Dr. Gabor Mate
Continue reading “நான் உண்மையின் ஆதரவாளன்!”ஹங்கேரியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த “கபோர் மற்றே” (Gabor Mate) அவர்கள் “கொலோகாஸ்ற்” படுகொலையிலிருந்து தப்பிய ஒரு 5 மாதக் குழந்தை. 1944 இல் பிறந்த அவர் இப்போ கனடாவில் உளச்சிகிச்சை வைத்திய நிபுணராக இருக்கிறார். இது குறித்த தனது ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை 5 நூல்களை எழுதியுள்ளார். அவரது குடும்பம் கொலோகாஸ்ற் படுகொலைக்கு இரையான தாக்கம் அவர் இத் துறையை தேர்ந்தெடுக்க வைத்ததோடு அதற்குள் ஆழமாகப் போகவும் செய்தது. அவர் ஒரு அரசியலாளர் அல்ல. இன்றைய இஸ்ரேல்-காஸா நிலைமைகள், அதன் பின்னணி குறித்து முன்வைக்கும் அவரது கருத்துகள் வேறொரு தளத்தில் இருப்பதால் இதை மொழிபெயர்த்திருக்கிறேன்.
Russell Brand அவர்கள் நடாத்தும் இணைய ஒளிபரப்பில் Under The Skin என்ற நிகழ்ச்சியில் Dr.Gabor Mate அவர்கள் முன்வைத்த கருத்துகள் இவை.
