எனது உடையில் ஓயில் மணத்தது
உடலை வியர்வை நனைத்திருந்தது
வேலையில் நான் ஓய்ந்துவிடாதபடி இயந்திரம்
என்னை இயக்கிக் கொண்டே இருக்கும்.
விரைந்துகொண்டிருந்தேன்
ஓடிக்கொண்டிருந்தேன்
Author: sudumanal
தோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி
சூரிச், சுவிஸ்
18.2.2007. ஞாயிற்றுக்கிழமை. நேரம் சுமார் 3 மணியைத் தாண்டியது. பகல் வெளிச்சத்தின் நுழைவுகளை தொடர்யன்னலினூடாக தாராளமாய் அனுமதித்திருந்தது அந்த மண்டபம். மண்டபத்தின் முன்பகுதியில் தேசபிதா தோழர் ரட்ணா என்று எழுதப்பட்ட எழுத்துக்களின் சொந்தக்காரனான இளையதம்பி இரத்தினசபாபதியின் நிழற்படம் சிவப்பு நிறத்துணியுடன் இசைந்துபோய் இருந்தது.
Continue reading “தோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி”
இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு?
துயரமான செய்தி. மீண்டும் ஒரு உயிர் தீயில் தன்னைக் கருக்கியிருக்கிறது. ஜெனீவாhவில் ஐநா சபைக்கு முன்பாக 12.02.2009 அன்று முருகதாஸ் என்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியிக்கிறான். போராட்டம் என்பதே வாழ்தலுக்கானது. வாழ்தலை அழித்துக்கொள்கிறபோது போராட்டம் என்பதற்கு என்ன பொருள்தான் வேண்டியிருக்கிறது. எனவே தற்கொலைகள் போராட்ட வழிமுறையாக கைக்கொள்ளப்படுவதற்கு எதிரான கருத்துநிலைகள் வலுப்பெற வேண்டும்.
வருந்தாதே கடலே
வருந்தாதே கடலே
உன் அடிமடி பிளந்து
வெளிப்பிரசவமாகிய சுனாமிப் பயங்கரம் உன்
முதுகுமீதேறி அதிசவாரிசெய்தது.
நாம் அறிவோம்
வருந்தாதே கடலே
நீர்திருகி அலைதிரட்டி எம் வாழ்வின்
குரல்வளைவரை தாக்கியது.
உயிரோடு நீருள் புதையுண்டனர் மனிதர்கள்
சிதைவுகளுள் சொருகுண்டனர்
தப்பிப் பிழைத்தவர்கள் உறவறுந்துபோயினர்.
கதறினர் நினைவுகளை வீசி
அவர்தம் வரவை கேள்விக்குறிகளால்
வரைந்து தள்ளினர்.
வலிதாங்க முடியவில்லை.
புனைவிட வாழ்வு
இன்றும் வீடுதிரும்புதல் சாத்தியமாகிப்போக
உறவுப் பார்வைகள்
அசைந்து முளைக்கின்றன.
வீதியில்
போர்வண்டி ஒலிதேய்ந்து மறைகிறது, இருளில்
பயத்தை விட்டுச் சென்றபடி.
“மால்கம் எக்ஸ் – என் வாழ்க்கை” நூல் அறிமுகம்.

“கூவர சுவாற்ஸ்” (ஊத்தைக் கறுப்பா) என்று அவன் பேசுகிறான். நான் கறுப்பா? பார் என்ரை நிறத்தை. பிரவுண். ஆபிரிக்கர்கள்தான் கறுப்பு என்கிறேன்;. சரியான பதிலாக திருப்தியடைகிறேன். வெள்ளைக்கார நண்பன் எனக்கான சான்றிதழொன்றைத் தந்து திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். “அவன் கறுப்புத்தான், ஆனால் மனசு வெள்ளை” என்கிறான். திருப்திப்படுகிறேன்.
Continue reading ““மால்கம் எக்ஸ் – என் வாழ்க்கை” நூல் அறிமுகம்.”
சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள்
அறிமுகமும், கலை இலக்கிய ஒன்றுகூடலும்
நேரம் 3 மணியை அண்மித்துக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கடைதெருக்கள் வேலைத்தலங்கள் ஓய்வுற்றிருந்ததால் வீதிகள் நெரிசலற்று சுமுகமாய்த் தெரிந்தன. சூரிச் மாநகரம் மெதுவாய் இயங்கியது. நாம் போல்க்ஸ் கவுஸ் இன் ஒரு நடுத்தர மண்டபத்துள் கூடுகிறோம். சிறிய சந்திப்பகளிலிருந்து பெரும் சந்திப்புகளை நடத்துவதற்கான மண்டபங்களைக் கொண்டது இந்த போல்க்ஸ் கவுஸ். தமிழ்க் கடைகள் அவ்வப்போது மலிவுவிற்பனை மண்டபமாக இதை மாற்றுவதுண்டு. இங்குள்ள தமிழர்களுக்கு மலிவு விற்பனை நடக்கிற இடம் என்று அறிமுகப்படுத்திவிடுவது சுலபமாகக்கூடப் போய்விடுகிறது. பெரும்திரளாய்க் கூடுவர்… போவர்…வருவர் மலிவுவிற்பனைக்கு.
நளாயினியின் “நங்கூரம்”
கவிதைத் தொகுப்பு -ஓர் அறிமுகம்
“புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்”
அந்த வீதியில்
நீயும் நானும்
நட்பாய்த் தெரிந்த
முகம் ஒன்று
நானோ நட்பாய்
சிரித்து வைத்தேன்
ஆனால் நீயோ
அவனைப் பார்த்து
என்ன சிரிப்பு
எனக் கூறியபோது
ஏனோ அதிகம்
இடிந்துபோனது
நம் காதல்தான்.
போரபிமானம்
அழிவுகளைக் கணக்கிட்டுக் கொள்ளும்
காலங்கள் இவை.
இராணுவவீரன் களைத்துப் போய் இருக்கிறான்.
குண்டுவீசி பெயர்த்த இடிபாடுகளின் நடுவே
இவன் ஒரு சிகரட்டையோ கட்டையோ ஊதியபடி
இளைப்பாறுகிறான்.
பதவிநடை பிசகாமல் அரசியல்வாதிகள்
ஒலிவாங்கி; நோக்கி நடக்கின்றனர்.
பத்திரிகையாளர்கள் குறிப்பெடுக்கின்றனர்.
அகதி அந்தஸ்து
அவன் கூரைமீது ஏறி நிற்கிறான்
அச்சத்தின் ஒரு முளைப்பாய்.
குளிர் குலைத்த அதிகாலைப் பொழுது
இரவு உடையில் அந்த குர்திஸ்காரன்.
கூடாய்த் தொங்கியது எமது
அகதிகள் முகாம்.
சுற்றிவர பொலிசார்
மோப்ப நாய்கள்