கால்பந்துக்கு அதிக முக்கியத்துவம் நிலவும் நாடுகள் இவை. மற்றைய விளையாட்டுகள் போலவே ஆண்களும் விளையாடுகிறார்கள். பெண்களும் விளையாடுகிறார்கள். ஆங்கிலத்தில் Team என்பதை டொச்சில் Mannschaft என்பார்கள். Mann என்பது ஆண். இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.
வீதியை குறுக்காய்க் கடக்கும் மஞ்சள் வரிக் கோட்டுப் பாதைக்கு ஆங்கிலத்தில் Zebra-cross என்பார்கள். அதை டொச்சில் Fussgängerstrifen என்பார்கள். Fussgänger என்பது ஆண்பால் சொல்.(Fussgängerin என்பது பெண்பால் சொல்). இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.