மௌனத்தை நேசித்தல்

 

ஒவ்வொரு நுனித்தலும் காற்றில்
புதையும்வரையான வியாபித்தலில்
உடல்பெயர்த்து பரவுகிறது என்
நரம்புகள்.
கூண்டினுள் மனிதன் அடைபட
மனிதம் எல்லையற்றுக் குலாவும்
குழந்தைப் பொழுதில் நாம்
திளைத்திருந்தோம்.
எம்மைச் சுற்றிய உலகம் பற்றி
கவலைப்படாதிருந்தோம்.
பேசினோம் குழந்தைபோல்
சிரித்தோம்
மனசை உழுதோம்
வார்த்தைகள் கிளறி.

Continue reading “மௌனத்தை நேசித்தல்”