“நேற்றோ” விஸ்திரிப்பு வாதத்தை ரசிய எல்லைவரை வழிநடத்தி உக்ரைனை இந்த நிலைக்குக் கொண்டுவந்த அமெரிக்கா இன்று உக்ரைனை கைவிட்டிருக்கிறது. அதற்கான காரணங்கள் ஒரு வல்லரசின் நலனிலிருந்து எழுபவை. அதை “அமெரிக்கா துரோகம் இழைத்துவிட்டது, யூ ரேர்ண் அடித்துவிட்டது” என்பதெல்லாம் அரசியல் விளக்கமல்ல. உக்ரைன் அதற்கு பலியாகிப் போனதுதான் பெருந் துயரம்.
Continue reading “பூகோள அரசியல் நகர்வில்”Month: March 2025
சமாதான தேவதையும் போர்ப் பிசாசும்!
கடந்த வெள்ளியன்று (28.02.2025) அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுக்கும் ட்றம் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவர்களுக்கும் இடையில் யாரும் எதிர்பாராத விதத்தில் விவாதம் முற்றியது. இது பேசப்படும் பொருளாக ஊடகங்களிலும் அரசியலாளர்களிடமும் புத்திஜீவிகளிடமும் மாறியிருந்தது. இது ஏதோ அந்த இடத்தில் தோன்றிய முரண்பாடாகத் தெரியவில்லை. இதற்கு முன்னராக மூடிய அறைக்குள் தொடங்கிய ஒன்றாகவே கருத இடமுண்டு.
Continue reading “சமாதான தேவதையும் போர்ப் பிசாசும்!”