ஆகுமா?

இலங்கையின் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவுகள் என்கின்றனர் சிலர். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். தமிழர்கள் இந்தியாவின் தொப்பூழ்க்கொடி உறவு என்கின்றனர் சிலர். எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். இந்த குடிமக்கள் பெயர்ந்து இலங்கைத் தீவுக்கு வந்தபோது அல்லது இச் சிறுதீவு இயடு பிரிந்து இலங்கையானபோது இந்தியா என்றொரு தேசம் இருந்ததா என்ன.

Continue reading “ஆகுமா?”

விதைப்பு

thuthukkudi

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் தொடர் அராஜகமும் கோரமான சம்பவங்கள் மட்டுமே. காஸ்மீர் போல ஒரு போராட்டச் செயல்நெறி தொடர்ச்சியில் நடந்த நடக்கிற சம்பவத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. காஸ்மீரியர்கள் தம்மை இந்தியர்களாக அடையாளப்படுத்திய நாட்கள் கடக்கப்பட்டுவிட்டன. தமிழகம் அப்படியல்ல. தம்மை இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் உணர்கிற நிலையிலுள்ள சமூகம் அது.

Continue reading “விதைப்பு”

துயர ஓவியம்

புலிகள் அரசு இடையிலான இறுதிப்போரில் போரை ஆதரிக்கிறோம். இன்னும்மேலே போய் புலிகளை அழித்ததுக்கு இலங்கை அரசாங்கத்துக்கும் ராஜபக்சவுக்கும் நன்றியும் சொல்கிறோம்.

பிறகொருநாள் போருக்கு எதிராக பொதுமையாக குரல்கொடுக்கிறோம்.

*

புலிகள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்கிறோம்.

பிறகொருநாள் புலி அமைப்பிலிருந்த போராளிகள் குறித்து கவலைப்படுகிறோம்.

Continue reading “துயர ஓவியம்”

மெல்ல சொல்லிவிடு காற்றே !

புகலிட நாடுகளிலிருந்து விடுமுறை போலவொரு நினைப்புடனும், வாழ்ந்து திளைத்த மண் அதன் மனிதத் தொடர்புகள் என ஒரு கலப்பான அனுபவத்தை பெறும் அங்கலாய்ப்புடனும் இலட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை போய் வருகிறார்கள். மேற்குலக வாழ்வின் இயந்திரத்தனமான வாழ்வும், அந்தந்த நாட்டு சமூகங்களோடு தகவமையும் (integration) ஆற்றலின்மை மற்றும் காலநிலை தருகிற ஒருவித அந்நியத்தன்மையும் அவர்களுக்கு இவ்வாறான பயணத்தைத் தூண்டுகின்றன. அது புரிந்துகொள்ளப்படக்கூடியது.

Continue reading “மெல்ல சொல்லிவிடு காற்றே !”

பிம்பங்களைச் சிதைப்போம்

// ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் எல்லோருமே பிம்பக் கட்டமைப்புகள்தான். அவர்கள் சமூகம் குறித்து, விடுதலை குறித்து, பொருளாதாரம் குறித்து, சுற்றுச்சூழல் குறித்து, சமூகவிடுதலை குறித்து, தத்துவம் குறித்து, வரலாறு குறித்து தீவிரமாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பேசிய, எழுதிய, பேட்டியளித்த கருத்துகளை கண்டடைய முடிவதேயில்லை.//  – 06.05.18, FB

இந்த முகநூல் குறிப்பு இயக்கத்தை அகநிலையில் வைத்துப் பார்த்து எழுதப்பட்ட ஒன்று. இதற்கு வந்திருந்த பக்குவமான பின்னூட்டங்கள் ஒரு விரிவான பதிவை செய்ய வைத்திருக்கிறது.

Continue reading “பிம்பங்களைச் சிதைப்போம்”

வாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16

(22.04.2018) – சூரிச், சுவிஸ்)

 

* * *

பதிவு

பனிப்பாளங்கள் பிரிந்து எழுந்த கள்ளச் சூரியன் பனிவிலகிப்போன நாட்களில் கதிர்வீசி ஒளியை கொட்டிக்கொண்டிருந்தது. இருந்தும் புத்தகத்துடன் நாம் மண்டபத்துள் நடந்தோம். வாசிப்பும் உரையாடலும்-16 வது நிகழ்வில் அரவாணிகள் தொகுப்பு நூலும் வாடாமல்லி நாவலும் எம்மோடு உரையாட அழைத்த நாள் அது. வா.உ இன் செயற்குழுவினர் மூவரும் ஏலவே வந்து மண்டபத்தை புரட்டிப் போட்டிருந்தனர். அவர்களிடம் மண்டப திறப்பு மட்டுமல்ல நிகழ்ச்சியின் திறப்பும் இருந்ததை உணர முடிந்தது.

Continue reading “வாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16”

கிவிதை

வானவில்லொன்று விழுந்துகிடப்பதாய்
அதை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர் அவர்கள்.
முற்றத்தில் வீழ்ந்து கிடந்த அந்த வானவில்லை குழந்தை
நிறநார்களாய்க் கிழித்துப் போட்டுக்கொண்டிருந்தது.
பிஞ்சுக் கைகள் அளைந்த நிறங்கள்
முகத்திலும் சிதறிட
ஓவியமாகிவிட்டிருந்தது குழந்தை.
எரியுண்ட வாழ்வின் நிறங்கள் கருகுண்டு
நாட்கள் பட்டுப்போயிருந்தன.
நிறமற்றுப்போன முகங்களுடன்
குடிசையின் வாசல்களில் திண்ணைகளில்
அவர்கள் இருந்தார்கள்.
இன்று இந்த முற்றத்தில்
நிறங்களை சிந்திவிளையாடும் குழந்தைக்குள்
அவர்கள் புகுந்துகொண்டார்கள்.
இன்றைய இரவில் நான் ஒரு கவிதையை எழுதிட வேண்டும்.
“ஒரு கவிதை கிவிதையைத்தன்னும் எழுதித்தா” என்றவனின் தொல்லை இனியாவது இல்லாமலாகிட வேண்டும்.
அதற்கான கனவுடன் நான் உறங்கியிருந்தபோது
எனது கனவோ தனக்கான கனவை தேடிக்கொண்டிருந்தது.
கனவின் கனவோ குயில்களின் இசைப்பில் கரைந்தழிகிற
அதிகாலை இருளை காண ஆசைப்படுகிறது.
ஆனாலும் காகங்கள் கரைகிற காலைதான்
தனக்கான கனவில் திரும்பத் திரும்ப வருவதால்
எனது கனவு என்னை குப்புறப் படுத்து
தொடர்ந்து தூங்கும்படி மன்றாடியது.
அப்படியேதான் கிடக்கிறேன், குப்புற!
(april2016)

ரத்தம் விற்பவனின் சரித்திரம்

– இலக்கியமும் அரசியலும்

Yu Hua nool

“தலைவர் மாவோ பேசத் தொடங்கினார். தலைவர் மாவோ பெரும்பாலும் எல்லா நாட்களும் பேசினார். நாம் ஆயுதம் கொண்டல்ல, வார்த்தைகள் கொண்டுதான் போராட வேண்டும் என்று சொன்னபோது எல்லோரும் கத்தியையும் கம்பையும் கீழே வைத்தார்கள். நாம் புரட்சியை வகுப்பறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னபோது யீலியும் ஏளும் ஸான்லியும் புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றார்கள். புரட்சி உற்பத்திக்கு உதவ வேண்டும் என்று தலைவர் மாவோ சொன்னபோது ஸன்க்வான் பட்டுத் தொழிற்சாலைக்குச் சென்றான்.  யுலான் பலகாரம் செய்வதற்காக தினமும் காலையில் வேளைக்கே எழுந்துசென்றாள். யுலானின் முடி மீண்டும் நீண்டு வளர்ந்து காதுகளை மூடுமளவுக்கு வந்தது.”  ( பக்.216)

அன்றைய சீன அரசியல் சூழலில் கதைமாந்தர்களான ஒரு குடும்பத்தின் அசைவியக்கம் இது. இந்த நாவல் ஓர் அரசியல் நாவல் என்ற வகைமைக்குள் தன்னை பொருத்திக்கொள்கிறது.

Continue reading “ரத்தம் விற்பவனின் சரித்திரம்”

அஞ்சலி !

AEManoharan
தமிழ் சிங்கள மொழிகளிலான ஈழத்து பொப் இசையின் எழுச்சி இளைஞர்களின் உளவியல் தளத்தினை மேடையாக்கியதில் வெற்றிகண்டது. எமது சமூகத்தின் -குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின்- கட்டுப்பெட்டித்தனமான வாழ்க்கை முறைகளால் துள்ளலான மனவியல்புகள் அடக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக இளமையின் துடிதுடிப்புக்கும் வெளிப்படுத்தலுக்கும் எதிராக அது இருந்தது / இருக்கிறது. இந்த அமுக்கப்பட்ட துடிப்பான மனவியல்பை ஊடுருவி வெளிக்கொணர்ந்ததில் ஈழத்து பொப் இசைக்கு மறுக்கமுடியாத வரலாற்றுப் பாத்திரம் உண்டு.

Continue reading “அஞ்சலி !”

மாற்றுத்திறனாளிகள்

சொற்கள் நேரடி அர்த்தத்தை மட்டும் தருபனவல்ல. அது (வேண்டுமென்றே) சொல்லப்படாத அல்லது தவிர்த்துவிடுகிற அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். சிலவேளைகளில் இந்த அர்த்தம் நேரடி அர்த்தத்தைக்கூட மறுதலிப்பதாக இருக்கவும் செய்யும்.
மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லாடல் எதிர்மறையில் “அவர்கள் உடல் அல்லது உள ரீதியில் இயலாமையுடைவர்கள். அவர்களிடம் மிகுதியான மனித இயல்புகள் திறமைகள் கனவுகள் இருக்கின்றன என்ற பொருளைக்கூடச் சுட்டவில்லை.

Continue reading “மாற்றுத்திறனாளிகள்”