறுக்கப்பட்டுக் கொண்டிருந்ததை
உணர்ந்திருப்பாய்.
மனித அறிதலுக்கு உட்படாத உன்
உணர்வுகளை நீ
யுகங்களை விழுங்கி அவஸ்தைப்பட்டதை
புயலின் முன்னரான மேகக்கூட்டங்கள்
பேயோட்டமாய் காவிச்சென்றதடி.
1971ஏப்ரல்2004
சேய்!
என்னைத் தண்டித்துவிடு
உனது புதைகுழியை
தென்னமெரிக்கக் காற்றில் விதைத்து
புரட்சியின் குறியீடாய்ப் போனவன் நீ.
உன்முன் நான் மண்டியிடுகிறேன்
என்னைத் தண்டித்துவிடு, நான்
ஓர் இலங்கையனாய்ப் பிறந்ததிற்காய்.
வருக 2004 !
இன்னொரு புதுவருட வரவும்
நிகழ்த்தப்பட்டாயிற்று
உடல்நல உளநல விசாரிப்புகள்
மட்டுமன்றி
சமாதானம் அமைதி என்றெல்லாம்
வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டுமாயிற்று.
ஊரோவியம்
ஒரு கனவாவது கண்டுவிடவேண்டும்
என்
சிறுபருவ நாளொன்றை.
நாளும் பொழுதுமாய் அன்று நான்
இளந் து£ரிகை கொண்டு
வரைந்த
எம்ஊர்ச் சித்திரத்தை
இப்போதைய என் ஊர்சுற்றலாலும்
அழிக்கமுடியவில்லை.
பதினெட்டு ஆண்டுகளை
பனித்தேசத்தில் படரவிட்டு இப்போ
படர்ந்தும்போனேன்தான்.
ஆனாலும் எனது ஊர்
என்னிடம் ஓவியமானது.
தெருவிழா
எங்கள் வீதியில் இடையிடையே
தெருவிழா களைகட்டும்
அதில்
குரங்குகள் சில வீதியில்
வலம் வருவது வழமையாகிற்று
மலர்களை கசக்கி உதிர்த்து
விசிறி நடந்தன ஒய்யாரமாய்.
மலர்களை, மலர்மாலைகளை எறிந்து
களித்தின்புற்றனர்
மனிதர்கள் சிலர்.
குதூகலம் என்றுமாய்
சிரிப்பு கோபம் கத்தல் நளினம்… என
தெருவெல்லாம் தனதினதாய்
பெருமைகொண்டாடின குரங்குகள்.