ஒவ்வொரு கணங்களையும் ஒரு யுக நீட்சியாய்
சப்பித் துப்பும் ஓர் பிசாசு வெளியில்
நீ நிறுத்தப்பட்டாய், இசைப்பிரியா.
செங்கோலர்களின் எல்லா அங்கீகாரங்களையும் சூடி
கொலைவெறி கொண்டலைந்த
பேய்களின் பாழடைந்த போர்மண்டபத்துள்
அகப்பட்டாய் நீ.
Author: sudumanal
போர்க்குற்றக் குரல்
பொதுநலவாய நாடுகளில் பங்காளிகளாக உள்ள நாடுகளில் கணிசமானவை இரத்தக்கறை படிந்த(யும்) நாடுகள்தான். ராஜபக்ச அன்ட் கோ அரசின் போர்க்குற்றங்கள் இம் மாநாட்டில் பிரஸ்தாபிக்கப்படுவது என்பது அதை எதிர்த்தல் என்று அர்த்தப்படாது. உண்மையில் அதன் கடினத்தன்மையை மென்மையாக மாற்றுதற்கே பயன்படும். Hard Image இனை Soft Image ஆக மாற்றும் ஒரு சம்பிரதாய அரங்கு. இலங்கை அரசு இதை நன்கு அறிந்தே வைத்துள்தால் அதை கோலாகலமாக நடத்த ஓடித்திரிகிறது.
சவாரி
எழுபதுகளின் இறுதிப் பகுதி. ரியூசன் கலாச்சாரம். சைக்கிள் மிதி. பருத்தித்துறையின் தம்பசிட்டி வீதியில் மாலை 5 மணியை முந்தியபடி நாம் (நேர விடயத்தில்) வெள்ளைக்காரர்களாய் இருப்போம். 5 மணியைத் தாண்டியால் நாம் வகுப்புக்குள் நுழைய முடியாது. கணித பாடத்தை „சாக்கர்“ நடத்த, சரியாக 5 மணிக்கு 5 நிமிடம் இருக்க -கால்நடையாக- கேற்றை வந்தடைவார். ஒருநாளுமே இந்த நியதி பிழைத்ததாக எனக்குத் தெரியாது.
வன்,மென் சக்திகள்
//வன்சக்திகள் மேலெழாத படிக்கு தமிழ் அரசியலில் மென்சக்திகளை அல்லது மென் சக்திகள் போலத் தோன்றும் மிதவாதிகளை பலப்படுத்த வேண்டும் என்பதே இப்போதைக்கு அனைத்துலக சமூகத்தின் தெரிவாகக் காணப்படுகிறது.// – நிலாந்தன்
இது ஒன்றும் புதிய விடயமல்ல. மிதவாதிகளை சர்வதேச அதிகார சக்திகள் கையாள்வது என்பது ஒரு வழிமுறையாக தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது. தமது நலன் சார்ந்து அந்தந்த நாடுகளை இயக்குவதற்கான வழித்தடத்தை மிதவாதிகளினூடுதான் அவர்கள் கண்டடைந்தார்கள். கண்டடைகிறார்கள். அவர்களது நலனை எதிர்த்து நின்ற சக்திகள் இல்லாதொழிக்கப்பட்டார்கள்.
சீற்றம்
சிவகாமி அவர்களின் உரையாடல் பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது ஆரோக்கியமான ஒன்று. தேவையானதும்கூட. அதே நேரம் அவரின் அந்த உரையாடல் காணொளிக்கு வந்திருக்கும் சில பின்னூட்டங்கள் பல அருவருப்பூட்டுபவையாக உள்ளன என்பதை கண்டுகொள்ளாமல் விடமுடியாது. அந்தவகைப் பின்னூட்டங்கள், நிலைத் தகவல்கள் தமிழ்த் தேசிய வெறியர்களினதும் ஒழுக்கவாதிகளினதும் “மனவளத்தை” வெளிப்படுத்துகின்றன.
சித்திரம் பேசுதடி..!
இலங்கை அரசியல் மனநிலையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் தமிழின உணர்வாளர்கள் மட்டுமல்ல, தமிழக புத்திஜீவிகளும் எந்தளவு புரிந்திருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வரும் கேள்வியாக உள்ளது. புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரதேசங்களில் நிழல் ஆட்சி புரிந்தபோது, ஆகா ஓகோ என உணர்வாளர்கள் (திரைப்பட இயக்குநர்கள், ஓவியர்கள், புத்திசீவிகள் என) தமிழகத்திலிருந்து படையெடுத்தவர்கள் அந்த நிழல் ஆட்சி பற்றி சித்திரம் வரைந்து பெருமிதப்பட்டனர். மக்கள் தரப்பிலிருந்து எதையும் கண்டுகொள்ளத் தவறினர்.
“செப்ரம்பர் பதினொன்று” வரலாற்று அதிர்ச்சி
இரட்டைக்கோபுரத்தாக்குதல் மீதான மதிப்பீடுகள் வெறுமனே, கொல்லப்பட்ட அப்பாவி மக்களோடு அல்லது பௌதீக அழிவுகளோடு அல்லது தீமை என்ற கருத்தியலோடு மட்டுப்பெற முடியாதவை. அது ஒரு குறியீட்டின் மீதான தாக்குதல். அதாவது உலக அதிகார ஒழுங்கின் மீதான, கேள்விகேட்கப்பட முடியாத அதிகார மையத்தின் மீதான -ஓர் எதிர்ப் பயங்கரவாத- தாக்குதல். அதனாலேயே உலக அதிகார சக்திகள் பதறிப் போயின. அந்த அதிர்வுகள் இன்னமும் அமைதியுறவில்லை.
Continue reading ““செப்ரம்பர் பதினொன்று” வரலாற்று அதிர்ச்சி”
நிழல் Hero ?!
கிட்லரின் „மைன் காம்ப்“ புத்தகம் அரசியலாளர்களால் நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நூல் என நினைக்கிறேன். தேசியம் பற்றிய ஆபத்தான பக்கங்களை புரிந்துகொள்ள அதுவும் ஒரு விதத்தில் பங்களிக்கிறது. பிரபாகரன் அரசியல் ரீதியிலோ அல்லது இராணுவ ரீதியிலோ கிட்லரால் ஆகர்சிக்கப்பட்டாரா அல்லது அவரை அதிலுள்ள கருத்துகள், அணுகுமுறைகள் பாதித்தனவா என்பதெல்லாம் முன்னாள் புலி உதிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என நான் நினைக்கவில்லை.அதேநேரம் அந்தக் கூற்றின் சாத்தியங்களையும் மறுத்துவிட முடியாது.