கடந்த வாரம் சுவிஸ் தொலைக்காட்சி போலித் துவாரகா விவகாரம் பற்றிய செய்தியை (Rundschau programme) ஓர் ஆவணப்பட வடிவில் வெளியிட்டது. துவாரகா என்ற பெயரோடு 2023 மாவீரர்தின உரை ஆற்றியிருந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, அவர் ஒரு ஏமாற்றுக்காரியாகவும் அவரை நம்பி தாம் பணத்தை பறிகொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்கள் சிலர் கூறியதை வெளிப்படுத்தியது. அதில் வரும் ஒரு தமிழர் தான் 380’000 பிராங்குகளை அவருக்கு கொடுத்ததாகவும் இன்னொருவர் தான் 70’000 பிராங்குகளை கொடுத்ததாகவும் சொல்கிறார். முதலாமவர் அந்த இலட்சக்கணக்கான பணத்தை ஒரு சாதாரண தொழிலாளியாக நேர்மையாக உழைத்து சேமிப்பது என்பது அவரது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சாத்தியப்பட முடியாத ஒன்று. அத் தொகை அவர் தமிழர்களிடம் சேர்த்த பணமாக இருக்கவே சாத்தியம் உண்டு.
Continue reading “சுவிஸ் தொலைக்காட்சியில் ‘துவாரகா’”Category: கட்டுரை
பாதங்களை வைக்குமா?
உக்ரைன் மீதான ரசியப் போரில் புட்டின் மீது போர்க்குற்ற விசாரணைக்கான பிடிவிறாந்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அறிவித்தபோது அது “நீதியான தீர்ப்பு” என வரவேற்ற அமெரிக்கா, இப்போ நெத்தன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கலன்ற் இருவருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்காக அதே நீதிமன்றம் பிடிவிறாந்தை அறிவித்தபோது அந்தத் தீர்ப்பை “அநீதியானது, ஏற்றுக்கொள்ள முடியாதது” என அறிவிக்கிறது. இவர்களோடு சேர்த்து மூன்று ஹமாஸ் தலைவர்களுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து அறிவித்துள்ளது.
Continue reading “பாதங்களை வைக்குமா?”ஆதரிப்போம் !
கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐநா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலாதிக்க நலனையும் நயவஞ்சகத்தையும் உள்நிறுத்தி அரசியல்வாதிகளும் அரசும் பேசும் ஜனநாயகம் வார்த்தை ஜாலங்களாக தொடர்கின்றன. மக்கள் வீதிக்கு இறங்கி பெரும் ஊர்வலங்களை நடத்தியும் பார்த்தார்கள். எல்லா இயலாமைகளும் கடைசியில் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட நிலைதான் இன்றைய காட்சிகள்.
Continue reading “ஆதரிப்போம் !”செங்கடல் தீ
ஏடன் வளைகுடாவும் மத்திய கிழக்கின் செங்கடல் பகுதியும் இணையும் எல்லை 32 கி.மீ அகலத்தைக் கொண்ட மிக ஒடுங்கிய பகுதியாக அமைந்தள்ளது. இது சுயஸ் கால்வாய்க்கு செல்லும் பாதையும் ஆகும். இந்த ஒடுங்கிய முனைவாயிலை யேமன் நாடு முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பாதைவழி உலக உணவுத் தேவையின் 60 வீதம் கப்பல் போக்குவரத்தினூடாக நடைபெறுகிறது. அதைவிட மூன்றில் இரண்டு பங்கு எரிபொருள் கொள்ளளவை தாங்கிச் செல்லும் கப்பல்களும் இதனூடாகவே பயணிக்க வேண்டியிருக்கிறது. அத்தோடு ஆசியாவையும ஐரோப்பாவையும் இணைக்கும் கடல்வழிப் போக்குவரத்து இதனூடாகவே நடைபெறுகிறது. இந்தக் காரணங்களால் உலகப் பொருளாதாரத்தின் இரத்தோட்டமாக இந்த கடல்வழி அமைந்திருக்கிறது என விபரிக்கப்படுகிறது.
Continue reading “செங்கடல் தீ”Enough is Enough !
image : Spiegel.de
நீஜரில் யுரேனியம், தங்கம் போன்ற கனிம வளங்களை அகழும் பிரான்ஸ் கம்பனியைத் தடைசெய்த நீஜர் அரசு தாமே உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது. யுரேனியத்துக்கான ஏற்றுமதி விலையை உலக சந்தையின் பெறுமதி “200 யூரோ/கிலோ” க்கு உயர்த்தியுள்ளது. இது கனடாவின் யுரேனிய ஏற்றுமதிப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்ட விலை நிர்ணயம் ஆகும்.
Continue reading “Enough is Enough !”நைஜரின் ஒளிரும் யுரேனியம்
நைஜர் (Niger) என்ற நாடு நைஜீரியா, சாட், அல்ஜீரியா, மாலி, புர்கீனோ பாஸோ, லிபியா, பெனின் நாடுகளுடன் எல்லையைக் கொண்டது. 27 மில்லியன் சனத்தொகை உள்ள நாடு நைஜர். யுரேனியம், தங்கம், பிளாற்னம் போன்ற இயற்கை வளங்களைக் கொண்ட நாடு அது. ஆனால் அதை அவர்கள் அனுபவித்ததில்லை. வறுமையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யுரேனியத்தில் இயங்கும் பிரான்ஸின் அணுஉலைகள் பிரான்சுக்கான மின்சாரத்தை மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மின்சாரத்தையும் உருவாக்குகின்றன. பிரான்சுக்கான தேவையின் மூன்றிலொரு பகுதி மின்சாரத்தை நைஜர் யுரேனியம் வழங்குகிறது. பிரான்ஸ் முழுவதும் மின்சாரம் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க, நைஜரில் 20 வீதமளவுக்குக்கூட மின்சாரம் பூத்ததில்லை. யுரேனியத்தை அகழ்ந்து கொண்டுவரும் பிரான்சின் ஈபிள் கோபுரம் இரவில் வால்நட்சத்திரமாக ஒளிர்ந்திருக்க, யுரேனியத்தை புதையலாக வைத்திருக்கும் நைஜர் நிலம் இரவில் சிறிய ஒளிக்கீற்றால் மட்டும் கீறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Continue reading “நைஜரின் ஒளிரும் யுரேனியம்”பிரான்ஸை உலுக்கும் தீ
கலவரமும் காட்சிப் பிழையும்!
பிரான்சில் கடந்த செவ்வாயன்று இளைஞன் நகேல் கொல்லப்பட்டதிலிருந்து தோன்றிய கலவரம் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளை மட்டுமன்றி 20 க்கு மேற்பட்ட வேறு நகரங்களுக்கும் பரவியிருக்கிறது. அது நேற்று இரவு சுவிற்சர்லாந்தின் லொசான் நகரத்திலும் அதே வடிவில் வெளிப்பட்டது. ஆனாலும் அது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுவிஸ் பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்தக் கொலைக்கு எதிராக பெல்ஜியத்தில் கடந்த 30ம் தேதி அமைதியான பெரும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.
Continue reading “பிரான்ஸை உலுக்கும் தீ”வாழைப்பழ அரசியல்
வாழைப்பழத்தின் பூர்வீகம் தெற்கு,தென்கிழக்கு ஆசியா என சொல்லப்படுகிறது. கரப்பா காலத்தின் கி:மு 3000-2500 தொல்பொருள் சான்றுகள் இதை நிரூபித்திருக்கின்றன. போத்துக்கீச, ஸ்பானிய காலனியவாதிகள் இதை தென்னமெரிக்கா மத்திய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு காலநிலைப் பொருத்தம் கருதி எடுத்தச்சென்றனர் என சொல்லப்படுகிறது. அதில் தொடங்கிய அதன் அரசியல் இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய கனவுகளுக்கும் தீனி போட்ட வரலாறு இது.
Continue reading “வாழைப்பழ அரசியல்”புலம்பெயர் இலக்கியம்
ஒரு பார்வை
அண்மைக் காலமாக தமிழில் புலம்பெயர் இலக்கியம் குறித்த கேள்விகள் வரைவுகள் அதிகம் பேசப்படுவனவாக மாறியுள்ளன. தமிழகத்தில் முதலில் அதாவது 90 களின் முற்பகுதியில் புலம்பெயர் இலக்கியத்தை அறிமுகமாக்கிய வரலாற்றுத் தொடக்கம் நிறப்பிரிகை குழுவுக்கே உள்ளது என நினைக்கிறேன். 1996 இல் பாண்டிச் சேரியில் ஒரு சந்திப்பில் புலம்பெயர் இலக்கியம் என்பது புலம்பெயர்ந்த தமிழக மக்களை உள்ளடக்காதா என ரவிக்குமார் கேட்டிருந்தார். அது இப்போ பலரும் எழுப்புகிற கேள்வியாகியிருக்கிறது புலம்பல் இலக்கியம் என தமிழக எழுத்தாளர்கள் சிலராலும் ஈழத்து எழுத்தாளர்கள் சிலராலும் அப்போ எள்ளிநகையாடப்பட்ட காலகட்டம் அது. இன்று அது பேசப்படும் பொருளாக மாறியிருக்கிறது. அண்மைக் காலமாக அதன் வரையறைகளை கேள்விக்கு உள்ளாக்குகிற, எல்லைகளை விசாலிக்கிற கருத்துக்கள் மேலெழுந்திருப்பது வரவேற்கக் கூடியதுதான். மாறாக அதை ஒரு சர்ச்சையாகப் பார்க்க வேண்டியதில்லை. இதில் என் தரப்பிலான கருத்தை இங்கு முன்வைக்கிறேன். அவ்வளவுதான்.
Continue reading “புலம்பெயர் இலக்கியம்”குரங்கின் கதை
இலங்கை அரசு சீனாவுக்கு முதற் கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய இருப்பதான செய்தி தற்போதைய பேசு பொருளாகியுள்ளது. சீனா வாங்குகிறது என்றதுமே இறைச்சிக்காகத்தான் என தலைக்குள் எழும் சித்திரம் சரியானதா என்ற கேள்வி இருக்கிறது. எனது ஞாபகம் சரியானால், இலங்கையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் குரங்கு இறைச்சியை விடுதி மாணவர்களுக்கு சமைத்துக் கொடுத்தது தெரியவந்து பரபரப்பாக பேசப்பட்டது. மான் இறைச்சிபோல் மிருதுவானதாக இருந்ததால் மாணவர்கள் இதற்கு “தொங்கு மான்” இறைச்சி என ஒரு பெயரை சூட்டினார்கள். எனவே இறைச்சிக்கான ஏற்றுமதி என ஒரு சாரார் நினைப்பதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ளவும் முடிகிறது.
Continue reading “குரங்கின் கதை”








